வியர்க்குரு உடலில் அதிகமாக வருகிறதா.. அதனை போக்க சூப்பர் வழிகள்.. ஆனால் ஒரு கண்டிசன்
சென்னை: கோடைக்காலத்தில் பெரும்பாலானோர் பாதிக்கப்படுது வியர்க்குரு பிரச்சனையில் தான். உங்களுக்கு வியர்குரு அதிகமாக வர முக்கிய காரணம் பித்தம் அதிகம் இருப்பது தான் என்கிறார்கள்.மேலும் உடல் எடை அதிகமாக இருப்பது, கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் வியர்குரு பிரச்சனையால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் ஆகும்.
அதேபோல் இயற்கையாகவே சிலருக்கு உடல் சூடாகவே இருக்கும். சிறிது நேரம் பேன் இல்லாவிட்டால் கூட வியர்த்து விறுவிறுத்துவிடும். இப்படிப்பட்டவர்களுக்கு வேர்க்குருவர அதிக வாய்ப்பு உள்ளது.
வியர்குரு வந்தவர்கள் என்ன செய்து அதனை சரி செய்யலாம் என்பதை பார்ப்போம். வியர்க்குருவுக்கு சந்தனம் மிகச்சிறந்த நிவாரணம் ஆகும். ஒரிஜினல் சந்தனத்தை உடல் முழுவதும் பூசி குளிக்கலாம். அதேபோல் சந்தனத்துடன் மஞ்சளையும் பூசி குளிக்கலாம்.
மஞ்சள், சந்தனம், வேப்பிலை மூன்றையும் சம அளவு எடுத்து, மைபோல் அரைத்து வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி ஒரு மணி நேரத்துக்குப் பிறகு குளிக்கலாம். பாசிப் பயறு, கடலைப்பருப்பு, வெந்தயம் கலந்த பொடியை தேய்த்துக் குளிக்கலாம். கற்றாழையின் உள் பகுதியை எடுத்து சோப்புபோல தேய்த்துக் குளிக்கலாம்.
வெயில் காலங்களில் குப்பைமேனிக் கீரையை பருப்பில் சேர்த்து, கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும். வியர்க்குரு நெருங்காது. அறுகம்புல், மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் குளிக்கலாம்.
வியர்குரு பிரச்சனைக்கு உடல் சூடு முக்கிய காரணமாக இருப்பதால் பொதுவாக வெயில் காலங்களில் வறுத்து சாப்பிடும் உணவுகளை தவிர்க்கலாம். அதிக கார உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் உடல் சூடால் வரும் பல்வேறு பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
இதேபோல் வெயில் காலங்களில் வெள்ளரிக்காய், கிர்ணி, இளநீர், தர்ப்பூசணி, கரும்புச்சாறு போன்றவற்றைப் பருகலாம். இவை உடலின் நீரிழப்பைச் சரிசெய்யும். வியர்க்குருவை தடுக்கும்.
இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர், திரிபலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) பொடியை சுடுதண்ணீரில் கலந்து பருகலாம். இதனை நீரில் கரைத்து, தேய்த்துக் குளித்தாலும் வியர்க்குரு மறையும். இதேபோல வெட்டி வேர் பவுடரையும் வியர்குரு மறைய பயன்படுத்தலாம்.

வியர்குரு உட்பட உடல்சூடு பிரச்சனைகளை தவிர்க்க விரும்புவோர், அதிக நேரம் செல்லை நோண்டிக்கொண்டு நேரம் தவறி தூங்கக்கூடாது. அதேபோல் சூடான வெறும் தரையில் உறங்கக்கூடாது. கற்றோட்டமான இடத்தில் உறங்குங்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications