கோடைக்காலத்தில் அதிகரிக்கும் வெப்பம்.. தோல் நோய்கள் ஏற்படாமல் பாதுகாப்பது எப்படி?
கோடைக்காலத்தில் தோல் நோய்கள் அதிகம் ஏற்படும் அபாயம் உள்ளது.
சென்னை: தகிக்கும் வெயிலால் வெப்ப நோய்கள் தாக்கத்தொடங்கும் நிலை உள்ளது. எனவே கோடைக்காலத்தில் தோல் நோய்கள் ஏற்படாமல் தடுப்பது அவசியம் என்றும், தகிக்கும் வெயிலில் இருந்து நமது தோலை பாதுகாப்பது எப்படி என்ற விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே நாட்டின் பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது.
இப்போது கோடைக்காலம் தொடங்கி விட்ட நிலையில், வெயிலை பற்றி சொல்லவே வேண்டாம். கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பு ஆண்டு வெப்பம் தகிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வயிற்றுப்போக்கு, அம்மை நோய்
தகிக்கும் வெயிலால் வெப்ப நோய்கள் தாக்கத்தொடங்கும் நிலை உள்ளது. குறிப்பிட்டு சொல்வது என்றால் வெப்பத்தளர்ச்சி, மயக்கம், சிறுநீர்க்கடுப்பு, வயிற்றுப்போக்கு, அம்மை நோய் போன்ற நோய்கள் வெப்ப காலத்தில் ஏற்படுவதுண்டு. வெப்ப நோய்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கூட மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த அளவுக்கு நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

சாதாரணமாக எடை போடக்கூடாது
வெப்ப அலையில், நீர்ச்சத்து குறைவு, குமட்டல் போன்ற பாதிப்புகளும் எற்படுவது அதிகரிக்கும். ஏன் ஸ்ட்ரோக் கூட வரக்கூடும். எனவே வெயிலை சாதாரணமாக எடை போடக்கூடாது. அதேபோல், வெயிலின் தாக்கத்தில் இருந்து நமது உடலை பாதுகாக்கும் பணியில் பெரும் பங்கு வகிப்பது தோல்தான். வெயில் மற்றும் குளிர் காலங்களுக்கு ஏற்ப நமது உடல் வெப்ப நிலையை சீராக வைப்பது உடலுக்கு தொற்றுக்கள் புகாமல் தடுக்கும் பணியை தோல்கள் செய்து வருகிறது. எனவே கோடைக்காலத்தில் தோல் நோய்கள் ஏற்படாமல் தடுப்பது அவசியம் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். தகிக்கும் வெயிலில் இருந்து நமது தோலை பாதுகாப்பது எப்படி என்ற விவரங்களை பார்க்கலாம்.

தளர்வான ஆடைகளை அணிந்தால்
* கோடைக்காலத்தில் தோல் நோய்கள் ஏற்படாமல் இருக்க தளர்வான ஆடைகளை அணிய வேண்டும்
* உடலின் வெப்பம் அதிகரிக்காதவாறு பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.
* நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்.
* ஜீன்ஸ் அணிவதால் உடல் வெப்ப நிலை அதிகரிக்கும். எனவே ஜீன்ஸ் போன்ற கடினமான ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.
* நீர் ஆகாரங்கள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சூடான நீரில் குளிப்பதை..
* காற்றோட்டம் இருக்காத வகையிலான ஆடைகளை அணிவது நல்லது அல்ல
* தோல் நோய்கள் ஏற்படாமல் இருக்க தினமும் இரண்டு முறை குளிக்கலாம்.
* அணிந்து இருக்கும் ஆடைகள் வியர்வையால் ஈரம் அடைந்து விட்டால் அதனை விரைவாக மாற்றுவது நல்லது.
* வெயில் காலத்தில் சூடான நீரில் குளிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சூடான நீரில் குளிப்பதன் மூலம் சருமம் வறட்சி அடையக் கூடும்.












Click it and Unblock the Notifications