புரோட்டீன் பவுடரை எடுத்து கொள்கிறீர்களா? அப்போ உடல் ஆரோக்கியத்தை மறந்துடுங்க! ஐசிஎம்ஆர் வார்னிங்
டெல்லி: புரோட்டீன் பவுடர்களை இந்தியர்கள் யாரும் பயன்படுத்த வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இளைஞர்கள் கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பெற புரத சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக் கொள்கிறார்கள். இது தற்போது பரவலாக அதிகம் பேரால் பயன்படுத்தப்படுகிறது. ஜிம்முக்கு செல்வோர், தடகள போட்டியாளர்கள் என தசையின் வளர்ச்சிக்காகவும் தினமும் தேவையான புரதச்சத்து கிடைப்பதற்காகவும் இந்த புரத சப்ளிமெண்ட்டுகளை வாங்கி உட்கொள்கிறார்கள்.

இந்தியாவில் 36 வகையான புரோட்டீன் சப்ளிமெண்ட்களில் 70 சதவீதம் தவறான புரத தகவல்கள் கொண்டிருப்பதாக அண்மையில் தகவல்கள் வந்தன. இதன் அடிப்படையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புரோட்டீன் பவுடர்களை ஆய்வுக்குள்படுத்தியது.
இதைத் தொடர்ந்து புரோட்டீன் பவுடர்களை இந்தியர்கள் உட்கொள்ள வேண்டாம் என ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது. புரத பவுடர்களை தொடர்ந்து உட்கொள்வதால் அளவுக்கு அதிகமாக புரதங்கள் கிடைத்து எலும்பு தாது இழப்பு, சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை நோய் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும் என ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளது.
மேலும் புரத பவுடர்களை தொடர்ந்து உட்கொண்டால் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட், கொழுப்பு சத்துகளும் குறைகிறது. இது போன்று புரோட்டீன் பவுடர்கள் முட்டை, பால் சார்ந்த பொருட்கள், சோயா பீன்ஸ், பட்டாணி, அரிசி ஆகியவற்றிலிருந்து புரோட்டீன்களை தனியாக பிரித்து அதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.
மார்க்கெட்டுகளில் கிடைக்கும் புரத பவுடர்களில் சர்க்கரை, கலோரிகள் இல்லாத இனிப்புகள், செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இதனால் புரத பவுடரை உட்கொள்வதால் உடல்நல பிரச்சினைகள் ஏற்படுகிறது என ஐசிஎம்ஆர் எச்சரிக்கிறது.
புரதத்தை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் சிறுநீரகத்தின் மூலம் கழிவுகளை வடிகட்டும் விகிதம் அதிகரிக்கும். சீரம் கிரியாட்டினைன் அளவுகளும் அதிகரிக்கும். கால்சியம் சத்து குறைந்து எலும்புகளை பாதிக்கும். புரத சத்துகள் தேவை என்றால் மீன், கடல் உணவுகள், சிக்கன், முட்டைகள்,லென்டில்கள், டோஃபூ, பீன்ஸ் உள்ளிட்டவைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
கார்போஹைட்ரேட், புரதங்களை தவிர்க்கக் கூடாது. உங்களுக்கு புரத சத்து அதிகம் கிடைக்க வேண்டும் என்றால் ஒரு ஊட்டச்சத்து நிபுணரை கலந்து ஆலோசித்து ஆலோசனைகளை பெற வேண்டும். புரதங்களை அதிகம் எடுத்துக் கொள்வதால் நீர் சத்து குறைந்து உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்தியாவில் நோய் வாய்ப்பட்டவர்களில் 56 சதவீதம் பேர் ஆரோக்கியமற்ற டயட்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆண்டுகள் கழித்து ஐசிஎம்ஆர் விதிமுறைகளை திருத்தியமைத்துள்ளது. 148 பக்கங்கள் கொண்ட 17 விதிகளை ஐசிஎம்ஆர் வகுத்துள்ளது.
மொத்தம் கிடைக்கும் ஆற்றலில் 5 சதவீதத்துக்கும் குறைவாக சர்க்கரையை எடுத்துக் கொள்ள வேண்டும். தானியங்கள் மற்றும் சிறுதானியங்கள் மூலம் 45 சதவீதம் கலோரிகளைவிட அதிக அளவில் எடுத்துக் கொள்ள கூடாது. அது போல் மாமிசம், பீன்ஸ்கள், பருப்புகள் மூலம் 15 சதவீதம் மேல் எடுத்துக் கொள்ள கூடாது. மீதம் தேவையான கலோரிகளை கொட்டைகள், காய்கறிகள், பழங்கள், பால் ஆகியவற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். மொத்த கொழுப்பின் அளவு 30 சதவீதத்திற்கு சமமாகவும் அல்லது குறைந்த அளவிலும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications