மாட்டு பாலை விடுங்க.. இப்போ கரப்பான் பூச்சி பால்தான் டிரெண்டிங்.. ஏகப்பட்ட நன்மை கொட்டி கிடக்காம்!
டெல்லி: மாட்டின் பால் என்பது நமது நாட்டில் அத்தியாவசியமான உணவாக இருக்கும் சூழலில், பாலை விட அதிக சக்திவாய்ந்த பானமாகக் கரப்பான் பூச்சி பால் இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். வரும் காலத்தில் இது மனிதர்கள் பயன்படுத்தும் மிக முக்கியமான உணவாக மாறலாம் என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருமே உடலில் போதியளவு ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக மாட்டின் பாலை குடிப்பார்கள். இது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தருகிறது.

ஊட்டச்சத்து:
அதேநேரம் பாலுக்கு மாற்றாக வேறு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைக் கண்டறியவும் ஆய்வாளர்கள் தொடர்ந்து முயன்று வருகிறார்கள். உலகெங்கும் இது தொடர்பாகத் தீவிர ஆய்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அப்படி நடந்த ஒரு ஆய்வில் தான் கரப்பான் பூச்சியின் பாலில் அதிகளவுக்கு ஊட்டச்சத்து இருப்பதாகவும் பசும்பாலை விட அதிக சத்து உள்ள சூப்பர்ஃபுட்டாக உள்ளதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பசிபிக் வண்டு கரப்பான் பூச்சி (Diploptera punctata) அதன் குஞ்சுகளுக்கு உணவளிக்க ஊட்டச்சத்து நிறைந்த பால் போன்ற பொருளை உற்பத்தி செய்வதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பாலில் அனைத்து அத்தியாவசியமான அமினோ ஆசிட்கள், கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகள் நிரம்பிய புரதங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மேலும், இது பசுவின் பாலை விட நான்கு மடங்கு அதிக ஊட்டச்சத்தைக் கொண்டிருப்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கரப்பான் பூச்சி பால்:
அட இதுல இவ்வளவு நன்மை இருக்கா.. அப்போ கரப்பான் பூச்சி பால் தானே பெஸ்ட்.. அதை இப்போவே வாங்கி சேமித்து வைக்கலாமா என்ற கேள்வி உங்களுக்கு வரும். இது தொடர்பாக நாம் சில அடிப்படை விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
அதாவது இது முதற்கட்ட ஆராய்ச்சி முடிவுகள் தான். மேலும், கரப்பான் பூச்சியின் பால் வணிக ரீதியாகக் கிடைப்பதில்லை. மேலும், நேரடியாக இதுவரை மனிதர்களை அதை எடுத்துக் கொண்டது இல்லை.. மேலும், கரப்பான் பூச்சியில் இருந்து அதன் பாலை பிரித்தெடுப்பது நடைமுறைக்குச் சாத்தியமற்றது. மேவும், மனிதர்களுக்குத் தேவையான அளவுக்கு இதை உற்பத்தி செய்யவும் வாய்ப்பே இல்லை. இதை எல்லாம் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
பசும்பால் vs கரப்பான் பூச்சி பால்:
ஊட்டச்சத்து ரீதியாகப் பார்த்தோம் என்றால் கரப்பான் பூச்சி பாலில் கலோரிகள் மற்றும் புரதம் அதிகம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மறுபுறம் பசுவின் பாலில் கால்சியம், வைட்டமின் டி மற்றும் எலும்பு ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான பிற ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது.
மேலும், பசுவின் பாலில் எந்தவொரு நச்சும் இல்லை என்பதை உறுதி செய்ய பல சோதனைகள் நடத்தப்படுகிறது. ஆனால், கரப்பான் பூச்சியின் பாலில் இதுபோல எந்தவொரு சோதனையும் இருப்பதில்லை. இதனால் அதில் எந்த மாதிரியான ஆபத்தை விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்கிறது என்பது நமக்கு உறுதியாகத் தெரியாது. எனவே, அவை குறித்துத் தெளிவான தகவல்கள் கிடைக்கும் வரை கரப்பான் பூச்சியின் பால் கிடைத்தாலுமே கூட குடிக்கக் கூடாது.
எச்சரிக்கை தேவை:
எனவே, கரப்பான் பூச்சியின் பால் குறித்த டிரெண்டை நாம் எச்சரிக்கையுடன் தான் பார்க்க வேண்டும். அதன் பாதுகாப்பு, நீண்ட கால நோக்கில் எதாவது சுகாதார சிக்கல்கள் ஏற்படுமா என்பது குறித்து நமக்குத் தெளிவான தகவல்கள் இல்லை. இதனால் கரப்பான் பூச்சியின் பால் அடுத்த சூப்பர்ஃபுட் ட்ரெண்டாக தோன்றினாலும் இது தொடர்பாகக் கூடுதல் விரிவான ஆய்வு தேவை. இல்லை என்றால் அது தேவையில்லாத பிரச்சினையையே உருவாக்கும்.
இது சாதாரண செய்தி மட்டுமே. இதை மருத்துவ ஆலோசனையாக யாரும் கருதக்கூடாது. உடலுக்குப் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக அருகே உள்ள மருத்துவரை நாடுங்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications