புறாக்கள் எச்சம்.. பறவை வளர்த்தால் இதை மட்டும் செய்யாதீங்க.. நுரையீரலை காலி செய்யும் புறாவின் எச்சம்
சென்னை: புறாக்கள் மட்டுமல்ல, அனைத்து பறவைகளின் எச்சத்தில் இருந்தும் மனிதர்களுக்கு பாதிப்புகள், ஆபத்துகள் வரலாம் என்கிறார்கள். அதாவது, புறாக்களின் எச்சங்களால் 60-க்கும் அதிகமான நோய்கள் ஏற்படலாம் என ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
அதிகமாக சிகரெட் பிடிப்பது, காற்று மாசு போன்ற காரணங்களினால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், புறா எச்சத்தினால் நுரையீரல் செயலிழப்பது அனைத்தையும் விட கொடூரமான பாதிப்பாகும். ஆனால், இதற்கு போதுமான விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது.

புறாக்கள்: தண்ணீர், உணவு எங்கு இருக்கிறதோ, அங்கே கூட்டமாக வாழக்கூடியவை புறாக்கள்.. பலரும், தங்கள் வீடுகளில் புறாக்களையும் வளர்க்கிறார்கள் இந்த புறாவின் எச்சங்கள் மனிதர்களுக்கு உடல்நல கோளாறுகளை தரக்கூடியவை. புறாவின் எச்சங்கள், புறாக்களைவிட, மனிதர்களுக்குதான் அதிக ஆபத்தை தருமாம்..
புறாக்களின் எச்சங்களை தொட்டால்தான் பாதிப்பு என்றில்லை.. புறாக்களின் எச்சங்கள் விழுந்த தண்ணீர், அல்லது எச்சங்கள் உள்ள பகுதிகளில் புழங்குவது போன்றவை இருந்தாலே, காற்றின் மூலம் ஆபத்து பரவிவிடும். இது மனிதர்களுக்கு நுரையீரல் பாதிப்பையும் வித்திட செய்துவிடும்.
புறாக்களின் இறக்கையில் இருக்கும் செல் பூச்சிகள், எச்சங்களில் இருந்து வெளி வரும் பூஞ்சைகள் போன்றவை சுவாசிக்கும் போது நம்முடைய நுரையீரலுக்குள் செல்கிறது. இதுவே நாளடைவில் நோய் எதிர்ப்பு திறனை குறைத்து, நுரையீரலில் தொற்று பரவி பாதிப்பை ஏற்படுத்த செய்கிறது.. இதனை கண்டறிவது கடினம் என்பதால்தான், தொற்றுகள் நுரையீரல் திசுக்களை செயலற்றதாக்கி விடுகிறது.
எச்சங்கள்: முக்கியமாக, அஸ்பெர்ஜில்லோசிஸ் போன்ற உயிரை பறிக்கும் நுண்ணுயிரிகளை பரப்பக்கூடியவை.. இதனால், கடுமையாக பாதிக்கப்படுபவர்கள் சர்க்கரை நோயாளிகளும், உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களும்தான்.
காரணம், இந்த எச்சங்கள் அதிக அசிடிக் தன்மையை கொண்டவை... எனவே, இது காற்றில் பரவி, ஆஸ்துமா நோயாளிகளை, மிக மோசமாக தாக்கிவிடும்.. ஆஸ்துமாவை இன்னும் அதிகமாக்கிவிடும். இதனால், நுரையீரல் தொடர்பான அத்தனை பாதிப்புகளும் ஏற்பட்டுவிடும். அதேபோல, கேன்சர், எச்ஐவி, கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் புறாக்களை நெருங்கவே கூடாது.
நுரையீரல்: புறா எச்சத்திலுள்ள பூஞ்சைகள் நமக்குள் சென்று நுரையீரல் திசுக்களில் வீக்கத்தை ஏற்படுத்திவிடும்.. நுரையீரல் வீக்கம் இருந்தால், எளிதில் சுவாசிக்க முடியாது.. இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவாது என்றாலும், புறா உட்பட மற்ற பறவைகளையும் வீட்டில் வளர்ப்பவர்களுக்கு நுரையீரல் வீக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு.
அதேபோல, Bird Fancier's flu என்று சொல்லப்படும் தொற்றானது, கடும் அலர்ஜியை ஏற்படுத்தக்கூடியவை.. இது பறவைகளின் இறக்கைகளிலிருந்தும், காய்ந்த பறவை எச்சங்களிலிருந்தும் பரவக்கூடியது. இதன்காரணமாக ஹைப்பர்சென்சிடிவிட்டி நிமோடிட்டிஸ் என்ற ஆபத்தான நுரையீல் பாதிப்பு ஏற்பட்டுவிடும். அப்படி பாதிப்பு ஏற்பட்டால், ஆரம்ப கட்டத்தில் மட்டுமே சரி செய்ய முடியுமாம்.
கழிவுகள்: ஹைப்பர்சென்சிடிவ் நிமோனிட்டிஸ் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருந்தாலும், புறாக்களின் எச்சம் முதன்மை காரணமாக இருக்கிறது.. எனவே, எப்போதுமே பறவைகளுக்கு வீடுகளுக்கு பக்கத்தில் உணவு கொடுக்கக்கூடாது.. மாடிகள், அலுவலக கட்டிடங்களில் புறாக்கள் வாழ்வதை தடுக்க வேண்டும்.. அதிலும் நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள், பறவைகள் வளர்ப்பதையே விட்டுவிட வேண்டும்..
பறவைகளின் எச்சங்களை காய்வதற்குள் அகற்றிவிட வேண்டும். வாரம் 2 முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். புறாக்கள் உட்பட பறவைகளிடம் அதிக நெருக்கம் காட்டக்கூடாது.. கழிவுகளை சுத்தம்போது, மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும். கைகளில் கிளவுஸ் அணிந்து கொள்ள வேண்டும். கழிவுகளை அகற்றியதுமே, கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் கைகளை கழுவாமல் முகத்தில் கை வைக்கவோ, உணவு சாப்பிடவோ கூடாது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications