எங்கு பார்த்தாலும் சளி -இருமல் -காய்ச்சல்! இன்புளூயன்சா வைரஸை விரட்டியடிக்கும் சித்த மருந்துகள்!
இன்புளூயன்சா வைரஸ் தொற்றை ஓட ஓட உடலில் இருந்து விரட்டியடிக்கும் சித்த மருந்துகள்.
திருச்சி: சளி இருமல் காய்ச்சல் போன்ற நோய்களை உருவாக்கும் இன்புளூயன்சா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அது குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை எனக் கூறுகிறார் திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ்.
இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் பக்க விளைவுகள் இல்லாத மருந்துகள் சித்த மருத்துவத்தில் ஏராளமாக உள்ளதாக கூறுகிறார்.
மேலும், இன்புளூயன்சா வைரஸ் மற்றும் அதற்கான சித்த மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் விளக்குகிறார். அதன் விவரம் வருமாறு;

இன்புளூயன்சா வைரஸ்
இன்ஃபுளுவென்சா (Influenza) எனப்படுவது ஃபுளூ எனப் பொதுவாக அழைக்கப்படும் ஒரு தொற்று நோயாகும். இதில் பல்வேறு வகை உண்டு,ஏ வகை, பி வகை, சி வகை, டி வகை என நான்கு வகையான வைரஸ் காணப்பட்டாலும், முதல் மூன்று வகை மட்டுமே மனிதர்களை தாக்குகின்றன.இன்ஃபுளுவென்சா வைரஸ் தொற்று இருக்கும் நபர்களில் ஏறக்குறைய 33% நபர்களுக்கு எந்தவிதமான அறிகுறிகளும் காணப்படுவதில்லை, வெளியே தெரிவதும் இல்லை. இச்சமயங்களில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நோய் அறிகுறிகள்:
*அதிக காய்ச்சல்(100 முதல் 103'F),
* மூக்கிலிருந்து நீர் வடிதல்,
*தொண்டை வலி,
*தசை வலி,
*தலைவலி,
*இருமல்,
*தொடர் இருமல்
*உடல் சோர்வு
*அசதி
*கைகால் தளர்ச்சி, வலி போன்றவை இந்நோய்க்கான மிகவும் பொதுவான அறிகுறிகள் ஆகும். வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் தான் இந்த அறிகுறிகள் தென்படும். குறைந்தது ஒரு வாரத்திற்கு இவ்வறிகுறிகளுடன் நோயின் தாக்கம் இருக்கும். இருமல் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும்
நோய் வரும் வழிகள்;

காற்று வழியாக பரவும்
நோய் தொற்றுள்ள ஒருவர் இருமும் போதும் தும்மும் போதும் அதன் வழியாக வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது, எனவே நோய் தொற்று ஏற்பட்டவர்கள் பிறருக்கு பரவாமல் தடுக்க முகக் கவசம் அணிவது பரவுவதை தடுக்க உதவும்.

நோய் எதிர்ப்பு திறன்
நம் உடலில் இரண்டு வகை நோய் எதிர்ப்பு திறன் உள்ளன:-
1)Innate immunity: (இன்னேட் இம்மூனினிட்டி)இது இயல்பாகவே நம் உடலில் உள்ளது
2) Acquired immunity: அக்கொயர்டு இம்மூனிட்டி இது நோய் தொற்றினால் உண்டாவது
இந்த இரண்டாம் வகை நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு வகைப்படும்.
1)cell mediated immunity:செல்வழி நோய் தற்காப்பு
2)antibody mediated immunity: எதிர்ப்பு பொருள் வழி நோய் தற்காப்பு

சித்த மருந்துகள்
உடலில் நோய் தொற்றினாலோ தடுப்பூசிகளினாலோ இரண்டாம் வகை நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதை இந்த வைரஸ் கிருமிகள் திசை திருப்புவதால் செல்வழி நோய் தற்காப்பை(cell mediated) நாம் அதிகரிக்க வேண்டும். இதற்கு சித்த மருத்துவத்தில் அநேக மருந்துகள் உள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
1)அமுக்கரா சூரணம்/ மாத்திரை
2)நெல்லிக்காய் லேகியம்
3)திரிபலா சூரணம்/ மாத்திரை
காய்ச்சல்/ சளி/ இருமலுக்கு;
1)பிரம்மானந்த பைரவ மாத்திரை
2)பாலசஞ்சீவி மாத்திரை
3)வசந்த குசுமாகர மாத்திரை
4)சாந்த சந்திரோதய மாத்திரை
5)தாளிசாதி சூரணம்
6)திரிகடுகு சூரணம்
7)சீந்தில் சூரணம்
8)நிலவேம்பு குடிநீர்
9)கபசுர குடிநீர்
10)திப்பிலி ரசாயனம்
11)பூரண சந்திரோதயம்
12)முத்து பற்பம்
13)பவள பற்பம்
14)முத்து சிப்பி பற்பம்
15)ஆடாதோடை மணப்பாகு

நிலவேம்பு குடிநீர்
முதலி்ய மருந்துகள் முக்கியமாக இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலால் மற்றும் பிற வகை காய்ச்சல்களுக்கும் கைகொடுக்கும் ,குணப்படுத்தும் சிறப்பான , பக்க விளைவு இல்லாத, விலை குறைந்த மருந்துகள்.எந்த வகையான காய்ச்சலாக இருந்தாலும் நிலவேம்பு குடிநீர் மிகச் சிறந்த மருந்து. இது அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய மருந்து.

மருந்துக்கடைகளில்
நோயாளர் வயது, குறிகுணங்கள், நோயின் வகை, நோயின் தீவிரம் ஆகியவற்றை ஆராய்ந்து தெரிந்து சித்த மருத்துவர் மருந்துகளை தேர்ந்தெடுத்து வழங்கி இவ்வைரஸ் தொற்றின் தாக்கத்தை குறைத்து நோயாளர் விரைந்து குணமடைய வழிவகை செய்வர். மருந்து கடைகளில் குறிகுணங்களைக்கூறி தயவு செய்து யாரும் மருந்து வாங்கி சாப்பிடவேண்டாம். மேலும் மருந்து கடை உரிமையாளர்களும் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் பணத்திற்காக மருந்தை விற்பதுடன் விலைமதிப்பில்லா நம் உறவினர்கள் நண்பர்கள் முகம் பார்க்காதவர்கள் உயிரோடு விளையாட வேண்டாம் . மேற்கண்ட அனைத்தையும் சரியாக கடைபிடித்து மருத்துவரின் ஆலோசனையும் பின்பற்றினால் இன்புளூயன்சா நோயின் பிடியிலிருந்த நம்மை நாம் தற்காத்துக் கொள்ளலாம். இவ்வாறு திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications