முருங்கை விதை எண்ணெய்.. சரும ஆரோக்கியம், தலைமுடி வளர்ச்சிக்கு முருங்கைக்காய் எண்ணெய்யின் மருத்துவம்
சென்னை: தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுத்தும் எண்ணெய்களில் மிக முக்கியமானது முருங்கை எண்ணெய்யாகும்.. இந்த முருங்கை எண்ணெய்யை எப்படி வீட்டிலேயே காய்ச்சலாம்? இதனால் பக்க விளைவுகள் வருமா? என்பதை பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.. அதேபோல முருங்கை எண்ணெயிலுள்ள சத்துக்கள் என்னென்ன? முருங்கை விதைகளை வைத்து எப்படி எண்ணெய் தயாரிப்பது? இவைகளை பற்றியும் இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் அபரிமிதமானவை.. நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச்சத்து நிறைந்தது. ரத்த விருத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது.. பெண்களுக்கு மாதவிடாய் வலியை குறைத்து, இளம்தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துகிறது.

முருங்கைக்கீரை சத்துக்கள்
மலச்சிக்கல், வயிறு உபாதைகள், சரும பாதிப்புகள், உடல் உஷ்ணம், இதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய், ஜீரணக் கோளாறு, பற்கள் பாதிப்பு போன்றவற்றை சரி செய்யக்கூடியது இந்த முருங்கைக்கீரை..
முருங்கை கீரையிலிருந்து முருங்கை எண்ணெய் தயாரிக்கலாம்.. இந்த முருங்கை எண்ணெயில் வைட்டமின் A, C, E, இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள், ஆன்டி ஆக்சிடெண்ட்டுகள் அடங்கியிருக்கின்றன. இந்த எண்ணெய்யை தலைக்கு தேய்க்கும்போது, ரத்த ஓட்டம் சீராக்கி தலைமுடி வளர்ச்சி அதிகமாகிறது.. பலவீனமான முடியும் உறுதியாகும்.
முருங்கை எண்ணெய்
அதேபோல, பக்க விளைவுகள் இல்லாத இந்த முருங்கை எண்ணெய்யை குழந்தைகளின் சுவாச கோளாறுகளுக்கும் பயன்படுத்தலாம்.. அதாவது, முருங்கைக்கீரை சுத்தம்செய்து, தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து காய்ச்சி, மெல்லிய துணியில் வடிகட்டி வைத்துக்கொண்டால் போதும்..
குழந்தையின் தலை, நெஞ்சு, இடுப்பு பகுதிகளில் சிறிது எண்ணெய்யை தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.
முருங்கை மரத்திலுள்ள அத்தனை பாகங்களுமே மருத்துவ குணம் கொண்டவை.. அந்தவகையில், முருங்கை விதைகளும் சத்துக்கள் நிறைந்தவை.
முருங்கைக்காய் விதைகள்
முருங்கை விதையில் ஆன்டி-ஆக்ஸிடண்ட், துத்தநாகம், வைட்டமின் A, C, B போன்ற சத்துக்கள் உள்ளன.. இதைத்தவிர 30 விதமான ஆன்டி- ஆக்ஸிடன்டுகள் அடங்கியிருக்கின்றன. அதனால்தான் ஆண்மை குறைபாடுகளை போக்க தயாராகும் லேகியங்களில் இந்த முருங்கை விதைகள் மூலப்பொருட்களாக சேர்க்கப்படுகின்றன.
முருங்கை விதைகளை கொண்டும் எண்ணெய் காய்ச்சலாம்.. இந்த முருங்கை விதைகள் கடைகளிலேயே கிடைக்கும்.. அல்லது முருங்கை காயிலிருந்து விதைகளை சேகரித்து வைத்து கொள்ளலாம்.. இந்த விதைகளை காயவைத்து இடித்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி பயன்படுத்தலாம்.
எண்ணெய் காய்ச்சுவது எப்படி
ஆனால், மரத்திலேயே காய்களை நன்றாக காயவிட்டு, அதன்பிறகு காய்களை உரித்து விதைகளை எடுப்பது சிறந்தது என்கிறார்கள்.. பிறகு இந்த விதைகளை எல்லாம் வெயிலில் காயவைத்து மிஷினில் ஆட்டி, எண்ணெய் தயாரிப்பார்கள்.
முருங்கை விதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெயில் அதிக அளவிலான ஆண்டிஆக்ஸிடென்ட்கள், வைட்டமின் E, கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
சருமம், தலைமுடி வளர்ச்சிக்கு
இது உடலிலுள்ள ஃபிரீ ரேடிகல்களை எதிர்த்து போராட செய்கின்றன.. ஃப்ரீ ரேடிக்கல் என்பது ரத்தம் மற்றும் திசுக்களில் பரவக்கூடிய நிலையற்ற மூலக்கூறுகளாகும். இது நம்முடைய உடலில் உள்ள திசுக்கள், சருமம், முடிக்கு தீங்கு விளைவித்து வயதை துரிதப்படுத்துவதால் வயதான தோற்றத்தை அளிக்கிறது..
ஆனால் முருங்கை எண்ணெய்யை பயன்படுத்தும்போது, ஃப்ரீ ரேடிகல்களை நடுநிலைபடுத்துவதன் மூலம், சருமத்தில் தோன்றும் சுருக்கங்கள் முன்கூட்டியே தடுக்கப்படுகின்றன.
முருங்கை எண்ணெய்யை சருமத்தில் தடவுவதால், சேதாரமடைந்த திசுக்கள் சீராகின்றன.. கண், கழுத்து பகுதிகளில் கருவளையம் இருந்தால், இந்த எண்ணெய்யை தடவலாம். தலைக்கு முருங்கை எண்ணெய் தடவும்போது, வறண்ட கூந்தலுக்கு ஈரப்பதம் கிடைக்கிறது.. இத்தனை நன்மையை தருவதால்தான், முருங்கை எண்ணெய் அழகு சாதன பொருட்களில் முக்கிய மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications