Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மன அழுத்தம்.. இளம் தாய்மார்களுக்கு கோபமும் வெறுப்புணர்வும் வருதா? தீர்வு இதோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பிணிகளுக்கு ஒருவித மன அழுத்தம் ஏற்படுவது இயற்கைதான். அதே போல குழந்தை பெற்ற பின்பும் அந்த மன அழுத்தம் அவர்களை விட்டு அகல்வதில்லை. காரணம் முன்பெல்லாம் கூட்டுக்குடும்பங்கள் இருந்தன. மாமியார், பாட்டி என கூட இருக்கும் பெரியவர்கள் பிரசவித்த பெண்ணை சத்தான உணவு கொடுத்து நன்றாக பார்த்துக்கொள்வார்கள். ஆனால் இன்றைக்கு அப்படியில்லை கூட்டுக்குடும்பங்கள் குறைந்துவிட்டன. கணவன், மனைவி மட்டுமே குழந்தையை வளர்த்து ஆளாக்க வேண்டிய சூழ்நிலையும் உள்ளது. பிரசவத்திற்கு பிறகு தாய்க்கு ஏற்படும் மன அழுத்தத்தை தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் என்னென்ன உள்ளது என்று பார்க்கலாம்.

குழந்தை பெற்றெடுத்த பிறகு இளம் தாய்மார்களுக்கு அவ்வப்போது கோபம் வரும், எதையோ இழந்தது போல ஒருவித வெறுப்புணர்வும் கூட எட்டிப்பார்க்கும். பிரசவத்திற்குப் பின்னர் தூங்காமல் இரவும் பகலும் விழித்திருப்பது, குழந்தை வளர்ப்பில் ஈடுபடும் போது ஏற்படும் பதற்றம், விரக்தி எல்லாம் இணைந்து ஒருவித மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இது பொதுவாக குழந்தை பெற்ற முதல் சில மாதங்கள் வரை இருக்கத்தான் செய்யும். இத்தகைய அழுத்தத்திலிருந்து தப்பிக்க நாம் சில சத்தான உணவுகளை சாப்பிடுவதோடு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தயாராக வேண்டும்.

How to cure Postpartum Depression check the Natural Remedies

பிரசவத்திற்குப் பின்னர் பிஞ்சு குழந்தையை கையில் வைத்துள்ள தாய்மார்கள் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதை பின்பற்றினாலே போதும் இளம் தாய்மார்கள் எளிதில் குழந்தையை வளர்த்து ஆளாக்கிவிடலாம். பிரசவித்த தாயையும், குழந்தையையும் பார்க்க ஏராளமான உறவினர்கள் வருவார்கள். இதுகூட ஒருவித சிகிச்சைதான். பிரசவித்த பெண்ணிற்கு சில ஆலோசனைகளை கூறி செல்வார்கள். அதே போல குழந்தை வளர்ப்பு பற்றியும், பாலூட்டுவது, கை வைத்தியங்களையும் கூறி குழந்தை வளர்ப்பில் தாய்க்கு உள்ள அச்சத்தை போக்கி செல்வார்கள்.

பிரசவத்திற்குப் பின்னர் பிரசவ லேகியம் சாப்பிட கொடுப்பார்கள். பத்திய உணவுகளையும் கொடுப்பார்கள். வாய்க்கு ருசியாக எதையாவது சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று மனசு ஏங்கும். குழந்தை பெற்றெடுத்த இளம் தாய்மார்களுக்கு அதிகம் பால் சுரக்க வேண்டும் என்று கூறி கருவாடு, மீன் உணவுகளை அதிகம் சாப்பிட தருவார்கள். இது மன சோர்வை நீக்குவதோடு சுறுசுறுப்பை அதிகமாக்கும். மட்டன், மீன், நாட்டுக்கோழி சமைத்து நல்லெண்ணெய் ஊற்றி பிரசவித்த பெண்களுக்கு கொடுப்பது கூட சத்துக்களை சரிவிகித அளவில் ஈடுகட்டுவதற்காகத்தான்.

ஒமேகா 3 எண்ணெய் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட கொடுக்கலாம். இது மன அழுத்தத்தை போக்கும். ரிலாக்ஸ் ஆக வைத்திருக்கும். பாதாம்பருப்பு, வால்நட், சணல்விதை எண்ணெய், மீன் உணவுகளில் ஒமேகா 3 சத்துக்கள் அடங்கியுள்ளன. கீரை வகைகளில் குறிப்பாக பசலைக்கீரை, பூசணி விதை, கடுகு கீரை, சோயாபீன்ஸ் போன்ற உணவுகளில் ஒமேகா 3 அதிகம் உள்ளது.

How to cure Postpartum Depression check the Natural Remedies

கர்ப்ப காலத்தில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகமாக இருக்கும். பிரசவத்திற்கு பின் இந்த ஹார்மோனின் அளவு சட்டென்று குறைந்துவிடும். அதிலும் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில், ஈஸ்ட்ரோஜென் அளவு இன்னும் குறையும். ஈஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோன், அந்தரங்க பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மனதையும், உடலையும் உற்சாகமாக வைத்திருக்க உதவும். ஈஸ்ட்ரோஜென் அளவு குறையும் போது, வறட்சி ஏற்படுவதால் பெண்கள் ஒருவித மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். ஆப்பிள், செர்ரி, சோயா, செலரி, நட்ஸ் வகைகளில் உள்ள ஐசோஃப்ளேவோன்கள் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவை சீராக்கும். ஆகவே பிரசவத்திற்கு பின் பெண்கள் இந்த உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிரசவத்திற்கு முன் எப்படி ஃப்ரியாக உணர்ந்தீர்களோ, பிரசவத்திற்குப் பின்னர் அந்த சுதந்திரம் இல்லாதது போல தோன்றும். எனவே குட்டி பேபியை எடுத்துக்கொண்டு மெதுவாக வெளியில் வாக்கிங் போகலாம். கணவருடன் உற்சாகமாக பேசலாம். சொந்தக்காரர்கள், உறவினர்கள் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பதன் மூலம் தனிமையை போக்கிக்கொள்ளலாம்.

How to cure Postpartum Depression check the Natural Remedies

பிரசவத்திற்குப் பின்னர் சிலரது உடல் எடை அதிகரித்து விடும். வயிற்றில் தழும்புகள், முடி உதிர்வு என சில உடல் ரீதியான பிரச்சினைகள் வாட்டி வதைக்கும். பிரசவித்து ஒரு மாதம் தியானம் அல்லது யோகாசனம ஆகிய பயிற்சிகளை செய்யலாம். இது குழந்தை பிறந்த பின் ஏற்படும் மன உளைச்சலை குறைக்க மட்டுமல்லாமல் உடல் எடையையும் குறைத்து சரும பொலிவையும் கொடுக்கும். இதுவே அழுத்தத்தை குறைப்பதற்கு சிறந்த வழியாக அமைகின்றது.

பிரசவம் முடிந்த பின்னர் தாய்மை நிலையை அடைந்த பெண்களுக்கு ஒருவித அழகு கூடும். பிறந்த குழந்தையை வைத்துக்கொண்டு சில நல்ல உடை கூட அணிய விரும்ப மாட்டார்கள். சிலர் தலை கூட சீவ மாட்டார்கள். அப்படி இருக்காதீர்கள். நன்றாக சீவி லைட்டாக பவுடர் போட்டு அலங்கரிக்கலாம். குழந்தைகளுக்கும் சீவி சிங்காரிக்கலாம். இதன் மூலம் உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி வரும்.

இந்த காலத்தில் சமூக வலைத்தளங்களின் வீச்சு அதிகமாகி விட்டது. குட்டிக்குழந்தையின் புகைப்படத்தை எடுத்து உங்களின் பக்கத்தில் அப்லோடு செய்யுங்கள். இதன் மூலம் குழந்தையை உங்களின் நண்பர்கள் உறவினர்களுக்கு அறிமுகம் செய்யலாம். லைக்குகள், பகிர்வுகள், கமெண்ட்கள், ஆசிகள் என அள்ளும் போது உங்களை அறியாமலேயே மனம் உற்சாகமடையும். ரோஜா மலர் போல சிரித்து மகிழ்விக்கும் குட்டி குழந்தைகளைக் கண்டு அதன் அன்பில் கரைந்து போனால் மன அழுத்தம் எல்லாம் மாயமாகிவிடும். அப்புறம் என்ன மன அழுத்தம் எல்லாம் மாயமாச்சே என்று நீங்களே பாடி மகிழ்வீர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+