மழை காலத்தில் மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து..கண்டிப்பாக ‘இதை’ செய்யனும்! அரசு கொடுக்கும் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தற்போது இன்புளூயன்சா காய்ச்சல் பரவி வருவதாகவும் மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி இருக்கிறது. மேலும், டெங்கு காய்ச்சல் பரவலோடு மழைக்காலத்தில் பரவும் இன்புளூயன்சா காய்ச்சலும் தற்போது அதிகமாக பரவி வருவதாக, மக்கள் முகக் கவசம் அணிவது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துவிட்டது. இதனையடுத்து அரசு தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுகப்பட்டுள்ளது. குறிப்பாக இதுபோன்ற காலங்களில் எலி காய்ச்சல், காலரா, டைபாய்டு, மலேரியா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் அதிகமாக பரவும்.

health tamil nadu flu

இதனால் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்களால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக குழந்தைகள் அதிகமாக காய்ச்சலால் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

தற்போது கூட தமிழகத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் பல வைரஸ் காய்ச்சல்களும் பரவி வருகிறது. சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பூர், திருவள்ளூவர், தேனி ,மதுரை, நெல்லை, தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது. இந்த 8 மாதத்தில் மட்டும் 15,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவித்தாலும், பாதிப்பு இன்னும் கூடுதலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் கூறுகிறது.

தமிழகத்தில் ஏறத்தாழ டெங்கு நோயால் ஏழு பேர் பலியாகி உள்ளனர். பொதுவாக டெங்கு கொசு என்பது ஒரே நேரத்தில் ஆறு பேரை கடித்து அதன் பாதிப்பை ஏற்படுத்தும், ஏற்கனவே குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அதிக பாதிப்பில் இருந்தது. தற்போது அந்த மாநிலக்காட்டிலும் தமிழகத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது இன்புளூயன்சா காய்ச்சல் பரவி வருவதாகவும் மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி இருக்கிறது. டெங்கு காய்ச்சல் பரவலோடு மழைக்காலத்தில் பரவும் இன்புளூயன்சா காய்ச்சலும் தற்போது அதிகமாக பரவி வருவதாகவும், காய்ச்சல், சளி, தொண்டையில் எரிச்சல், த்ரோட் இன்ஃபெக்சன் உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

மேலும் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல், நுரையீரல் தொற்றும் அதிகரித்து வரும் நிலையில்ம் இருமல், காய்ச்சல், உடல் சோர்வு, தொண்டை அலர்ஜி, உடல் வலி , தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அல்லது தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், நோயின் தீவிரத்தை பொறுத்து உடனடியாக சிகிச்சை பெறுவது அவசியம் எனக் கூறுகின்றனர்.

மேலும் மிதமான பாதிப்புகள் இருந்தால் ஆன்டிவைரல் மருந்துகள் மருத்துவ பரிசோதனைகள் தேவையில்லை. அதே நேரத்தில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தீவிர பாதிப்பு இருந்தால் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மூன்று வயது குறைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

வைரஸ் அறிகுறிகள் இருப்பவர்கள் முக கவசம் அணிய வேண்டும், சமுதாய இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் தீவிர பாதிப்பு உள்ளவர்களை அதிக கவனத்துடன் கையாள வேண்டும். மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குறைதல், சீரற்ற இதயத் துடிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், தேவையான நோயாளிகளுக்கு தடுப்பூசிகள் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் , மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள், வார்டுகள், படுக்கைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் எனவும் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+