Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டென சரிந்து விழும் இளைஞர்கள்! சாகும் வயசா இது? 1 வாரத்தில் 5 மரணங்கள்! பயமுறுத்தும் SCA மாரடைப்பு

இப்படி தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: இந்தியாவில் அடுத்தடுத்து இளைஞர்கள் பலர் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடையும் சம்பவங்கள் அதிர்ச்சி அளித்து வருகின்றன. அதிலும் கடந்த 7 நாட்களில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் சில மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.

சாக வேண்டிய வயசா இது என்று தமிழில் ஒரு வாக்கியம் சொல்லுவார்கள். இளம் வயதில் யாராவது மரணம் அடைந்தால் இந்த வாக்கியத்தை பயன்படுத்துவது வழக்கம்.

இந்தியாவில் தற்போது அடிக்கடி இது போன்ற மாரடைப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. முக்கியமாக இளைஞர்கள் பலர் இது போன்ற மாரடைப்பு காரணமாக திடீர் திடீரென மரணம் அடையும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.

மாரடைப்பு

மாரடைப்பு

அந்த வகையில் நேற்று 19 வயது இளைஞர் திடீரென மயங்கி விழுந்து இறந்து உள்ளார். தெலுங்கானாவில் இரண்டு நாட்களுக்கு முன் 19 வயது இளைஞர் ஒருவர் இப்படி திருமண விழாவில் பலியான நிலையில் அதேபோல் மீண்டும் ஒரு இளைஞர் பலியாகி இருக்கிறார். ஹைதராபாத் அருகே இந்த சம்பவம் நடந்து உள்ளது. முன்னதாக பலியான இளைஞர் திருமண விழாவில் ஆடிக்கொண்டு இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த நிலையில்தான் இன்னொரு இளைஞரும் திருமண விழாவில் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து இருக்கிறார்.

தொடரும் மரணங்கள்

தொடரும் மரணங்கள்

திருமண விழாவில் நடனம் ஆடும் போது மரணம் அடைந்த இளைஞர் மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றாக ஆடிக்கொண்டு இருந்தவர்.. சட்டென சரிந்து விழுந்து உள்ளார். துடிப்பாக இருந்தவர் சட்டென எதோ ஆனது போல தரையில் விழுந்துள்ளார். பின்னர் கொஞ்சம் கூட துடிக்காமல் அப்படியே அமைதியாக இறந்து உள்ளார். அவரை மருத்துவமனைக்கு வேகமாக அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்து நீண்ட நேரம் ஆகிவிட்டதாக கூறி உள்ளனர். அவரின் மரணத்திற்கு மாரடைப்புதான் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாரடைப்பு

மாரடைப்பு

மாரடைப்புதான் இந்த தொடர் மரணங்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் இது 5வது சம்பவம் என்று கூறப்படுகிறது. தெலுங்கானாவில் மட்டும் நடக்கும் 5வது சம்பவம் ஆகும் இது. இதற்கு முன் ஹைதராபாத்தில் பேருந்தை பிடிக்க ஓடிய இளைஞர் ஒருவர்.. பாதியில் மூச்சு அடைத்து பலியானார். இவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டதும் முதலுதவி செய்யப்பட்டு உள்ளது. அதன்பின் சுயநினைவை பெற்றவர் பின்னர் மருத்துவமனையில் பலியானதாக கூறப்படுகிறது.

ஒரே வாரம்

ஒரே வாரம்

கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி இதேபோல் ஹைதராபாத்தில் திருமண நிகழ்வு ஒன்றில் இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். மஞ்சள் பூசும் விழாவில் கலந்து கொண்ட அவர் மயங்கி விழுந்து பலியாகி உள்ளார். இவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். அதேபோல் 23ம் தேதி ஜிம்மில் பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்த 24 வயது போலீஸ் அதிகாரி ஒருவர் ஹார்ட் அட்டாக் வந்து பலியானார். ஜிம்மில் பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்த போதே இவர் பலியானார்.

தொடர் சம்பவங்கள்

தொடர் சம்பவங்கள்

இப்படி தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த திடீர் மாரடைப்பை Sudden Cardiac Arrest (SCA) என்று கூறுவார்கள். இதயம் துடிப்பதற்கு அதில் ஏற்படும் சின்ன மின்சார சிக்னல்தான் காரணம். இந்த அலைகள் நிற்கும் பட்சத்தில் சட்டென இதய துடிப்பு நிற்கும். இதைத்தான் கார்டியன் அரெஸ்ட் என்பார்கள். திடீரென இப்படி இதய துடிப்பிற்கான மின்சார அலைகள் நிற்பதை Sudden Cardiac Arrest (SCA) என்று அழைப்பார்கள். இதனால் உடலின் மற்ற உறுப்புகளுக்கு பம்ப் செய்யப்படுவது சட்டென நிற்கும். இதுவே நம் மரணத்திற்கும் காரணம் ஆகும். உட்கார்ந்த படியே வேலை பார்ப்பது முறைநீரிழிவு நோய், மது அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றால் இளைஞர்களிடையே திடீர் மாரடைப்பு நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+