இடது தோள்பட்டை குடையுதா! மாரடைப்பான்னு ஈஸியாக தெரிஞ்சுக்கலாம்! இதோ ஸ்ட்ரிப் இருக்கே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்களுக்கு மாரடைப்பு இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய ஒரு பரிசோதனை இருக்கிறது. அது குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

இன்றைய கால கட்டங்களில் மாரடைப்பு என்பது பொதுவாக எல்லாருக்கும் வரக் கூடியதாக உள்ளது. அப்போதெல்லாம் மாரடைப்பு உள்ளிட்ட வியாதிகள் பணக்காரர்களுக்கு மட்டுமே பெரும்பாலும் வந்து கொண்டிருந்தது.

How to detect cardiac arrest in early stage Dr Prakash advises


இந்த நிலையில் தற்போது பரவலாக எல்லாருக்கும் இந்த மாரடைப்பு வரும் நிலையில் அதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதுதான். வீட்டில் திடீரென வலது பக்கம் வலிக்கும், உடனே சிலர் மாரடைப்பு என கூப்பாடு போட்டு நம்மை பயமுறுத்தி விடுவார்கள். பிறகு இதயம் இடது புறத்தில்தானே இருக்கிறது என சொன்னதும் விழிப்பார்கள்.

இன்னும் சிலருக்கு கேஸ்டிரிக் பிரச்சினைகளால் நெஞ்சு வலிப்பது போல் இருக்கும். அதையும் ஹார்ட் அட்டாக் என நினைத்துவிடுவார்கள். மாரடைப்பு வந்தாலே நோயாளி உயிருடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் பொற்காலம், எனவே அதை வீணடிக்காமல் அவருக்கு உரிய சிகிச்சை கொடுத்து காப்பாற்ற வேண்டும். இதற்காக இசிஜி, எக்கோ உள்ளிட்ட சோதனைகளை நடத்த வேண்டியது அவசியம். ஆனால் குறைந்த நேரத்தில் மாரடைப்பை கண்டறிய ஒரு டெஸ்ட் இருக்கிறது.

இதுகுறித்து டாக்டர் பிரகாஷ் மூர்த்தி கூறியிருப்பதாவது: - மாரடைப்பு வந்திருக்கிறதா இல்லை என்பதை கண்டுபிடிக்க ஒரு நவீன பரிசோதனை குறித்து நாம் பார்க்கலாம். டிரோபோனின் ஐ (TROPONIN I) என்பது கார்டியாக் மார்க்கர் என சொல்லலாம். மையோ கார்டியல் இன்சூரி, இஸ்கிமே உள்ளிட்டவை வரும் போது இந்த டெஸ்ட் செய்தால் பாசிட்டிவ் என வரும்.

இது பாசிட்டிவ்வாக இருந்தால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் இருக்கிறது என்று அர்த்தம். நிறைய பேர் இசிஜி எடுத்து பார்ப்பார்கள். அது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருக்கும். இதனால் நமக்கு ஹார்ட் அட்டாக் இருக்கிறதா இல்லையா என்ற குழப்பத்திலேயே இருப்பார்கள். எக்கோ, ஆஞ்சியோ உள்ளிட்ட பரிசோதனைகளை செய்துக் கொள்ள செலவு அதிகமாகும் என பயப்படுவார்கள்.

இனி எந்த குழப்பமும் வேண்டியதில்லை. டிரோபோனின் ஐ பாசிட்டிவ் என வந்தால் ஹார்ட் அட்டாக் இருக்கிறது என்று அர்த்தம். எக்கோ கார்டியோகிராம், சிடி ஆஞ்சியோகிராம் எடுக்க பெரிய நகரங்களுக்கு செல்ல வேண்டும். சிறிய கிராமங்களில் இந்த வசதிகள் கிடையாது.

எனவே இந்த டிரோபோனின் ஐ என்ற டெஸ்ட்டை மேற்கொள்ள அதிக மருத்துவ அறிவு இருக்க வேண்டும் என்றில்லை. ஒரு கோடு வந்தால் மாரடைப்பு இல்லை, இரு கோடுகள் வந்தால் மாரடைப்பு இருக்கிறது. அவ்வளவுதான். உயிரை பாதுகாக்கும் முடிவை எடுக்க இந்த டெஸ்ட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதன் விலையும் மிகவும் குறைவாகும் என்றார். இந்த டெஸ்டை சிறிய பரிசோதனை கூடங்களில் கூட வைத்திருக்கலாம். ஆனால் வீட்டில் இருந்தபடியே எடுக்க முடியாது. காரணம் மாரடைப்பு இருக்கிறதா என்பதை பார்க்க சில ரத்த மாதிரிகளை அதில் விட வேண்டும். அதாவது கர்ப்பமாக இருக்கிறோமா என்ற சோதனை செய்வது தெரியுமல்லவா.

அது போல்தான் அதில் காலையில் முதல் சிறுநீரை சில துளிகள் விட்டால் ஒரு கோடு வந்தால் கர்ப்பம் இல்லை, இரு கோடுகள் வந்தால் கர்ப்பம் என்பது தெரியவரும். இவ்வாறு அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+