தூங்காமல் இருந்தால் மாரடைப்பு வருமா?.. மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன?
சரியான தூக்கமின்மையாலும் மாரடைப்புகள் ஏற்படுமா? என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
டெல்லி: சிவராத்திரி தினத்தில் கண்விழித்து இருந்து அதிகாலை வீடு திரும்பிய நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், மாரடைப்பு தொடர்பான பேச்சுக்கள் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இதில் சரியான தூக்கமின்மையாலும் மாரடைப்புகள் அதிகம் ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறும் கருத்தினை கீழே விரிவாக பார்க்கலாம்.
இன்றைய மாறிவரும் உணவு பழக்க வழக்கம் மற்றும் மக்களின் லைப் ஸ்டைல் காரணமாக இளம் வயதினருக்கு கூட மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
இருதய பாதிப்புகள் ஏற்படுவதற்கு மக்கள் கடைபிடிக்கும் பழக்க வழக்கமே பிரதான காரணமாக சொல்லப்படுகிறது. குறிப்பாக இரவு நேர தூக்கம் மிகவும் அவசியம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

8 மணி நேரம் வரை தூக்கம்
நாள் ஒன்றுக்கு சராசரியாக 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் உடலுக்கு மிகவும் அவசியம் என்றும் அதற்கு குறைவாக தூங்கினால் பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். குறிப்பாக இந்தியாவில் இருதய பாதிப்பு மிகப்பெரிய பிரச்சனையாகவே உள்ளது. 45-50 வயதை எட்டியவர்கள் தங்கள் உடல் நலனை சரிபார்த்துக்கொள்வது மிக மிக அவசியம் என்று சொல்லப்படுகிறது.

மாரடைப்பு தொடர்பான பேச்சுக்கள்
குறிப்பாக இருதய பாதிப்பு உள்ளவர்கள் இரவு தூக்கத்தை கண்டிப்பாக தவிர்க்க கூடாது என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது. பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி கூட ஏற்கனவே இரண்டு முறை இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். சிவராத்திரி தினத்தில் கண்விழித்து இருந்து அதிகாலை வீடு திரும்பிய மயில்சாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் உயிரிழந்தார். மயில்சாமி உயிரிழந்ததையடுத்து அவரது மரணத்துக்கு காரணமான மாரடைப்பு தொடர்பான பேச்சுக்களும் அதிகளவில் அடிபடுகின்றன.

மன அழுத்தம் அதிகம் ஏற்படும் போது
இரவில் தூக்கமின்றி இருப்பதனால் இதுபோன்ற மாரடைப்பு ஏற்படுகிறதா என்பது குறித்து மருத்து நிபுணர்கள் விளக்கியுள்ளனர். அவர்கள் கூறும் கருத்தினை கீழே பார்க்கலாம். இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் தரப்பில் கூறும் போது, "தூக்கம் மிகவும் அவசியம் என்கிறார்கள். ஒருநாளைக்கு 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை சரியான தூக்கம் அவசியம். சரியாக தூக்கம் இல்லை என்றால் மன அழுத்தம் ஏற்படும். மன அழுத்தம் அதிகம் ஏற்படும் போது இருதய பாதிப்பும் ஏற்படலாம். தூங்காமலும் மன அழுத்தத்துடன் இருப்பது இருத நோய்கள் வருவதற்கு ஒரு முக்கிய காரணியாக அமையும்.

என்ன செய்ய வேண்டும்?
அதற்காக ஒருநாள் தூங்காமல் இருந்ததால்தான் மாரடைப்பு வந்துவிடும் என்று சொல்ல முடியாது. அடிக்கடி தூங்காமல் இருப்பது மன அழுத்தத்துடன் இருப்பது.. ஏற்கனவே இருதய பாதிப்புகள் இருப்பவர்கள் இப்படி தூங்காமல் இருப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக ஆஞ்சியோ பிளாஸ்டி.. பைபாஸ் சர்ஜரி செய்தவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர்ந்த காற்று வீசும் போது வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. அதேபோல் திடீரென அதிக சத்தத்தை கேட்பதும் இதயத்திற்கு நல்லது அல்ல. எனவே இருதய நோயாளிகள் இவற்றை எல்லாம் தவிர்ப்பது நல்லது" என்கிறார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications