"ரஞ்ஜிதமே..ரஞ்ஜிதமே" பாடல்கள் வைப் செய்ய மட்டும் இல்லை.. பக்கவாதத்தில் இருந்தும் குணப்படுத்துமாம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பக்கவாதம் காரணமாக ஆண்டுக்கு நாம் பல ஆயிரம் பேரை இழந்து வரும் நிலையில், அதற்கு இசை சிகிச்சையை வழங்குவது குறித்து டெல்லி எய்ம்ஸ் ஆய்வு நடத்தி வருகிறது.

உலகில் அதிக இறப்புகளை ஏற்படுத்தும் காரணிகளில் இரண்டாவது இடத்தில் பக்கவாதம் இருக்கிறது. அதேநேரம் ஊனம் மற்றும் உயிரிழப்பு எனச் சேர்த்தால் பக்கவாதம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

How doctors are using to treat Brain stroke by singing songs

பக்கவாதம்: பக்கவாதம் மூளை பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், அஃபாசியா என்ற பாதிப்பும் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களால் சரிவரப் பேச முடியாது. பேச்சுத் திறன் கடுமையாகப் பாதிக்கப்படும். 21-38 சதவீத பக்கவாத நோயாளிகளுக்கு இந்த அஃபாசியா பாதிப்பு ஏற்படுவதாக எய்ம்ஸ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதேநேரம் தொடக்கக் காலத்திலேயே இதைக் கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சை அளித்தால் இதில் குணமடைய முடியுமாம்.

அதேபோல இதற்கு இசை சிகிச்சையையும் பயன்படுத்துகிறார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்டோரை மீண்டும் சரளமாகப் பேச வைக்க இசை சிகிச்சை அளிக்கிறார்கள். உலகின் பல பகுதிகளிலும் இசை சிகிச்சை பயனுள்ளதாக இருப்பதை நிரூபித்துள்ளனர். அதேநேரம் இந்தியாவில் இதுபோல இசை சிகிச்சை அளிக்க வசதிகள் இல்லை என்பதைக் குறையாகவே இருந்தது.

இலவசம்: இதற்கிடையே இந்த குறையைப் போக்க டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம் டெல்லி ஐஐடி உடன் இணைந்துள்ளது. இந்த நோய்ப் பாதிப்பால் சிரமப்படும் நோயாளிகளின் பேச்சை மீட்டெடுக்கத் தேவையான சிகிச்சை உத்திகளின் இந்த இரு கல்வி நிறுவனங்களும் இணைந்து உருவாக்க உள்ளது. ஐசிஎம்ஆர் நிதியுதவியின் கீழ் இது அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "அஃப்சியா ஏற்படும் போது நோயாளியின் மூளையின் இடது பகுதி முழுமையாகச் செயலிழந்து போகும். அதேநேரம் மூளையின் வலது பகுதி வழக்கம் போல வேலை செய்யும். வலது பக்க மூளை வேலை செய்வதால் நோயாளி இசையைப் புரிந்துகொள்வது மட்டுமல்லாமல் அதன் ட்யூன்களையும் மீண்டும் ஹம் செய்யவும் முடியும். இதுவே சிகிச்சையின் அடிப்படை.

சிகிச்சை என்ன: ஒரே ஒரு வார்த்தையைக் கூட அவர்களால் சொல்ல முடியாது என்ற போதிலும் அவர்களால் முழு இசையையும் ஹம் செய்ய முடிகிறது. எனவே, இந்த மியூசிக் தெரபி மூலம் நோயாளியின் வலது பக்கத்தை ஆக்டிவேட் செய்து அவருக்கு ட்யூனை புரிந்து கொள்ளவும் அதை அப்படியே ஹம் செய்யவும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் காலப்போக்கில் அவர்களால் பேசவும் முடியும்" என்கிறார்கள்.

குண்டா இருக்கீங்களா.. "கிரீன் டீ" குடிப்பது நல்லது ஓகே.. ஆனா உடல் எடை குறையுமா? பிரச்னை எதாவது வருமா


பக்கவாதம் என்பது பல ஆயிரம் மரணங்களை ஏற்படுத்தினாலும் கூட அது எளிதாகத் தடுக்கக் கூடிய ஒன்றாகவும் சிகிச்சை அளிக்கக்கூடிய ஒன்றாகவுமே இருக்கிறது. ஆனால், இது குறித்து விழிப்புணர்வு இல்லாததால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரிக்கிறது. வரும் 2050ஆம் ஆண்டில் சுமார் ஒரு கோடி பேர் பக்கவாதத்தால் உயிரிழப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது. இதனால் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இதன் சிகிச்சை முறைகளை மேம்படுத்தவும் வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்தே வருகிறது.

2020ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் பக்கவாதம் காரணமாக உயிரிழக்கிறார்கள். வரும் 2050ஆம் ஆண்டில் இது ஒரு கோடியை எட்டும் என்றும் குறிப்பாகக் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இது மிகப் பெரிய பிரச்சினையாக மாறும் என்று அஞ்சப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+