படவாய்ப்பில்லை! ஜெமினி கிரண், ஜெயம் சதா என்ன செய்கிறார்கள் தெரியுமா?
சென்னை: கிரண், சதா ஆகிய நடிகைகளை நினைவிருக்கிறதா? இருவருக்கும் பட வாய்ப்புகள் குறைந்ததும் என்ன செய்கிறார்கள் தெரியுமா? கையில் கிடைத்த வேலையை மகிழ்ச்சியாக செய்ய வேண்டும் என்பதற்கு இவர்கள் இருவருமே உதாரணம்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: வாழ்க்கை நம்மை புரட்டிப் போடும் போது வாழ்க்கையே நமக்கு வேறு வழி காட்டும். ஆனா நாம் எப்படி எடுக்கிறோம் என்பதில் தான் நம் மதிப்பு இருக்கிறது.

கிரண், சதா 'ஜெ.ஜெ' (ஜெமினி, ஜெயம்) நடிகைகள்... கிரண் 'ஜெமினி' மூலமும், சதா 'ஜெயம்' மூலமும் இங்கு அறிமுகமானார்கள். கிரண் ராஜஸ்தான் 'ஜெய்ப்பூரை' சேர்ந்தவர். பாலிவுட் நடிகை ரவீணா டான்டனின் கஸின் தான் கிரண் ரத்தோட். வசதியான குடும்பம்.
மும்பையில் படித்த கிரண் விளம்பரங்களிலும், ஆல்பங்களிலும் முதலில் நடித்தார். 'யாதீன்' என்கிற ஹிந்திப் படத்தில் சிறு ரோலில் முதலில் நடித்தார். உடனே ஆந்திராவும், தமிழ்நாடும் இழுத்துக் கொண்டு வந்து விட்டது. ஜெமினியில் சேட்டு பெண் வேடத்துக்கு கிரண் நல்ல பொருத்தம் என்பதால் ஹிட்டானார்.
அஜித்தின் 'வில்லன்' கிரணுக்கு பெரிய புகழைப் பெற்று தந்தது. கமல், மோகன்லால், விக்ரம், மகேஷ்பாபு என பெரிய ரவுண்ட் வந்தார். சதாஃப் சயித் என்கிற சதா கோவா-மும்பை சாலையில் ரத்னகிரி என்கிற சிறிய ஊரில் பிறந்தவர். நடுத்தர குடும்பம். அப்பா டாக்டர். அம்மா தனியார் காப்பீடு அதிகாரி.
பள்ளியில் படிக்கும் போதே ஆடல்-பாடல் என அசத்துபவர். பத்தாம் வகுப்பின் போது ஆண்டு விழாவில் ஊர் எம்.எல்.ஏ சினிமாவில் நடிக்க பிரின்சிபல் மூலமாக வாய்ப்பு கேட்கிறார். குடும்பத்தினர் மறுத்து விடுகின்றனர். பின் மும்பைக்கு என்ஜினியரிங் படிக்க கல்லூரி வரும் போது கல்லூரிக்கு எதிரே நடிப்புப்பள்ளி ஒன்றின் போர்டை பார்த்து ஷார்ட்டைம் கோர்ஸில் சேர ஆசைப்படுகிறார்.
சதா உடுத்தியிருந்த நடுத்தர வகுப்பு ஆடையை பார்த்த பள்ளியின் பொறுப்பாளர் "ஜெயபாதுரி நடிக்கும் ரோல்கள் எல்லாம் மலையேறிப் போயாச்சு. இந்தப் பொண்ணை என்ஜினியரிங் படிக்கச்சொல்லுங்க' என நக்கலாகச் சொல்ல அம்மாவோ பிடிவாதம் செய்கிறார் மகளின் ஆசைக்காக. அப்படி படித்து அங்கு எடுக்கப்பட்ட போட்டோஷூட் போட்டோக்களை பார்த்து ஆந்திராவிலிருந்து ஒரு இயக்குநர் தேடி வருகிறார்.
அவர் தான் தேஜா. புக் செய்த படம் 'ஜெயம்'. சதாவும் மாதவன், விக்ரம், நிதின், சிவராஜ் குமார் என பெரிய ஹீரோக்களோடு நடித்து புகழ் பெறுகிறார். இருவருக்கும் ஒரு கட்டத்தில் மார்க்கெட் போய்விடுகிறது. வயதும் நாற்பதை நெருங்கிவிட்டது. சோஷியல் மீடியா பக்கம் ரசிகர்கள் ஆதரவு களை கட்ட இருவரும் இன்ஸ்ட்டாவுக்கு வருகிறார்கள்.
சதா வனவிலங்குப் புகைப்படக் கலையில் சிறந்து விளங்கி, அருமையான வீடியோக்களையும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அவருடைய வீடியோக்களில் தேர்ந்த புகைப்படக் கலைஞரின் நேர்த்தி இருக்கிறது.
கிரணோ 'சைல்டு லைஃப் போட்டோகிராபி'யில் அசத்தலான போட்டோ, வீடியோக்களை போட்டு அசத்துகிறார். அதாவது குழந்தையாயிருக்கும் போது வாங்கிய உடைகளை போட்டு அதை வீடியோ-போட்டோ எடுத்து ஃபாலோயர்ஸை சூடாக வைக்கிறார்.
சதாவோ காட்டில் வாழும் பாம்பு, குருவி, பூ என எடுக்கும் போட்டோக்களும் வீடியாக்களும் அசத்தலாக இருக்கின்றன. கிரண் தன் அழகை மட்டும் வைத்து தனது ரசிகர்களுடன் உரையாட பேச இவ்வளவு பணம் வசூலிக்கிறார்..
ரஜினி பாடல் போல வாழ்க்கையில் ஒரு எட்டு முடிந்து அடுத்த எட்டில் நமக்கு வருவதை பிடித்துக் கொள்ள வேண்டும். ஒரு பகுதி முடிந்து நமக்கு வழிகளைக் காட்டும். எது நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ அதை நாம் செய்து சந்தோஷமாக வாழ வேண்டும்.
சதா, கிரண் இருவருமே தங்கள் மன அளவில் குமுதா ஹேப்பி அண்ணாச்சி தான். இருவரில் யார் சிறப்பு என உங்களிடமே யோசிக்க விட்டு விடுகிறேன்.... இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications