சாப்பிட்ட பிறகு வயிறு உப்புச பிரச்சனைக்கு, இந்த வீட்டு வைத்தியம் போதும், உடனடி நிவாரணம் கிடைக்கும்

வயிறு உப்புசம் ஏற்படுவதற்கான காரணங்களும், சரிசெய்ய வீட்டு வைத்தியம் பற்றிய குறிப்புக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில நேரங்களில் அளவுக்கு அதிகமாகவும், பசியில்லாமல் சாப்பிடுவதும், நேரம் தவறி சாப்பிடுவது அஜீரண கோளாறு அல்லது சாப்பிட்ட பிறகு உப்புசம் ஏற்படுகிறது. நார்ச்சத்து நிறைந்த (Fiber Food) உணவுகள் மற்றும் கொலஸ்ட்ரால் (cholesterol) உணவுகள் அதிகமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம். இதனால் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தி வயிறு உப்பியதுபோல் இருக்கும். இதன் காரணமாக நெஞ்சு எரிச்சல், அடிக்கடி வாயு வெளியேறுவது மற்றும் புளிப்பு ஏப்பம் வருவதை உணர முடியும். அடிக்கடி புளித்த ஏப்பம் பிரச்னை உள்ளவர்கள் அதிகக் காரமுள்ள உணவுப் பொருள்களைத் தவிர்க்க வேண்டும், சூடாகவோ, குளிர்ச்சியாகவோ சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.

பொதுவாக சாப்பிட்டபிறகு தேநீர் குடிக்கக்கூடாது, ஆனால் வயிறு உப்புசமாக இருக்கும்போது வீட்டில் உள்ள மூலிகை பொருட்களை கொண்டு தேநீர் போல் தயாரித்து குடிக்கலாம். செரிமான மற்றும் புளிப்பு ஏப்பத்திலிருந்து விரைவான நிவாரணம் பெற உதவுகிறது. இந்த மூலிகை தேநீர் உப்பச பிரச்சனைகளுக்கு மருந்தாக செயல்படுகிறது. இந்த அஜீரண கோளாறிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

தயிர்

தயிர்

இது போன்ற சமயத்தில் தயிர் செரிமானத்திற்கு சிறந்த உணவு ஆகும். தயிரில் நுண்கிருமிகள், பாக்டீரியாக்களினால் குடல் மற்றும் செரிமானத்திற்கு நல்லது. வயிறு உப்புசம் உடனடி தீர்வு தருகிறது. தயிருடன் சிறிது வெள்ளரி துண்டுகள், நறுக்கிய இஞ்சி மற்றும் துளசி இலை, தண்ணீரில் சேர்த்து நன்றாக கலந்து குடித்தால் சங்கடமாக இருக்கும் நிலை மாறி, உடனடி பலன் கிடைக்கும்.

 புளி

புளி

புளி எப்பம் அதிகம் இருப்பவர்கள் சிறிய அளவு புளியை உருண்டை போல் செய்து, வேகவைத்த சாதத்துடன் சேர்த்து விழுங்கலாம். நெஞ்செரிச்சல், மற்றும் புளி ஏப்பத்தை உடனடியாக நிறுத்திவிடும். பிரண்டைத் துவையல், இஞ்சித் துவையல், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலைத் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் வருவதை தவிர்க்கலாம். புளி அஜீரணத்தை போக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலில் சரியான இரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவுகிறது.

மசாலா டீ

மசாலா டீ

வயிறு உப்புசம் நீங்க மசாலா டீ குடிக்கலாம். மசாலா டீ செய்வதற்கு, அரை ஸ்பூன் சோம்பு, கால் ஸ்பூன் சீரகம், சிறிது இளவங்கப்பட்டை தண்ணீரில் சேர்த்து 5-10 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் அதிவேக நிவாரணம் கிடைக்கும்.சூடான மசாலா டீ வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது. மசாலா டீ ஆரோக்கியமானது, இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் நல்லது.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் சிட்ரிக் இருப்பதால் கல்லீரலில் உள்ள கழிவுகளை அகற்ற உதவுகிறது மேலும், செரிமான பிரச்சனை சரிசெய்ய பெரும் பங்கு வகுக்கிறது. எனவே வெந்நீரில் எலுமிச்சை பிழிந்து சேர்த்து குடித்தால் உப்புசம் நீங்கி வயிறு இலகுவாகும், நல்ல தீர்வும் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+