பலரது உயிரை சத்தமே இல்லாமல் பறிக்கும் 'சைலன்ட் ஹார்ட் அட்டாக்' .. இந்த சின்ன விஷயம் தான் அறிகுறி!
சென்னை: அறிகுறிகளே இல்லாமல் சைலெண்டாக வந்து உயிரிழப்பை ஏற்படுத்தி விடுகிறது சைலண்ட் ஹார்ட் அட்டாக். அதாவது சரியான அறிகுறிகள் இல்லாமல், வெகுசாதாரணமான பிரச்சனைகள் தான் இருக்கும், அதாவது சாதாரண நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணம் அல்லது அதிக வியர்வையுடன படபடப்பு ஏற்படும்.இந்த அறிகுறிகள் தான் வந்திருக்கும். ஆனால் மாரடைப்பாக மாறி உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.
கொரோனாவிற்கு முன், கொரோனாவிற்கு பின் என நமது உடல் அமைப்பை இப்போது பார்க்க வேண்டி உள்ளது. மாரடைப்பு அதாவது ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக சைலண்ட் ஹார்ட் அட்டாக் வருவது அதிகரித்துள்ளது.

சைலண்ட் ஹார்ட் அட்டாக் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம். சைலன்ட் ஹார்ட் அட்டாக் எந்த ஒரு அறிகுறையையும் காட்டுவது இல்லை. ஹார்வர்ட் ஹெல்த் இதுபற்றி 45 முதல் 84 வயதுக்குட்பட்ட 2,000 பேரிடம் நடத்திய ஆய்வு குறித்து 2015 ஆம் ஆண்டு அமெரிக்க மருத்துவ சங்க இதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ள தகவலின் படி, இதய நாய் தொடர்பான எந்த அறிகுறியும் இல்லாதவர்களுக்கு கூட 10 ஆண்டுகளில் மாரடைப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. மாரடைப்பு தழும்பு இருந்துள்ளது. மாரடைப்பு வந்தவர்களில் 80% பேருக்கு தங்கள் நிலை குறித்து தெரியாது. மாரடைப்பு தழும்புகளின் பாதிப்பு பெண்களை விட ஆண்களில் ஐந்து மடங்கு அதிகமாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு அந்த பாதிப்பு அதிகம் வருகிறது: பொதுவாக சர்க்கரை வியாதி பாதிப்பு உள்ளவர்களே அடிக்கடி சைலன்ட் ஹார்ட் அட்டாக் தாக்குதலை எதிர்கொள்கிறார்கள். அதேநேரம் வயதானவர்கள், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், மது அருந்துபவர்கள், புகைப்பிடிப்பவர்கள், அதிக உடல் பருமன் உள்ளவர்கள், உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறை, குடும்பத்தில் ஏற்கனவே இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் , அதிக கொழுப்பு போன்றவை தான் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணிகளே உள்ளன.இவையே சைலன்ட் ஹார்ட் அட்டாக்கிற்கான காரணங்களாகவும் உள்ளன.
சைலென்ட் ஹார்ட் அட்டாக் அறிகுறிகள் எப்படி இருக்கும்.. நீங்கள் அறிய வேண்டிய முக்கியமான விஷயம் இதுதான்..

மார்பில் வலி வரும், நெஞ்செரிச்சல் போன்ற மார்பில் அசௌகரியமான உணர்வு ஏற்படலாம், உடல் பலவீனம் ஆகலாம், மயக்கம் வரலாம், தாடை, கழுத்து அல்லது முதுகில் வலி ஏற்படலாம். கைகள் மற்றும் தோள்களில் அசௌகரியமான உணர்வு ஏற்படலாம். இத்துடன் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம்.
பொதுவாக மாரடைப்போ, நெஞ்சுவலியோ ஒருவருக்கு ஏற்படும்போது வியர்வை முக்கியமான அறிகுறியாகும். படபடப்பாக இருக்கும், சோர்வாகவும் காணப்படுவார்கள். நூற்றில் 95 பேருக்கு இப்படி ஏற்படலாம். ஆனால், சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டோர், குடிப்பழக்கம் உள்ளவர்கள், 80 வயதைத் தாண்டியவர்கள், தூக்க மாத்திரை உட்கொள்பவர்கள் இந்த வலியை உணராமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஆகும்.
சர்க்கரை நோயோடு புகை, மது பழக்கம் உள்ளவராக இருந்து வயது 80 ஆக இருந்தால் அவருக்கு 40% 'சைலன்ட் ஹார்ட் அட்டாக்' ஏற்பட வாய்ப்பு அதிகம். இப்படியானவர்கள் தொடர்ச்சியாக இசிஜி (Electrocardiography) எடுத்துப் பார்ப்பது மிகவும் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள.

அதேநேரம் மாரடைப்பு ஏற்படும்போது தசைவலி, மூட்டுவலி, வாயுத் தொந்தரவு, செரிமானமின்மை என்று நினைத்து கண்டு கொள்ளாமல் இருந்து விடாதீர்கள். அப்படி செய்தால் உயிரிழப்பை ஏற்படுத்திவிடும். மேற்கண்ட எந்த அறிகுறியாக இருந்தாலும் அதை மருத்துவரிடம் எடுத்துக்கூறும்போது அவர்தான் அது மாரடைப்பா அல்லது வேறு வகையான பிரச்னையா என்பதைக் கண்டறிந்து உங்களிடம் சொல்வார்.
சரி, மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி? : பொதுவாக மாரடைப்பு ஏற்படுவதற்கு உடல் உழைப்புற்ற வாழ்க்கை முறை முக்கிய காரணம் ஆகும். அதேபோல் நள்ளிரவு பார்டிகள், மது விருந்துகள், பாஸ்புட் காலச்சாரமும் முக்கிய காரணமாகும். இதுபோன்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை கைவிட்டாலே சைலென்ட் ஹார்ட் அட்டாக்கில் இருந்து ஓரளவு தப்பிக்கலாம்.

இதேபோல் நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்யில் மிகவும் கவனமாக இருங்கள். பலமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யில் உருவாக்கப்பட்ட சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவுகளையோ அல்லது சைவ உணவுகளையே தொடதீர்கள். ஆரோக்கியான எண்ணெய் தான் உங்கள் உடலை பாதுகாக்கும் முக்கியமான விஷயம் ஆகும். எனவே சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்யை கவனமாக தேர்வு செய்யுங்கள்.
பரிசோதனை அவசியம் : இதுதவிர ஆண்டுக்கு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதயம் சார்ந்த பரிசோதனைகளை மருத்துவர்களின் ஆலோசனைப்படி செய்வதன் மூலம் மாரடைப்ப அறிகுறி உள்ளதா என்பதை கண்டுபிடித்துவிட முடியும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையே உங்கள் வாழ்நாளை நீடிக்கும்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications