முருங்கையின் மகத்துவம்.. முருங்கைப் பட்டை ரசம் தெரியுமா? மருத்துவ குணமுள்ள முருங்கை பூ! ஆயுள் கூடும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வளரும் குழந்தைகளுக்கும் சரி, கர்ப்பிணி பெண்களுக்கும் சரி, முருங்கையின் சத்துக்களை எப்படியாவது தந்துவிட வேண்டும் என்பார்கள். இதற்கு என்ன காரணம்? முருங்கை பூ, முருங்கை பட்டையின் பயன்கள் என்னென்ன? எந்தெந்த வகையில், முருங்கைப் பூக்களை உணவில் சேர்த்து கொள்ளலாம்? இதனால் ஏற்படக்கூடிய மருத்துவ நன்மைகள் என்னென்ன? என்பதை பற்றியெல்லாம் இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

பல்வேறு நோய்களை குணப்படுத்தக்கூடிய தன்மை முருங்கை பட்டைகளுக்கு உண்டு.. இந்த முருங்கையின் பட்டையை உலர்த்தி தூளாக்கி, தலைவலி, காய்ச்சல் , மூட்டுவலி, நரம்பு பாதிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு உபயோகப்படுத்தலாம்.

முருங்கைப் பட்டைகள்

கீல்வாதம் தொந்தரவு இருந்தால், முருங்கை பட்டையுடன் கடுகு சேர்த்து விழுதாக அரைத்து பூசலாம்.. முருங்கை பட்டை தூளுடன், குப்பைமேனி இலையின் சாறு, தேங்காய் எண்ணெய் சிறிது சேர்த்து நன்றாக காய்ச்சி எடுத்து கொண்டால், வீக்கங்கள், கட்டிகள், புண்கள், சொறி, சிரங்கு, போன்ற சரும தொந்தரவுகளுக்கு பயன்படுத்தலாம்.அதேபோல, முருங்கையின் பட்டை சாறுடன், குப்பைமேனி சாறும் கலந்து, தேங்காய் எண்ணெய்யில் சேர்த்து காய்ச்சி வைத்து கொண்டும் பயன்படுத்தலாம். காதுவலி இருந்தாலும்,முருங்கையின் பட்டையே தீர்வை கொடுக்கும். தரும்..முருங்கை பட்டை ரசம்அன்றைய காலத்தில், நம்முடைய முன்னோர்கள் இந்த முருங்கையின் பட்டையை வைத்து ரசம் வைப்பார்கள்.. அதாவது, இப்பட்டையின் மீதுள்ள தோலை நீக்கிவிட்டு, நீரில் போட்டு கொதிக்க விட்டு, வடிகட்டி கொள்ளவேண்டும். இந்த நீரை பயன்படுத்தி, மிளகு சேர்த்து ரசம் வைக்கலாம்.. அல்லது சூப் போலவும் பயன்படுத்தலாம்.இதனை குடிப்பதால், உள்ளுறுப்புகள் சீராக இயங்க செய்கிறது.. ரத்தம் சுத்திகரிப்பாகிறது.. அஜீரண கோளாறுகள், நீங்கி குடல் ஆரோக்கியமாகிறது.

முருங்கை பூக்களின் நன்மைகள்

அதேபோல முருங்கையின் பூக்களை எடுத்துக் கொண்டாலும் மருத்துவ குணம் நிறைந்தது.. இப்பூக்களில் நிறைய பொட்டாசியம் உள்ளன.. நரம்புகள் செயலிழந்தால், அதை இந்த முருங்கை பூவில் கசாயம் போல வைத்து குடிப்பதால் பலன் கிடைக்கும்..சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது முருங்கைப்பூக்கள்..

அதேபோல, மாதவிலக்கு நேரத்தில் அதிகமான உதிரப்போக்கை கட்டுப்படுத்தக்கூடிய தன்மை இப்பூக்களுக்கு உண்டு.. குழந்தைகளின் நினைவாற்றலுக்கு முருங்கைப்பூ பெரிதும் உதவுகிறது.

எனவே, முருங்கைப்பூவில் அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து, அதில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து பிள்ளைகளுக்கு தரும்போது, அவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும். மனம் அமைதி பெறும். இந்த பொடியை 5 கிராம் வீதம் தேன் கலந்து தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால், கண்ணில் ஏற்படும் வெண்படலம் மாறும்..

முருங்கை பூக்கள்

முருங்கைப் பூக்களை விழுதாக அரைத்து பாலில் சேர்த்து கொதிக்கவிட்டு பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் குடித்து வரும்போது தாம்பத்ய உறவில் நாட்டம் ஏற்படும்.. இந்த பூக்களை நிழலில் உலர்த்தி பவுடர் செய்து சாப்பிடும்போது, , வாதம், கபம், ரத்த சோகை, கிட்னியில் கற்கள், மன அழுத்தம், பயம், கோபம், அசதி, தலைவலி என அத்தனை பிரச்சனைகளும் தீர்கின்றன..

இந்த பவுடரில் தேன்கலந்து சாப்பிட்டால் பார்வைத்திறன் பெருகும்.. இந்த பவுடரை தேனில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டால் ஆண்மை பெருகும். நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குணமாகி, கர்ப்பப்பை பலமடையும்.. எனவே, மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று இந்த முருங்கை பூக்களை பயன்படுத்த வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+