லேப்டாப் பயன்படுத்தினால் புத்திர பாக்கியமே இருக்காதாம்.. "விந்தணு காலி!" இளசுகளே இந்த தப்பு வேண்டாம்
டெல்லி: நம்ம ஊரில் 90's கிட்ஸ் கல்யாணம் பெரும் போராட்டமாகவே இருந்து வருகிறது. இதற்கிடையே அத்துடன் இப்போது மற்றொரு பிரச்சினையும் சேர்ந்துவிட்டது. அதாவது ஆண்களுக்குக் குறிப்பாக 30 வயதைத் தாண்டிய ஆண்கள் லேப்டாப்களை அதிகம் பயன்படுத்துவது அவர்களின் விந்தணுக்களைப் பாதிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
இந்த காலத்தில் வேலைக்கும் சரி, ரிலாக்ஸாக பொழுதைக் கழிக்கவும் சரி லேப்டாப்கள் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டன. லேப்டாப்களை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்பதே அது நமக்குக் கிடைக்கும் மிகப் பெரிய சவுகரியம்.

இருப்பினும், இதனால் சில பிரச்சினைகளும் ஏற்படுகிறது. குறிப்பாக ஆண்களுக்கு இதனால் விந்தணு குறைபாடு பிரச்சினை கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
லேப்டாப்: நீண்ட நேரம் லேப்டாப்களை மடி மீது வைத்துப் பயன்படுத்துவது ஆண்களிடையே மலட்டுத்தன்மையை அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக மருத்துவர் ரூபி யாதவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இதற்கான ஆதாரங்கள் கலவையாக இருந்தாலும் 2024ஆம் ஆண்டில் வெளியான ஒரு ஆய்வு முடிவுகள் லேப்டாப் மற்றும் செல்போன்களில் இருந்து வெளிவரும் மின்காந்த புலங்கள் மலட்டுத்தன்மையை அதிகரிக்கும் கூறுகிறது.
இது ஸ்க்ரோடல் ஹைபர்தர்மியாவை ஏற்படுத்தும்.. வெப்பம் அதிகரிப்பதால் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் ஏற்பட்டு. அது நமது டிஎன்ஏவை சேதப்படுத்துகிறது. இது விந்தணு தரத்தையும் பாதிக்கிறது" என்றார்.

எச்சரிக்கை: இந்த விவகாரம் குறித்து மற்றொரு மருத்துவர் கனிக்கா மல்ஹோத்ரா மேலும் கூறுகையில், "விந்தணு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அது உடல் வெப்பத்தை விட சற்று குளிர்ச்சியாக இருக்க வேண்டும். நமது உடல் இயற்கையாகவே அப்படி தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மடி மீது வைத்து லேப்டாப்களை அதிகளவில் பயன்படுத்தும் போது அது விந்தணுக்களின் வளர்ச்சியைப் பாதிக்கும்.. விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் இயக்கத்தைக் குறைத்து மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும்" என்றார்..
அப்போ லேப்டாப் யூஸ் செய்யும் அனைவருக்கும் இந்த பிரச்சனை வருமா.. சரி செய்ய வாய்ப்பே இல்லையா என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். ஆனால், நாம் லேப்டாப்களை பயன்படுத்தும் முறையைக் கொஞ்சம் மாற்றினாலே இந்த பிரச்சினையைச் சரி செய்யலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
எப்படி சமாளிக்கலாம்: இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில், "லேப்டாப்களை நேரடியாக மடி மீது வைத்துப் பயன்படுத்துவதைத் தவிருங்கள். மேஜை மீது வைத்துப் பயன்படுத்துங்கள். அப்படி இல்லை என்றால் கூலிங் பேட் வைத்துக் கொள்ளுங்கள். இது ஸ்க்ரோடல் பகுதியில் வெப்பம் அதிகரிப்பதைத் தடுக்கும். மேலும், உடல் வெப்பம் அதிகரிப்பதையும் இது தடுக்கும்" என்றார்.
வாழ்க்கை முறை மாற்றத்தால் இப்போது கருவுறாமை என்பது மிகப் பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது. இப்போது சுமார் 15-20% இளம் தம்பதிகள் கருத்தரிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். கடந்த 2005ஆம் ஆண்டில் இருந்த விந்தணு எண்ணிக்கையும் இயக்கமும் குறைந்து வருகிறது. இதற்கு லேப்டாப் மற்றும் செல்போன் பயன்பாடு முக்கிய காரணமாகும்.
விந்தணு சிக்கல்: 30 வயதைத் தாண்டிவிட்டால் ஆண்களுக்கு விந்தணு சிக்கல் அதிகரிக்கிறது. எனவே 30 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நினைக்கும் ஆண்கள், உடலைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக லேப்டாப்பை மடிமீது வைத்துப் பயன்படுத்துவதை மொத்தமாக தவிர்க்கவும். 30 வயதாகும் 90'ஸ் கிட்களே இதை மட்டும் மறக்கவே மறக்காதீர்கள்..












Click it and Unblock the Notifications