Home made Hair Dye: 2 கொய்யா இலைகள் போதும்! நரை முடியை கருமையாக்கலாமே! வீட்டிலேயே டை எப்படி செய்வது?
சென்னை: இன்று பெரும்பாலானோரின் பிரச்சினை முடி உதிர்தல், நரை முடி வருதல், முடி வளராதது, மெல்லிய முடி, வழுக்கை இவைதான்! நரையை போக்க பல்வேறு கெமிக்கல் கலந்த டைகளை அடித்து வருகிறார்கள்.
இது உடலுக்கு மட்டுமில்லாமல் தலைமுடிக்கும் பெரும் கேடாக விளங்குகிறது. இதை தவிர்க்கவே இயற்கையான பொருட்களை கொண்டு நரை முடியை கருப்பாக்குமாறு பலர் அறிவுரை கூறுகிறார்கள்.

இதுகுறித்து நேத்ரா எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நரை முடியை கருமையாக்கும் கொய்யா இலை
நரைமுடி கருப்பாக மாற கொய்யா இலை வைத்து வீட்டிலேயே ஹேர் டை தயாரிக்கலாம்.
நரைமுடியை கருமையாக்க பெரும்பாலானோர் ஹேர் டைகளை பயன்படுத்துவர். ஆனால் இந்த ஹேர் டைகளில் உள்ள வேதிப் பொருட்கள் சிலருக்கு ஒத்துக் கொள்ளாது. மேலும் சில நாட்கள் மட்டுமே நீடிக்கும்.
ஆனால் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே நீங்களே ஹேர் டை தயாரித்துக் கொள்ளலாம்.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் இரண்டு கொய்யா இலைகளை நறுக்கி போட வேண்டும்.
2 நிமிடம் கொதித்த உடன் அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் ஒரு டீஸ்பூன் டீதூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். மேலும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
நன்றாக கொதித்த உடன் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைக்க வேண்டும்.
ஆறிய பின்னர் வடிகட்டியால் வடிகட்டி கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் காபித்தூள், ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 4 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாகக் கலந்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் 2 டீஸ்பூன் மருதாணி பவுடர் சேர்த்துக் கலக்க வேண்டும்.
பின்னர் இதனுடன் கொய்யா இலைச் சாறை சிறிது சிறிதாக சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
இதனை அப்படியே சில மணி நேரங்களுக்கு வைத்து விட வேண்டும்.
7-8 மணி நேரத்திற்கு பிறகு எடுத்துப் பார்த்தால் நன்றாக கருப்பாக இருக்கும்.
அவ்வளவு தான் சூப்பரான ஹோம்மேட் ஹேர் டை ரெடி. அப்படியே எடுத்து நரைமுடி மீது தடவிக் கொள்ளுங்கள்.
அரை மணி நேரம் கழித்து முடியை அலச முடி கருமையாக மாறியிருக்கும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications