மூளையை தின்னும் "அமீபா" தேங்கியிருக்கும் நீரில் குளிக்க கூடாது.. மக்கள் நல்வாழ்வுத்துறை அட்வைஸ்
சென்னை: அமீபிக் மெனிங்கோ என் செபாலிடிஸ் என்ற மூளையை தின்னும் அமீபா வகை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கேரளாவில் 3 பேர் இந்த அமீபா பாதிப்புக்கு உயிரிழந்த நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டு இருக்கிறது. அது குறித்து இங்கே பார்க்கலாம்.
கேரளாவில் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்ற அரிய வகை மூளை நோயால் மூன்றாவது மரணம் ஏற்பட்டுள்ளது. இந்த அரிய வகை நோய் குழந்தைகளை தாக்கவே வாய்ப்புகள் அதிகம். இதனால் குழந்தைகளை பெற்றோர் மிகவும் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தினார்.

குறிப்பாக அசுத்தமான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், நீர்நிலைகளுக்குள் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தினார். அசுத்தமான நீரில் தான் இந்த அமீபா எளிதாக வளரும். எனவே, இந்த நோய் பரவுவதைத் தடுக்க நீச்சல் குளங்களை நன்கு குளோரினேட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மூக்கு வழியாக உடலுக்குள் நுழையும். உடலுக்கு நுழைந்தவுடன் இது முதலில் குறிவைப்பது மூளையை தான்.. நமது உடலில் உள்ள திசுக்களை உணவாக சாப்பிட்டே இது வளர்கிறது.. இந்த அமீபா பாதிப்பு ஏற்பட்டால் முதலில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை ஏற்படும். நோய் பாதிப்பு அதிகரிக்கும் போது குழப்பம், வலிப்பு, கோமா மற்றும் போன்ற சீரிஸயான பாதிப்புகளும் கூட ஏற்படும்.

நோய் பாதிப்பு ஏற்பட்ட 1 முதல் 12 நாட்களில் இந்த அறிகுறிகள் ஏற்பட தொடங்கும்.. சட்டென இதன் தீவிரம் அதிகரிக்கும் நிலையில், 5 - 18 நாட்களில் இது தீவிர பாதிப்பை ஏற்படுத்தலாம். இது கொரோனா போல ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது என்பதால் நாம் கவலைப்பட தேவையில்லை. அமீபா இருக்கும் அசுத்தமான நன்னீரில் குளிக்கும் போது மட்டுமே இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா! 3ஆவது உயிரிழப்பு.. இது எப்படி பரவும்! தமிழகத்திற்கு ஹை அலர்ட் தேவையா
மற்றபடி பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவதில்லை. கேரளாவில் மூளையை தின்னும் அமீபாவிற்கு 3 பேர் உயிரிழந்த நிலையில் தமிழக அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கீழ்க்கண்ட அறிவுறுத்தல்கள் அனைத்து மாநகராட்சி சுகாதார அலுவலர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுதியுள்ளது.
* தேங்கியிருக்கும் நீரில் குளிப்பதை பொதுமக்கள், குழந்தைகள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* நீர் நிலைகள், குளங்கள் ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும்.
* தனியார், உள்ளாட்சி அமைப்புகளின் நீச்சல் குளங்களில் போதுமான குளோரினேஷன் பராமரிக்கப்பட வேண்டும்.
-
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
"ஓவர் திங்கிங் உங்களை மெதுவாக அழிக்கிறதா?... இந்த 5 விஷயங்களை செய்தால் வாழ்க்கையே மாறலாம்!" -
சப்ஜா விதைகளை இப்படி சாப்பிட்டால் தான் முழு பலன் கிடைக்கும்: யாருக்கெல்லாம் இது ஆபத்து? -
தினமும் ஒரு கைப்பிடி மொச்சை பயறு சாப்பிட்டால் உடலில் இவ்வளவு மாற்றங்களா? மிஸ் பண்ணிடாதீங்க!











Click it and Unblock the Notifications