நீங்கள் செய்த இட்லியை உடைந்த டேபிளுக்கு முட்டுக் கொடுனு கிண்டல் பண்றாங்களா? கவலையை விடுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னிந்தியாவின் மிக முக்கிய உணவான இட்லி, மிருதுவாக இருந்தால்தான் அதை சாப்பிட நன்றாக இருக்கும். பொதுவாக இட்லியை லைட் ஃபுட் என்பார்கள். எனவே பெயருக்கேற்ப லைட்டாக இருக்க வேண்டும். கல் போல் இருக்கக் கூடாது. இதற்கு எளிய டிப்ஸ்களை பார்க்கலாம்.

இட்லி! இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும் இது முக்கியமான தென்னிந்திய உணவாகும். 90 சதவீதம் இட்லி இல்லாத வீடுகளே இருக்காது என சொல்லலாம். குழந்தைகள், பெரியவர்கள், உடல்நலம் பாதித்தவர்கள் என எல்லோருக்கும் இட்லி மட்டும்தான் உணவாக கொடுக்கச் சொல்வார் மருத்துவர்.

health idly

இட்லியை விட்டால் இடியாப்பம், மதியத்திற்கு கஞ்சி இப்படிதான் டாக்டரின் பரிந்துரை இருக்கும். இடியாப்பம் செய்வது சற்று பெரிய வேலை என்பதால் அவசர நேரங்களில் அது கை கொடுக்காது. எனவேதான் இட்லியை சாப்பிடுகிறார்கள்.

இந்த இட்லியின் கான்செப்ட் என்ன என்றால் இதில் எண்ணெய் இல்லாமல் ஆவியில் வேக வைத்துவிடுகிறோம். எனவே உடலுக்கு பாதிப்பை கொடுக்காது என்பதுதான். ஆனாலும் அரிசியில் மாவு சத்து இருப்பதாக சொல்வார்கள். எனினும் தற்போது இட்லியில் புதுமைகளை புகுத்திவிட்டார்கள். சிறுதானிய இட்லி, கேழ்வரகு இட்லி, பாரம்பரிய அரிசியினால் ஆன இட்லி உள்ளிட்டவைகளை செய்து ஆரோக்கிய வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

சப்பாத்தியை போல் இட்லியும் பயணங்களுக்கு ஏற்றது. ஆனால் சூடாக இருக்கும் போது சூப்பராகவும் ஆறியவுடன் கல் போன்று இருந்தால் சாப்பிடுவதற்கே மாரடைக்கும். இன்னும் சிலர் கல்போன்ற இட்லியை உடைக்க சுத்தியலை எடு என்பார்கள். இல்லாவிட்டால் உடைந்த டேபிளுக்கு இட்லியால் முட்டு கொடு என்பார்கள்.

இந்த கிண்டல் கேலிக்குள்ளாகாமல் இட்லி எப்போது சாப்பிட்டாலும் பஞ்சு போல் இருக்க என்னென்ன டிப்ஸ் என்பதை பார்ப்போம். இட்லி அரிசியை எடுத்துக் கொண்டால் 4 பங்கு என்றால் அதற்கு ஒரு பங்கு உளுந்து என்ற கணக்குதான். இதை நீங்கள் எந்த பாத்திரத்தில் வேண்டுமானாலும் அளந்து கொள்ளுங்கள்.

கிரைண்டரில் அரைக்க இந்த விகிதமே போதுமானது. இதே மிக்ஸி, கடையில் கொடுத்து அரைப்பதென்றால் சற்று கூடுதலாக உளுந்தை ஊற வைக்கலாம். எப்போதும் அரிசியுடன் உளுந்தை ஊற வையுங்கள். இது உடலுக்கு குளிர்ச்சியையும் தரும். இதில் உள்ள நுரைப்புத்தன்மை தோசை சுடுவதற்கும் நன்றாக இருக்கும்.

அரிசி 5 அல்லது 6 மணி நேரம் ஊறட்டும். ஆனால் உளுந்து 2 மணி நேரம் ஊறினால் போதுமானது. மாவு அரைக்கும் போது முதலில் உளுந்தை போட்டு நன்றாக வெண்ணெய் போல் அரைத்துவிட வேண்டும். இதற்கு நடுநடுவே தண்ணீர் தெளித்துக் கொள்ள வேண்டும். ஊற்றக் கூடாது. ஐஸ் வாட்டர் என்றால் இன்னும் சிறப்பு!

பின்னர் அரிசியை போட்டு 15 நிமிடங்களுக்கு கொரகொரப்பாக அரைக்க வேண்டும். பிறகு அதையும் உளுந்து வழித்த பாத்திரத்தில் வழித்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு கல் உப்பு போட்டு கலந்து விட்டு தேவையான அளவை வெளியே வைத்தும் மீதியை பிரிட்ஜிலும் வைத்துக் கொள்ளலாம்.

இட்லி மாவை 8 மணி நேரத்திற்கு புளிக்க விட வேண்டும். அதன் பின்பு இட்லி பாத்திரத்தை சூடாக்கிவிட்டு இட்லியை தட்டுகளில் ஊற்ற வேண்டும். அப்போதும் இட்லி சாப்ட்டாக வரும். இதில் மிக முக்கியமாக இன்னொரு டிப்ஸ் இருக்கிறது. அரிசியுடன் சிறிய அளவில் இருக்கும் சோயாவை சேர்த்து ஊற வைத்து அரைத்தாலும் இட்லி மிருதுவாகவும் வெண்மையாகவும் வரும்.

இல்லாவிட்டால் அரிசி, உளுந்து ஊற வைத்த பிறகு மாவு அரைக்க அரை மணி நேரத்திற்கு முன்பு ஒரு கைப்பிடி வெள்ளை அவலையும் ஜவ்வரிசியையும் தண்ணீரில் ஊற வைத்து ஊறியதும் அரிசியுடன் சேர்த்து அரைத்தால் இட்லி தும்பை பூ போல் வெள்ளையாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+