பெருங்குடல் கேன்சர்.. சூரிய ஒளியில் வைட்டமின் D பெற சரியான நேரம் எது? வைட்டமின் டி சத்துக்கள் உணவு?
சென்னை: வைட்டமின் D நம்முடைய உடலுக்கு ஏன் தேவைப்படுகின்றன.. எலும்புகள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவக்கூடியதுதான் இந்த வைட்டமின் D.. உடலில் இந்த வைட்டமின் குறைந்தால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? வைட்டமின் D குறைந்துள்ளதை என்பதை அறிய உதவும் அறிகுறிகள் என்னென்ன? வைட்டமின் D சத்தினை எந்தெந்த உணவுகளின் மூலம் பெறலாம். இவைகளை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
எலும்புகளின் ஆரோக்கியம், தசை செயல்பாட்டை ஒழுங்குபடுத்துதல், மனநிலையை மேம்படுத்துதல், உடலில் கால்சியம் சத்தை உறிஞ்சவும் என பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு வைட்டமின் D அவசியமாகிறது.

வைட்டமின் டி குறைவு - அறிகுறிகள்
வைட்டமின் D உடலில் குறைவாக இருந்தால், அதிகப்படியான உடல் சோர்வு காணப்படும்.. லேசாக கீழே விழுந்தாலும் எலும்பு முறிவு ஏற்படும்.. மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு எலும்புத்தேய்மானம் ஏற்படும்.. இவையெல்லாம் வைட்டமின் D குறைப்பாட்டின் அறிகுறிகளாகும்.
ரத்தத்தில் குறைந்த அளவில் வைட்டமின் D உள்ளவர்களுக்கு, அதிக அளவு வைட்டமின் D உள்ளவர்களை விட பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 31 சதவீதம் அதிகமாக உள்ளதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
வைட்டமின் D நமக்கு உடலில் இல்லாமல் போனால், அதிக சிக்கல்களை வாழ்நாளில் சந்திக்க நேரிடும்.. வைட்டமின்கள் இல்லாவிட்டால், கால்சியம், பாஸ்பரஸ் உறிஞ்சப்படுவதில்லை..
வைட்டமின் D குறைந்தால் ஏற்படும் நோய்கள்
உடலில் வைட்டமின் D குறைந்தால் எலும்பின் அடர்த்தி குறைந்து எளிதில் எலும்பு முறிவு ஏற்படும்.. மேலும், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் பெரிதும் பாதிக்கப்படும். எலும்பின் அடர்த்தி குறையும்.. இதனால், எளிதில் எலும்பு முறிவும் ஏற்படலாம்.
அதுமட்டுமல்ல, நீரிழிவு நோய், எலும்பு அழற்சி, எலும்புப் புரை, தசை வலுவிழப்பு, தசைவலி, எலும்பு சார்ந்த நோய்கள், மூச்சுக்குழாய், சுவாசம் தொடர்பான தொற்றுப்பிரச்னைகள் ஏற்படலாம்.
சூரிய ஒளி பெற சரியான நேரம்
வைட்டமின் Dயின் சிறந்த ஆதாரம் காலை சூரிய ஒளியாகும்.. ஆனால், இந்த வைட்டமின் D சிறிய எலும்பு பிரச்சனைகள் முதல் பெரிய பிரச்சனைகள் வரை எக்கச்சக்கமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. சருமத்தின் மீது சூரிய ஒளி படும்போது அதிலுள்ள புற ஊதாக்கதிர்களை கொண்டு வைட்டமின் D உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே கர்ப்பிணிகளின் தசைகளுக்கும் இந்த சத்து முக்கியமான வைட்டமினாக உள்ளது..
சூரிய ஒளியில் வைட்டமின் D கிடைக்கிறது என்றாலும், அதை எப்படி பெறுவது தெரியும்? சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் D பெற மிகவும் சரியான நேரம் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையாகும்.. இந்த குறிப்பிட்ட நேரத்தில்தான், சூரியனின் கோணம் நமது பூமியில் அதிகபட்சமாக உள்ளது.. இதனால் புற ஊதா கதிர்களும் அதிகபட்சத்தை அடைகின்றன. எனவே, வைட்டமின் D தேவைப்படுவோர் காலை 10 முதல் 12 மணிக்குள் சூரிய ஒளியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
வைட்டமின் D பெற உதவும் உணவுகள்
குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருக்கும். இதுபோன்ற நேரங்களில் அல்லது ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் சூரிய ஒளி இல்லாத தருணங்களில் வைட்டமின் D சத்தினை உணவு மூலமாக பெறலாம்.
குறிப்பாக, சோயா, தேங்காய், பாதாம், ஓட்ஸ் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.. மத்தி மீனில் வைட்டமின் D உள்ளன.. அதாவது 100 கிராம் மத்தி மீனிலும் 4.8 மில்லி கிராம் வைட்டமின் D உள்ளதாம்.. அதேபோல, 100 கிராம் கானாங்கெளுத்தியில் 13.8 MCG வைட்டமின் D உள்ளது. சால்மன் மீனிலும் ஏராளமான பல சத்துக்கள் உள்ளன. முட்டையின் மஞ்சள் கரு, காளான், போன்றவற்றை கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications