குதிரைவாலி அரிசி.. அடுத்து கம்பு, அப்பறம் ராகி.. நீரிழிவு நோயாளியின் நண்பன் "சிறுதானியம்".. அற்புதம்
சென்னை: சிறுதானியங்களை நோக்கி, சமூகம் திரும்பி கொண்டிருக்கிறது.. அந்தவகையில், அரிசி மற்றும் கோதுமை உணவுகளுடன் ஒப்பிடுகையில் அதிக சத்துக்களை கொண்டது குதிரைவாலி.. கோதுமையில் உள்ள நார்ச்சத்தின் அளவை விட 6 மடங்கு நார்ச்சத்து இந்த குதிரைவாலி அரிசியில் இருக்கிறது என்றால் பாருங்களேன்.
பொதுவாக அரிசியை எடுத்துக் கொண்டால், 78.2 கிராம் கார்போ ஹைட்ரேட்டும், 1 கிராம் நார்ச்சத்து மட்டுமே இருக்கிறது.. அதனால்தான் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அரிசி எடுத்து கொள்வதை முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். அரிசிக்கு பதிலாக சிறுதானிய உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது, சர்க்கரை நோய் கட்டுக்குள் வருவதுடன், ரத்த சர்க்கரை ஏற்படாமல் தடுக்கும்..

சிறுதானியங்கள்: அதேசமயம், சில வகை சிறுதானிய உணவுகளை எடுத்துக் கொள்வது உங்களின் சர்க்கரை அளவையும் கூட்டிவிடும்.. காரணம், அந்த சிறுதானியங்களையும் மாவாக்கி களி அல்லது கூழ் வடிவில் தான் பலரும் எடுத்து கொள்கிறார்கள்.. இதனை மாவு வடிவில் எடுத்துக் கொள்வதால் அதில் உள்ள நார்ச்சத்து மொத்தமாகவே போய்விடுவதுடன் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்து விடும் என்கிறார்கள் நிபுணர்கள்.
இந்த சிறுதானியங்களில் புரதச்சத்து, செரிமானத்துக்கு அவசியமான நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், நுண்ணூட்ட சத்துக்கள் போன்றவை அனைத்தும் உள்ளன...
நார்ச்சத்து: உதாரணத்துக்கு நார்ச்சத்து மிகுந்த சாமையை எடுத்துக் கொண்டால், இது செரிமானத்தை மெதுவாக்கி இன்சுலின் சுரப்பை தூண்டி விடுகிறது.. ரத்தத்தில் சர்க்கரை அளவை சரியான அளவில் வைத்திருக்கவும் உதவுகிறது.. இந்த சாமையின் சிறிய தினை செதில்களில் 52.11 என்ற மிதமான கிளைசெமிக் குறியீட்டை கொண்டிருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு சாமை நல்லது. கைக்குத்தலாக உமி நீக்கி பயன்படுத்தும்போது இதன் நார்ச்சத்துக்கள் முழுமையாக நமக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது.
கேழ்வரகு என்று சொல்லக்கூடிய ராகியில், பைட்டோகெமிக்கல்கள் அடங்கியிருக்கிறது.. இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பேருதவி புரிகிறது.. நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்த தானியமாக கேழ்வரகு விளங்குகிற.. இதனால், எலும்புகள் வலுவாவதுடன், செரிமானமும் எளிதாகும்.. எலும்பு, மூட்டுகளுக்கு இந்த ராகி நல்லது.
குதிரைவாலி: குதிரைவாலி அரிசியில் வைட்டமின் A, B, C, D, K, இரும்புச்சத்துக்கள், மெக்னீஷியம், காப்பர் போன்ற சத்துகள் நிறைந்திருக்கின்றன.. உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், பி கரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், தயமின், ரிபோஃப்ளேவின் என ஏகப்பட்ட சத்துக்கள் அடங்கி உள்ளன. 65.5 கிராம் கார்போ ஹைட்ரேட்டும் 13.6 நார்ச்சத்தும் உள்ளது
அதாவது, 25 கிராம் குதிரை வாலியை சமைத்தால், 75 கிராம் முதல் 90 கிராம் வரை சாப்பாடு கிடைக்குமாம்.. இதில் கிட்டத்தட்ட 65 கலோரிகள் வரை கிடைக்கும் என்கிறார்கள்.
சாமை: சர்க்கரை நோயாளிகளுக்கேற்ற உணவாக இந்த அரிசி உள்ளது.. கார்போஹைட்ரேட் வேகமாக செரிப்பதை இந்த குதிரைவாலி அரிசி தாமதப்படுத்துவதுடன், உடலில் குளுக்கோஸ் அதிகரிப்பும் கட்டுப்படுத்தப்படுகிறது. குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதால், இந்த உணவை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்கக்கூடாது என்கிறார்கள்.
வரகில் புரோட்டீன், கால்சியம், வைட்டமின் B, நுண்ணூட்ட சத்துக்கள், நார்ச்சத்து நிறைந்துள்ளன. கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டுவதுடன், கண் நரம்புகளுக்கு இந்த வரகு ஏற்றது. கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்புகள், பற்களின் செயல்பாட்டுக்கு உதவுகிறது.. நிணநீர் மண்டலத்தை வலுவாக்கக்கூடியது.
டாக்டர்கள் ஆலோசனை: மொத்தத்தில் சிறுதானியங்கள் பல்வேறு நன்மைகளை தரக்கூடியது என்றாலும், அதை நாம் எந்த வடிவில், எந்த அளவுக்கு எடுத்து கொள்கிறோம் என்பதில்தான் முழுஆரோக்கியம் உள்ளது. எனவே, டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்று, இந்த சிறுதானியங்களை சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தி நன்மை அடையலாம்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications