நான் வெஜ் நல்லது தான்.. ஆனால் வாரத்திற்கு அதிகபட்சம் எத்தனை முறை சாப்பிடலாம்! மருத்துவர்கள் விளக்கம்
சென்னை: இன்றைய காலகட்டத்தில் நாம் அசைவ உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்கிறோம். பலர் தினசரி கூட சிக்கனை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், வாரத்திற்கு எத்தனை முறை ஒருவர் அசைவ உணவை எடுத்துக் கொள்ளலாம்.. அதிகபட்சம் எவ்வளவு கிராம் எடுத்துக் கொள்வது நமக்குப் பாதுகாப்பானது என்பது குறித்துப் பார்க்கலாம்.
முன்பெல்லாம் அசைவம் என்பது அரிதாகவே எடுத்துக் கொள்ளப்படும் உணவாகவே இருந்தது. தீபாவளி அல்லது வீட்டில் யாருக்காவது பிறந்த நாள் என கொண்டாட்டம் என்றால் மட்டுமே வீட்டில் அசைவம் எடுத்து சமைப்பார்கள்.

Image: AI created
அசைவம்: ஆனால், இப்போது அசைவம் எடுத்துச் சமைப்பது கணிசமாக அதிகரித்துள்ளது. பணவீக்கத்துடன் ஒப்பிடும் போது சிக்கன் விலை பெரியளவில் உயர விலை. இதனால் மக்கள் இப்போது அதிகளவில் சிக்கன் சாப்பிடத் தொடங்கியுள்ளனர். சிலருக்கு எல்லாம் தினசரி சிக்கன் இல்லை என்றால் சாப்பாடே இறங்காது என்று கூட இருப்பார்கள். ஆனால், உண்மையில் ஒருவர் வாரத்திற்கு அதிகபட்சம் எவ்வளவு அசைவ உணவு சாப்பிட வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
அதற்கு முன்பு முதலில் ஏன் நாம் அசைவ உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்பதற்கான பதிலைப் பார்க்கலாம். நமது உடலுக்குத் தேவையான புரதச் சத்துகள் அசைவ உணவுகளில் தான் எளிதாகக் கிடைக்கும். ஒரு கிலோவுக்கு 0.83 கிராம் புரதம் நமக்குத் தேவைப்படும். அதாவது ஒருவர் 65 கிலோ எடை கொண்டவராக இருந்தால் அவருக்கு 54 கிராம் புரதம் தேவைப்படும்.
அமினோ ஆசிட்கள்: இதில் நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அதாவது நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் 9 அடிப்படை அமினோ ஆசிட்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பொதுவாக அசைவ உணவு சாப்பிடுவோருக்கு இந்த 9 அமினோ ஆசிட்கள் அதில் இருந்தே கிடைத்துவிடும். இங்கு தான் சைவ உணவு சாப்பிடுவோருக்குப் பிரச்சினை வரும். என்னதான் தானியங்கள் மற்றும் பயிர் வகைகளில் புரதச் சத்துக்கள் இருந்தாலும் அதில் 9 வகையான அமினோ ஆசிட்களும் இருக்காது.
தானியங்களில் 3 வகையான (lysine, threonine, tryptophan) அமினோ ஆசிட்கள் இருக்காது. பயிர்களில் 1 அமினோ ஆசிட் (methionine) இருக்காது. எனவே, இரண்டையும் சேர்ந்து சாப்பிட வேண்டும். குறிப்பாகத் தானியங்களை 3 பங்கு எடுத்தால் பயிர் வகைகளை 1 பங்கு என சாப்பிட வேண்டும். அப்போது தான் உடலுக்குத் தேவையான புரதச் சத்துகள் கிடைக்கும். சரி விஷயத்திற்கு வருவோம். ஒரு வாரத்திற்கு எத்தனை முறை அசைவம் சாப்பிடலாம்.. எத்தனை முறை என்பதை விட எவ்வளவு கிராம் சாப்பிடுகிறோம் என்பதே முக்கியம்.
உங்க தொப்பையை குறைக்கணுமா.. "சிக்கன் vs மீன்.." இரண்டில் எது பெஸ்ட்.. முடிவு ஆச்சரியமா இருக்கே
எவ்வளவு சாப்பிடலாம்: இது தொடர்பாக மருத்துவரும் ஊட்டச்சத்து நிபுணருமான அருண்குமார் யூடியூபில் கூறுகையில், "ஒருவர் சராசரியாக 700 கிராம் முதல் 900 கிராம் வரை சாப்பிடலாம்.. அதாவது கால் கிலோவாக எடுத்தால் தாராளமாக 3 நாட்கள் வரை சாப்பிடலாம். 150 கிராம் என்ற விகிதத்தில் சாப்பிட்டால் தினசரி கூட சாப்பிடலாம்" என்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் பரிந்துரைகளிலும் கூட ஒருவர் வாரத்திற்கு 700 கிராம் முதல் 900 கிராம் வரை சாப்பிடலாம் என்றே கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு சாதாரண செய்தி மட்டுமே. இதை யாரும் நிச்சயமாக மருத்துவ ஆலோசனையாகக் கருதக்கூடாது. உடலில் எதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக அருகே உள்ள மருத்துவரை அணுகுங்கள்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications