அந்நியன் பட நடிகை சதாவின் அதிரடி மாற்றம்! நடுக்காட்டில் தனியாக டென்ட் அடித்து கேமராவுடன் அலைவது ஏன்
சென்னை: "ஒரு நடிகையாக கேரவன், மேக்கப், பல உதவியாளர்களுடன் வசதியான வாழ்க்கையை வாழ்ந்த சதா, இன்று காடுகளில் டென்ட் அடித்து தங்கி, உணவு மற்றும் தட்பவெப்பநிலை என ஏகப்பட்ட சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தாலும், சோஷியல் மீடியாவில், இன்ஸ்டாகிராமில், லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ்களை சதா பெற்றுள்ளார்" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பாராட்டு தெரிவித்துள்ளார்.
Media circle என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, அந்த படத்தின் பிரம்மாண்டமான வெற்றியால் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை சதா.. மாதவன், விக்ரம், ஸ்ரீகாந்த் என அந்த காலகட்டத்தின் முன்னணி ஸ்டார்களுடன் இணைந்து நடித்து புகழ்பெற்றார்.

அந்நியன் பட நடிகை சதா
முக்கியமாக சங்கர் டைரக்ஷனில் விக்ரமுடன் நடித்த "அந்நியன்" படம், அவருக்கு ஈடு இணையற்ற புகழைப் பெற்றுத் தந்தது. அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும், அவர் ஏற்று நடித்த கேரக்டரிடையே நீங்காத இடத்தை பிடித்தன.
டாப் ஹீரோக்களான மாதவன், விக்ரமுடன் நடித்துவிட்டு, திடீரென "எலி" படத்தில் வடிவேலுவுடன் நடித்தது நிறைய விமர்சனத்தை பெற்றிருந்தது.. காலப்போக்கில் ஒரு முன்னணி நடிகையாக இருந்த அவரது சினிமா மார்க்கெட் வீழ்ச்சியை சந்தித்தது. வாய்ப்புகள் குறைந்துவிட்டாலும், அதற்காக சதா தளர்ந்து போய்விடவில்லை.. தன்னை ஒரு வனவிலங்கு புகைப்பட கலைஞராக மாற்றிக்கொண்டார்.
காடுகளுக்கு பயணம் செய்து, புலி, சிங்கம், சிறுத்தை போன்ற வனவிலங்குகளை படம் பிடிப்பதில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.
வனவிலங்கு புகைப்படக் கலைஞர்
இந்தியாவில் அடர்ந்த காடுகள் உள்ளன.. வனவிலங்குகளை பாதுகாப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது.. இதற்கான சட்டங்கள் குறித்த விழிப்புணர்வும் அவசியமாகிறது. ஒயில்டு லைஃப் போட்டோகிராபி (வனவிலங்கு புகைப்படக் கலை) என்பது சாதாரணமான விஷயமல்ல.. அது மிகவும் ஆபத்தானது. நடிப்பதைவிட ரிஸ்க்கானது..
காடுகளுக்குள் செல்லும்போது ஒரு கணம் கவனக்குறைவாக இருந்தாலும், சிங்கம் அல்லது புலி போன்ற விலங்குகளின் தாக்குதலுக்கு உள்ளாகலாம்.. பாம்பு கொத்தலாம்.. விஷப் பூச்சிகளின் ஆபத்துக்கோ ஆளாக நேரிடலாம். காடுகளுக்குள் வெளிச்சம் குறைவாக இருக்கும். இப்படிப்பட்ட சூழலில், புலி, சிங்கம், சிறுத்தை, கருஞ்சிறுத்தைகளின் நடமாட்டத்தை போட்டோ எடுப்பது பெரிய சவால்.,
லைட்டிங், டைமிங், ரிஸ்க் வேலை
நேஷனல் ஜியோகிராஃபி போன்ற சேனல்களில் பணிபுரிபவர்களை போல, ஒரு சிறந்த போட்டோவை பெறுவதற்கு சதா ஒரு தவம் போல காத்திருக்கிறார். லைட்டிங், டைமிங் எல்லாமே சிறப்பாக அமைய வேண்டும்.. இதற்காக பல மாதங்கள் அல்லது ஒரு வருடம் கூட காடுகளில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்..
ஒரு சிறந்த போட்டோவை பிடிக்க மாதக்கணக்கில், சில நேரங்களில் ஓராண்டு வரை கூட காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். இது ஒரு தவம் போன்றதுதான்,
தான் எடுக்கும் போட்டோக்கள் மூலம் காடுகள் மற்றும் வனவிலங்குகள் அழிக்கப்படுவது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற உறுதியான நோக்கத்துடன் சதா செயல்படுகிறார். இதற்காக அவர் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும் பயணம் மேற்கொள்கிறார்.
கருஞ்சிறுத்தையின் தாய்மை
ஒரு நடிகையாக கேரவன், மேக்கப், பல உதவியாளர்களுடன் வசதியான வாழ்க்கையை வாழ்ந்த சதா, இன்று காடுகளில் டென்ட் அடித்து தங்கி, உணவு மற்றும் தட்பவெப்பநிலை என ஏகப்பட்ட சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தாலும், சோஷியல் மீடியாவில், இன்ஸ்டாகிராமில், லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ்களை சதா பெற்றுள்ளார்.
அவர் பதிவிடும் வனவிலங்கு புகைப்படங்களுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரு துறையில் வெற்றி பெற முடியாவிட்டால், அதிலேயே தேங்கி நின்றுவிடாமல், அடுத்தடுத்த நிலைகளை நோக்கி நகர வேண்டும் என்பதற்கு சதா ஒரு சிறந்த முன்னுதாரணம். அவர் தனக்குச் சம்பந்தமில்லாத ஒரு துறைக்கு தைரியமாக மாறி வெற்றி பெற்றுள்ளார்.
மாற்றம் தந்த கருஞ்சிறுத்தை
சதாவுக்கு இந்த ஆர்வம் எப்படி வந்தது என்பதற்கு ஒரு சுவாரஸ்யமான காரணம் உள்ளது... அகிம்சா படத்தின் ஷூட்டிங்குக்காக பண்ணா டைகர் ரிசர்வ் பகுதிக்கு சென்றிருக்கிறார்கள்.. அங்கு மேற்கொண்ட ஜீப் சபாரி பயணத்தில், ஒரு கருஞ்சிறுத்தை தன் குட்டிகளுடன் செல்வதை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளார்.. விலங்குகளிடம் இருக்கும் அந்த தாய் பாசம் மற்றும் அந்தத் திரில்லிங் அனுபவம் தான், அவரை முழுமையாக இந்தத் துறைக்குள் இழுத்துள்ளது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.














Click it and Unblock the Notifications