Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாவல் பழம் நன்மை.. சத்துக்கள் நிறைந்த நுரையீரல் நண்பன்.. நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ள நாவற்பழங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாவல் மரத்தின் இலைகளும், பழங்களும், விதைகளும், பட்டைகளும் அளவுக்கு அதிகமான சத்துக்களை கொண்டவை. உடல் எடை குறைப்பிலிருந்து நுரையீரல் பாதுகாப்பு வரை, நன்மைகளை தரக்கூடிய நாவல் பழங்களை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

சித்த மருத்துவத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை இந்த நாவல் மரங்கள். அதேபோல, ஆயுர்வேதா, யுனானி மற்றும் சீன மருத்துவ முறைகளிலும், நாவல் கொட்டைகள் மருந்தாகி கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் காரணம். வைட்டமின் C, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், ஃபோலிக் அமிலம் சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன.

jamun fruits naval seeds jamun leaves

நுரையீரல்: நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கக்கூடியது நாவல் பழங்கள்.. நுரையீரலை பலப்படுத்தி சீராக செயல்பட தூண்டுகிறது. குடல்புண்கள், வாய்ப்புண்கள் ஆற்றக்கூடிய சக்தி இந்த நாவல் பழங்களுக்கு உண்டு.. இப்பழத்தில் வைட்டமின் C நிறைந்திருப்பதால், சருமத்தை கவசம் போல பாதுகாக்கிறது. இளவயது சுருக்கமும் தள்ளிப்போடப்படுகிறது.

அஜீரண கோளாறு இருந்தால், இந்த பழங்களை தாராளமாக சாப்பிடலாம்.. இதனால் குடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.. சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும், நாவல் பழ விதைகளை காயவைத்து, பவுடர் செய்து, தயிருடன் சாப்பிடலாம். இதனால் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறிவிடும்.

ரத்த உற்பத்தி: அனீமியா தொந்தரவு உள்ளவர்களுக்கு கை கொடுக்கக்கூடியது இந்த நாவல் பழங்கள்.. இப்பழங்களை சாப்பிடுவதால், உடலில் ரத்த உற்பத்தி அதிகமாகும்.. கலோரி குறைந்த பழம் என்பதால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் ஆகும். இதனால், உடலிலுள்ள கெட்ட கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பும் அதிகரிக்க செய்கிறது. இதனால் இதய நோய்களும் வராமல் தடுக்கப்படுகின்றன.

ஞாபக சக்தியை அதிகரிக்க செய்வதால், இந்த பழத்தை வளரும் பிள்ளைகளுக்கு தர வேண்டும். மேலும், கால்சியம் நிறைந்த இந்த பழம், எலும்புகள், பற்கள் வலு பெறவும் துணை புரிகிறது.. அதேபோல, பற்களை பலப்படுத்த, நாவல் மர இலைகளையும் பற்பொடியாக பயன்படுத்தலாம். பாக்டீரியா எதிர்ப்பு திறன்களை கொண்டிருப்பதால், ஈறுகளில் ரத்த கசிவை இந்த இலைகள் தடுக்கின்றன.. எனவே, நாவல் இலையை காய வைத்து, பவுடராக்கி அடிக்கடி அதில் பல் தேய்த்து வந்தால் ஈறுகள் உறுதிப்படும்.

jamun fruits naval seeds jamun leaves

மாதவிடாய் தொந்தரவு: இந்த மரத்தின் பட்டையை, வெறுமனே தண்ணீரில் கொதிக்கவிட்டு, ஆறவைத்து குடித்து வந்தால், மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும் என்பார்கள்.

துவர்ப்பு நிறைந்த இந்த நாவல் பழம், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.. டைப்-2 வகை சர்க்கரை நோய் கொண்டவர்களுக்கு இது மிகவும் நல்லது. இந்த பழத்தை அப்படியே சாப்பிடலாம்.. அல்லது நாவல் பழத்தில் தினமும் ஜூஸ் தயாரித்து குடிக்கலாம். நாவல்பழத்தில் சர்க்கரையும் இருக்கத்தான் செய்யும் எனவே, அதன் விதையில் நார்ச்சத்து இருப்பதால் அதைப் பொடித்து நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.

jamun fruits naval seeds jamun leaves

சர்க்கரை தொல்லை: மேலும், இதன் விதையிலுள்ள, ஜம்போலைன் என்ற குளூக்கோசைட், உடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடுகளை தடுக்கக்கூடியதாம். எனவே, நாவல் பழம், நாவல் விதைகள், நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கக்கூடியது.

இந்த பழத்தின் விதைகளை இடித்து தூளாக்கி வைத்து கொண்டு, தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சிறுநீர்ப்போக்கு குறையும்.. அல்லது நாவல் பழ மரப்பட்டையையும் தூள் செய்து வைத்துக் கொண்டு இதனையும் வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம்..

jamun fruits naval seeds jamun leaves

நாவல் கொட்டை: அதேபோல, சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமானால், இந்த நாவல் கொட்டை பொடியுடன், வெந்தயப் பொடி, கடுக்காய் தோல் போன்றவற்றையும் சமபாகம் எடுத்து கலந்து கொள்ள வேண்டும். சுடுநீரில் இதனை ஒரு ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து காலையில் கால் டம்ளர் குடித்து வருவதால் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.

சில மாத்திரைகளால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியாதவர்களுக்குகூட, நாவல் கொட்டை பொடி கைகொடுத்து உதவுகிறது. அதனால், டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்று நாவல் கொட்டை பவுடரை நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்துவதே முறையான ஆரோக்கியமாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+