கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா! 3ஆவது உயிரிழப்பு.. இது எப்படி பரவும்! தமிழகத்திற்கு ஹை அலர்ட் தேவையா
திருவனந்தபுரம்: நமது அண்டை மாநிலமான கேரளாவில் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்ற அரிய வகை நோயால் மூன்றாவது மரணம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்த நிலையில், சில முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கேரளாவில் இந்த உயிரிழப்புகள் நடந்துள்ளதால், தமிழக மக்களும் அச்சத்தில் உள்ளனர். இது மக்களிடையே எப்படி பரவும் முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
இந்த காலத்தில் பல வகையான பாதிப்புகள் திடீர் திடீரென ஏற்படுகிறது. அவை சில நேரங்களில் மோசமான உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிறது. அப்படி தான் ஒரு வகை அமீபா பாதிப்பு இப்போது பகீர் கிளப்பி வருகிறது.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்ற அரிய வகை மூளை நோயால் மூன்றாவது மரணம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மூளையை உண்ணும் அமீபா: இந்த அரிய வகை நோய் குழந்தைகளை தாக்கவே வாய்ப்புகள் அதிகம். இதனால் குழந்தைகளை பெற்றோர் மிகவும் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.. குறிப்பாக அசுத்தமான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், நீர்நிலைகளுக்குள் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தினார்.
அசுத்தமான நீரில் சான் இந்த மூளையை நேரடியாக பாதிக்கும் அமீபா எளிதாக வளரும். எனவே, இந்த நோய் பரவுவதைத் தடுக்க நீச்சல் குளங்களை நன்கு குளோரினேட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கலந்து கொண்டு, நோய் பரவாமல் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை விளக்கியுள்ளார்.
மூன்றாவது மரணம்: கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் இந்த மூளையை உண்ணும் அமீபா மூன்றாவது மரணத்தை ஏற்படுத்தியுள்ளது.. இதற்கு முன்பு கண்ணூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் இரண்டு பேர் இந்த அமீபா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இப்போது கோழிக்கோடு பகுதியில் 3வது மரணம் ஏற்பட்டுள்ளது.
கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 14 வயதான மிருதுல் என்ற சிறுவன் ஜூன் 24ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனில்லாமல் அந்த சிறுவன் சமீபத்தில் உயிரிழந்தான். மூளையை உண்ணும் அமீபா பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அது பலன் தரவில்லை என்றே கூறப்படுகிறது.
எப்படி நுழைகிறது: இந்த அமீபா பொதுவாக "மூளை உண்ணும் அமீபா" என்று அழைக்கப்படுகிறது. இது அசுத்தமான நன்னீர் மூலம் தான் பரவும்.. பொதுவாகவே இது மூக்கு வழியாக உடலுக்குள் நுழையும். உடலுக்கு நுழைந்தவுடன் இது முதலில் குறிவைப்பது மூளையை தான்.. நமது உடலில் உள்ள திசுக்களை உணவாக சாப்பிட்டே இது வளர்க்கிறது..
இந்த அமீபா பாதிப்பு ஏற்பட்டால் முதலில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை ஏற்படும். நோய் பாதிப்பு அதிகரிக்கும் போது குழப்பம், வலிப்பு, கோமா மற்றும் போன்ற சீரிஸயான பாதிப்புகளும் கூட ஏற்படும். நோய் பாதிப்பு ஏற்பட்ட 1 முதல் 12 நாட்களில் இந்த அறிகுறிகள் ஏற்பட தொடங்கும்.. சட்டென இதன் தீவிரம் அதிகரிக்கும் நிலையில், 5-18 நாட்களில் இது தீவிர பாதிப்பை ஏற்படுத்தலாம்.
எப்படி பரவுகிறது: கேரளாவில் இந்த அமீபா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதனால் தமிழக எல்லை பகுதிகளில் வாழும் மக்களும் அச்சத்தில் உள்ளனர். ஆனால், இது கொரோனா போல ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது என்பதால் நாம் கவலைப்பட தேவையில்லை. அமீபா இருக்கும் அசுத்தமான நன்னீரில் குளிக்கும் போது மட்டுமே இந்த பாதிப்பு ஏற்படுகிறது. மற்றபடி பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவதில்லை.
-
காடுவெட்டி குரு மகள் பேச்சை பார்த்தீங்களா? அன்புமணிக்கு டபுள் டென்ஷன்.. வன்னியர் ஓட்டு யாருக்கு லாபம் -
தூண்டில் போடும் டெல்லி! தன் பாட்டுக்கு விஜய்.. இப்ப தான் ஆட்டம் ஆரம்பம்.. 2026-ன் கிங் மேக்கர் யார்? -
வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம்.. சட்டென மாறிய வானிலை! மழை வெளுக்கப்போகுது! -
எடப்பாடி பெயரை கூட.. மோடி சொல்லாதது இதற்குத்தானா? பாஜகவின் ‘மாஸ்டர் பிளான்’ ஸ்கெட்ச்.. போச்சு -
நைஸா பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.. தவெக விஜய் அரசியலில் அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பம் -
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம்












Click it and Unblock the Notifications