சிவப்பு முள்ளங்கி சிறப்பு.. கேன்சர் செல்லை ஒழிக்கும் முள்ளங்கி கீரை! பெண்கள், குழந்தைகள் விட்றாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவப்பு முள்ளங்கியை பெண்கள் கட்டாயம் சாப்பிட சொல்கிறார்கள்.. அதேபோல சர்க்கரை வியாதி உள்ளவர்களும் சிவப்பு முள்ளங்கியை தவிர்க்கக் கூடாது என்பார்கள். இதற்கு என்ன காரணம் தெரியுமா? சிவப்பு முள்ளங்கியை சாப்பிட்டால், கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன? குழந்தைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

முள்ளங்கி கிழங்குகளில், வெள்ளை முள்ளங்கிகள், காமாலை நோய்க்கு நல்லது.. எனினும் வாதம் உள்ளவர்களும், மாதவிடாய் நேரத்தில் பெண்களும் வெள்ளை முள்ளங்கியை தடுப்பது நல்லது. மழை மற்றும் குளிர்காலத்தில் வயது முதிர்ந்தவர்கள் தவிர்க்கலாம். கர்ப்பிணிகள் முள்ளங்கியை தவிர்க்கலாம். அதிகமாக சாப்பிட்டால், பசியின்மை, தொண்டை புண், தசைப்பிடிப்பை உண்டுபண்ணிவிடும்.

யார் யார் தவிர்க்கலாம்

முள்ளங்கியை பாகற்காயுடன் சேர்த்து சாப்பிட்டால் இதயம் சம்பந்தமான பாதிப்பு வரலாம். முள்ளங்கியுடன் வெள்ளரிக்காய் சேர்த்து சாப்பிட்டால் தோல் நோய் வரலாம். ஆரஞ்சு ஜூஸ், பால் மற்றும் மீனுடன் முள்ளங்கியை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பார்கள்.

சத்துக்கள் என்னென்ன

வெள்ளரிக்காயில் உள்ளது போலவே அதிக அளவு நீர் இந்த முள்ளங்கியில் உள்ளது. அதாவது, 100 கிராம் முள்ளங்கியில் 93.5 கிராம் நீர்ச்சத்து இருக்கிறதாம்.. கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் A,B,C போன்ற சத்துக்கள் முள்ளங்கியில் இருந்தாலும், அதிகமாக உள்ளது வைட்டமின் C சத்துக்கள்தான்.. இதுவே முள்ளங்கி கிழங்கின் ஸ்பெஷாலிட்டியாகும்.

இது கொலாஜன் உற்பத்தியை அதிகமாக சுரரக்க செய்வதுடன், ரத்த நாளங்களின் சுவரையும் பலப்படுத்த தூண்டுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை தருவதால், எளிதில் தொற்றுகள் அண்டுவதில்லை.. சருமத்தையும் காக்கிறது.

சிவப்பு முள்ளங்கி சிறப்பு

முள்ளங்கியில் மற்றொரு சிறப்பம்சம், நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகமாக உள்ளன.. அதேபோல, இந்த கிழங்கிலுள்ள முக்கிய சேர்மங்கள் கல்லீரலில் படிந்துள்ள நச்சுகளை உடைத்து வெளியேற்ற உதவுகிறது..

சர்க்கரை நோயாளிகள் முள்ளங்கியை உணவில் சேர்த்து கொண்டால், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதோடு, குளுக்கோஸ் உறிஞ்சுதல் மற்றும் இன்சுலின் வினைத்திறனை அதிகரிக்க செய்யும்.. டைம் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்க இந்த முள்ளங்கி உதவுகிறது. மந்தத்தன்மையை போக்கி பசியை தூண்ட செய்வதுடன் கிட்னியும் பலமாகும்..

சிவப்பு முள்ளங்கிகளை பொறுத்தவரை, சிறுநீர் பையிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி, சிறுநீரை சீராக்கி முறைப்படுத்துகிறது. வயிற்றிலுள்ள பூச்சி, கழிவுகளை அகற்றுகிறது.

மூளை, எலும்புகள் செயல்பாடுகள்

மூளை செயல்பாடுகளுக்கும், எலும்புகளுக்கும் வலு தரக்கூடியது என்பதால் குழந்தைகள் இதனை அவசியம் சாப்பிட வேண்டும். நார்ச்சத்து அதிகம் என்பதால், செரிமானத்தை சீராக்குகிறது.. குளிர்ச்சியான கிழங்கு என்பதால் மூல நோய் பாதிப்புள்ளவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டும்.

மாதவிலக்கு தொந்தரவு, வெள்ளைப்பாடு பிரசசனை இருந்தால், சிவப்பு முள்ளங்கியை பெண்கள் அதிகம் சேர்த்து கொள்ளலாம். இந்த கிழங்கில் ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைய உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கல்லீரல், பெருங்குடல், கருப்பை வாய், புரோஸ்டேட், நுரையீரல் புற்றுநோய்களில் இருந்து காக்க துணைபுரிகிறதாம்..

முள்ளங்கி கீரை

கிட்னி பாதிப்பு உள்ளவர்கள், பாலூட்டும் பெண்கள், கர்ப்பிணிகள், கால்சியம் நிறைந்த முள்ளங்கி கீரையை உணவில் சேர்த்து கொள்ளலாம். முக்கியமாக முள்ளங்கி இலைச்சாறு , மார்பக புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் உதவும் என்று பல ஆய்வுகள் சொல்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+