மாணவர்களுக்கு குட் நியூஸ்! இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு லீவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருப்பதாக தனது அதிகாரப்பூர்வ நாள்காட்டியில் பள்ளி கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. இந்த விடுமுறை அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு பொருந்தும்.

மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் கோரிக்கையை ஏற்று இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எது எப்படியோ அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை விடப்பட்டிருப்பது மாணவர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

School

காலாண்டு, அரையாண்டு விடுமுறை எப்போது?

1-12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் செப்.17-25ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும். அதைத்தொடர்ந்து செப்.26-அக்.4 வரை அதாவது 9 நாட்கள் காலாண்டு விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அரையாண்டு தேர்வை பொறுத்தவரை, டிச.16 தொடங்கி 23 வரை நடைபெறும். பின்னர் டிச.24-ஜன.3 வரை மொத்தம் 11 நாட்கள் அரையாண்டு தேர்வுக்கான விடுமுறை விடப்படும். இது போக ஜனவரி மாதத்தில் பொங்கல் விடுமுறையும் வருகிறது.

தொடர் விடுமுறை

தொடர் விடுமுறை நாட்களை பொறுத்தவரை, செப்.4ம் தேதி வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி என்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதை தொடர்ந்து வரும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் லீவு வருவதால் 3 நாட்கள் தொடர் லீவு கிடைக்கும். அதேபோல செப்.14ம் தேதி விநாயகர் சதுர்த்தி திங்கட்கிழமை வருவதால், அதற்கு முந்தைய 2 நாட்கள் வார விடுமுறையுடன் சேர்த்து 3 நாட்கள் லீவு வரும்.

இதைவிட முக்கியமான விஷயம் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறைதான். இவை இரண்டும் அக்.19,20 தேதிகளில் அதாவது திங்கள் செவ்வாய் கிழமைகளில் வருகிறது. எனவே அதற்கு முந்தைய சனி, ஞாயிறு லீவை சேர்த்தால் 4 நாட்கள் கிடைக்கும்.

தீபாவளி பொங்கல் லீவு

ஆனால், தீபாவளி ஞாயிறு அன்று வருவதால், இந்த ஆண்டு லீவு எதிர்பார்ப்பு பொய்த்துப்போய் உள்ளது. அதேபோல பொங்கலும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதனால், சனி, ஞாயிறு என வழக்கமான லீவு சேர்ந்து 3 நாட்கள்தான் லீவு கிடைக்கும்.

எது எப்படியோ, இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால், மாணவர்கள் மிகுந்த உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+