"ஆண்களே ஜாக்கிரதை.!" சத்தமின்றி இந்தியர்களை தாக்கும் மோசமான கேன்சர்.. ஆண்களுக்கு பாதிப்பு அதிகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நமது நாட்டில் இப்போது ஒரு வகை புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாகப் பெண்களைக் காட்டிலும் இந்தியாவில் ஆண்கள் மத்தியில் இது அதிகம் ஏற்படுகிறது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

நமது நாட்டிலும் இப்போது கேன்சர் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சில வகை புற்றுநோய்கள் குறித்து விழிப்புணர்வு இருந்தாலும் கூட, பெரும்பாலான புற்றுநோய்கள் குறித்து இங்கே போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை.

 How lifestyle changes are raising Head and neck cancers rising in India

இதில் முக்கியமானது தலை மற்றும் கழுத்து புற்றுநோயாகும். இந்தியாவில் இந்த தலை மற்றும் கழுத்து புற்றுநோய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கேன்சர்: உலகளவில் பார்க்கும் போது இது ஆறாவது மிகவும் பொதுவான கேன்சராகும். குறிப்பாக ஒட்டுமொத்தமாகப் பதிவாகும் கேஸ்களலி் 57.5 சதவீதம் ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கேன்சர் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், வரும் 2040க்குள் இது 50-60 சதவீதம் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

இந்திய ஆண்களிடையே அதிகம் ஏற்படும் கேன்சராக இது இருக்கிறது. அதேபோல இந்தியப் பெண்களிடையே ஏற்படும் கேன்சர்களில் இது 4ஆவது இடத்தில் இருக்கிறது. குறிப்பாக 60, 70களில் இருப்போருக்குத் தான் இது அதிகம் ஏற்படுகிறது. அதேநேரம் 20-50 வயது வயதுடையவர்களுக்கும் சுமார் 24.2-33.5% வரை இந்த வகை கேன்சர் ஏற்படுகிறது.

மேலும் சிக்கலானதாக மாற்றும்: மாறிவரும் வாழ்க்கை முறை, புகையிலை மற்றும் மதுவுக்கு அடிமையாவது, முதுமை ஆகியவை இதன் முக்கிய காரணங்களாகும். மேலும், இந்த கேன்சரின் இயல்பு, இது ஏற்படும் தலை மற்றும் கழுத்து பகுதியில் பயாலஜிக்கல் சூழல் ஆகியவை இதை மேலும் மோசமானதாக மாற்றுகிறது. மனித உடலின் ஒரு முக்கிய பகுதியாக இருக்கும் இங்கே கேன்சர் ஏற்படுவது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

இதில் இருந்து குணமடைந்த பிறகும் கூட பேச்சு மற்றும் விழுங்குவதில் சிக்கல் இருக்கும். மற்ற கேன்சர்களை காட்டிலும் மோசமானதாக இருந்தாலும் தலை மற்றும் கழுத்து கேன்சர் குறித்த போதிய விழிப்புணர்வு இந்தியர்கள் மத்தியில் இல்லை. இதனால் சுமார் 60-70% இந்தியர்கள் கேன்சர் மோசமான பிறகே சிகிச்சைக்கு வருகிறார்கள்.

என்ன காரணம்: இந்த கேன்சர் எதனால் ஏற்படுகிறது என்பதை நாம் புரிந்து கொண்டால் இதை நாம் ஓரளவுக்குக் குறைக்கலாம். புகையிலை, மது, பான் மசாலா ஆகியவை இந்த கேன்சருக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும், உணவு ஊட்டச்சத்துக் குறைபாடும் இந்த கேன்சர் ஏற்படக் காரணமாக இருக்கிறது. குறிப்பாகப் புகையிலை மற்றும் மது அதிகம் எடுத்துக் கொள்வோருக்குத் தலை மற்றும் கழுத்து புற்றுநோய் ஏற்பட 35 மடங்கு அதிக ஆபத்து உள்ளது.

வைட்டமின்கள் ஏ, சி, ஈ, இரும்புச் சத்து, செலினியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை குறைபாடாக இருந்தால்.. அதுவும் இந்த வகை கேன்சர் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கும். அதிக உப்பு சேர்க்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்ட உணவுகள், வறுக்கப்பட்ட இறைச்சி மற்றும் உறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகம் சாப்பிடுவதும் இந்த வகை கேன்சரை ஏற்படுத்தும் அதிக ஆபத்து இருக்கிறது.

கேன்சர்: மரபணு மாற்றங்களும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ஏற்கனவே குடும்பத்தில் யாருக்காவது இந்த தலை மற்றும் கழுத்து கேன்சர் இருந்தால் இது ஏற்படும் ஆபத்து 3.5-3.8ஆக உள்ளது. அதேபோல குடும்பத்தில் பலருக்கும் இந்த வகை கேன்சர் இருந்தால் அது ஏற்படும் ஆபத்து 8 மடங்கு அதிகரிக்கிறது.

ஆறாத வயிற்றுப் புண்கள், திடீர் வளர்ச்சி, குரல் மாற்றம், விழுங்குவதில் சிரமம் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். இருப்பினும், மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் இந்த அறிகுறிகளை மிகவும் தாமதமாகவே உணர்கிறார்கள். நோய் குறித்த பயம், அறியாமை, போதிய மருத்துவ இல்லாமல் போவது ஆகியவை நோய் கண்டறிவதைத் தாமதப்படுத்துகிறது.

சமீப காலங்களில் மருத்துவத் துறையில் வந்த மாற்றங்கள் இதன் சிகிச்சை முறையை மேம்படுத்தியுள்ளது என்பது நல்ல செய்திதான் என்றாலும், கடந்த சில ஆண்டுகளாகவே இதன் உயிரிழப்பு விகிதம் குறையவில்லை என்பது வேதையான விஷயம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+