கோவைக்காயின் ஜூஸ் சுகரை கன்ட்ரோல் செய்யும்.. சரும நோய், கிட்னி கல், அல்சருக்கு மருந்தாகும் கோவக்காய்
சென்னை: கோவைக்காய்கள், அல்சர் உள்ளவர்களுக்கு நல்லது.. சிறுநீரக கற்களை கரைக்கக்கூடிய தன்மை கோவைக்காயில் உள்ளன.. கோவைக்காயில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட் சத்துக்கள் மற்றும் பீடா கரோடின் ஆகியவை புற்றுநோய் உண்டாகுவதை தடுக்கக்கூடியவை.. கோவைக்காயில் உள்ள பொட்டாசியம் சத்து இதய செயல்பாடுகளை ஊக்குவிக்கக்கூடியவை.. இந்த கோவைக்காயின் பிற நன்மைகள் என்னென்ன தெரியுமா?
கோவைக்காயில் க்ரிட்டோசாந்தின் லைக்கோப்பீன், தையாமின், ரிபோஃப் பாவின், நையாசின், அஸ்கார்பிக் அமிலம். குக்கர்பிட்டாசின், லுப்பியாஸ், லினோயிக் அமிலம் சைலோக்னுக்கான் உள்ளிட்டவை நிறைந்துள்ளதால், சத்தான காய்கறிகளில் ஒன்றாக இது திகழ்கிறது.

அலர்ஜி பண்புகள்
கோவைக்காயில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.. அத்துடன், நாள்பட்ட வீக்கம் இதய நோய், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு சுகாதார நிலைமைகளுடன் இந்த சத்துக்காய் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் வீக்கத்தை குறைக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
உடலிலுள்ள பித்தம், அதிகப்படியான ரத்தப்பெருக்கு, வாயு, வயிற்றிலுள்ள பூச்சி போன்ற தொந்தரவுகளுக்கு முடிவு கட்டும் சிறந்த மருந்தாகும்.. கோவக்காயிலுள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லது.. இதனால் குடல் இயக்கமும் ஊக்குவிக்கப்படுகிறது.. மலச்சிக்கலும் தீர்கிறது..
சர்க்கரை நோயாளி
அமெரிக்க ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பள்ளியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், நீரிழிவு நோயின் வீர்யத்தை குறைக்கும் தன்மை கோவைக்காய்க்கு உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.. அதேபோல, சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்று பெங்களூரில் நடத்திய ஆராய்ச்சியிலும் நிரூபணமாகியிருக்கிறது.. எனவே, சரக்கரை நோய் தாக்கம் உள்ளவர்கள், கோவைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது...
சர்க்கரை நோய் வராதவர்களும் இதை சாப்பிடும்போது, நீரிழிவு நோய் வராமல் முன்கூட்டியே தடுக்கலாம். கோவைக்காய் சாற்றை அவ்வப்போது எடுத்து கொள்வதால் பக்க விளைவுகளும் ஏற்படாது.
வயிற்றுப்புண், வாய்ப்புண்
வாய்ப்புண், வயிற்றுப்புண்களால் அவதிப்படுபவர்கள், கோவைக்காய் பச்சடியை சாப்பிடலாம். குட்டி குட்டி துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகு தூள், சீரக தூள், சிறிது இஞ்சி சேர்த்து, கல் உப்பு கலந்து விட்டால் கோவைக்காய் பச்சடி தயார். வாரம் 2 நாள் பகல் உணவில் இப்படி சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்..
அல்லது பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண்ணும் குணமாகிவிடும். வயிற்றுப்புண் இருந்தால், வாரம் 2 நாள் கோவைக்காயை உணவில் சேர்த்து கொள்ளலாம்.. அல்லது ஒரே ஒரு கோவைக்காயை மோருடன் அரைத்து குடித்தாலும் வாய்ப்புண், வயிற்றுப்புண், அனைத்துவிதமான உஷ்ண கோளாறுகளும் நீங்கும்.
இலைகள் தண்டுகள்
கோவைக்காயின் இலைகளும், தண்டுகளும்கூட, மருத்துவ குணம் கொண்டவை.. நெஞ்சில் சேரும் கபத்தை வெளியேற்றக்கூடியவை.. வலியை குறைக்கும் தன்மை கொண்டவை.. இலை, தண்டு, இவைகளை கொண்டு தயாரிக்கப்படும் கஷாயம், மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு போன்றவற்றிற்கு நிவாரணம் தரும்..
புண்கள், பிற தோல்நோய்களால் அவதிப்பட்டு வந்தால் கோவைக்காயின் இலைகளை வெண்ணெயுடன் கலந்து தேய்க்கலாம்.. கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினாலே போதும், புண்கள் விரைவில் ஆறும்.
அல்லது அடிரை லிட்டர் நல்லெண்ணெயில், கால் லிட்டர் கோவை இலைச்சாறு கலந்து காய்ச்சி, தேமல், படை, பற்று போன்றவற்றின் மீது பூசிட அனைத்துமே குறையும். இந்த எண்ணெய்யை, ஆசனவாய் எரிச்சல் ஏற்படும்போது வெளிப்பூச்சாக பூசிவர எரிச்சல் குறையும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications