கோலை ஊன்றி ! குறுகி நடப்போரும் கடுக்காய் சாப்பிட்டால் போதும்! மருத்துவரின் காதலி
சென்னை: மருத்துவரின் காதலி என அழைக்கப்படும் கடுக்காய், சிறந்த மருத்துவக் குணம் கொண்டது. கடுக்காய் மட்டுமே உண்டு உயிர் வாழலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து அத்திமரக்காடு எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடுக்காயின் அளவில்லா பயன்கள். கடுக்காய் சிறந்த மருத்துவத் தன்மை உடையதாகும்.

வட மொழியில் 'மருத்துவரின் காதலி' என்று இதனை அழைக்கிறார்கள். நமது சித்த மருத்துவத்தில் 'திரிபலா' என்ற கூட்டு மருந்தாக இதனைப் பயன்படுத்தி வருகிறோம்.
கடுக்காயை நம்மூர் நாட்டு மருந்து கடைகளில் மிக எளிதாகப் பெற்று விடலாம். கடுக்காயின் தோலை மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும். உள்ளிருக்கும் பருப்பை நாம் பயன்படுத்தக் கூடாது.
இதன் ஓட்டைப் பொடியாக்கி வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். கடுக்காயை மட்டுமே உண்டு உயிரோடு வாழலாம் என்று பழைய சித்த மருத்துவப் பாடல் கடுக்காயின் புகழை எடுத்து உரைக்கிறது.
இன்னொரு சித்த மருத்துவப் பாடலில் காலை இஞ்சி, பகல் சுக்கு, மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் 'கோலை ஊன்றி குறுகி நடப்பவரும் கூட காலை வீசி குலுங்கி நடப்பாராம்' என்று கடுக்காயின் சிறப்பை எடுத்து உரைக்கிறது.
அது மட்டும் அல்ல, கடுக்காய்த் துவையல் மலத்தைக் கட்டும்.கடுக்காய் லேகியம் உடலில் எதிர்ப்பு சக்தியை கூட்டும்.அதுவே ஒரு காயகல்ப மூலிகை தான். மொத்தத்தில் என்றும் இளமையுடன் இருந்து மரணத்தை தள்ளிப் போட கடுக்காய் ஒரு சிறந்த மூலிகை மருந்தாகும்.
இது உடலில் இருக்கும் செல்கள் சீக்கிரத்தில் இறக்காமல் பார்த்துக் கொள்வதால் முதுமை அவ்வளவு சீக்கிரத்தில் நம்மை நெருங்குவது இல்லை. ஏன் மரணமும் கூடத் தான்!
அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.
கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.
கடுக்காயின் பலன்கள்
கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.
ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு. கடுக்காய் வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் அனைத்தையும் ஆற்றிடும் வல்லமை பெற்றது.
மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும். பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும். தினமும் இரவு உணவுக்குபின் அரை டேபிள் ஸ்பூன் கடுக்காய் பொடி தண்ணீரில் கலந்து குடிக்கவும் . இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications