டேஞ்சர்.. 2 மணி நேரம் நாற்காலியில் அமர்கிறீர்களா? சிகரெட்போல் ஆபத்தாம்! தப்பிக்க ஈசி ஐடியா இருக்கு
டெல்லி: தொடர்ந்து 2 மணி நேரம் அமர்ந்து இருப்பது ஒரு சிகரெட் புகைப்பதைபோல் ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதிக நேரம் அமர்ந்துகொண்டு பணி புரிவதால் இதயம், நுரையீரல், கல்லீரல் பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கும் மருத்துவர், இதை தவிர்ப்பதற்காக வழிமுறைகளையும் பகிர்ந்து உள்ளார்.
நகைக்கடைகள், துணிக்கடைகள், மெடிக்கல்கள் போன்றவற்றில் நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்வதால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதாக கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், அமர்ந்துகொண்டு வேலை செய்வதன் காரணமாகவும் உடல்நல சிக்கல்கள் வருவதாக சொன்னால் நம்ப முடிகிறதா? முடியாவிட்டாலும் அதுதான் உண்மை என்கிறார்கள் மருத்துவர்கள்.

எல்லாமே கணினிமயமாகிவிட்ட இந்த காலத்தில் கணினி அல்லது லேப்டாப்புகளுடனே நேரத்தை செலவிடுகிறோம். குறிப்பாக கணினியை மட்டுமே அடிப்படையாக கொண்ட ஐடி ஊழியர்கள் நாளொன்றுக்கு 8 மணி நேரத்துக்கு மேல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறார்கள். அதேபோல் தையல் உள்ளிட்ட தொழில் செய்பவர்களும் அமர்ந்தே இருக்கின்றனர். பள்ளி கல்லூரி மாணவர்களும் பல மணி நேரம் அமர்ந்தே கற்று வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் தொடர்ந்து 2 மணி நேரம் நாற்காலியில் அமர்ந்தே இருந்தால் எண்ணிப் பார்க்க முடியாத பல பிரச்சனைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக எழும்புகள் பலவீனமாகுமாம். குறிப்பாக 2 மணி நேரத்துக்கு அதிகமாக ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பதால் நமது உடல் வாகே மாறிவிடுவதுடன், சர்க்கரை வியாதி, இதய பிரச்சனைகள் ஏற்படும் என்று எச்சரிக்கிறார் மருத்துவர் பிரியங்கா ரோஹட்கி.
அதாவது ஒரு நபர் 2 மணி நேரத்துக்கும் அதிகமாக அமர்ந்து இருப்பது ஒரு சிகெரெட் புகைப்பதற்கு இணையான ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரிக்கிறார். இதுகுறித்து பேசிய மருத்துவர் பிரியங்கா, "இதனால் முழு உடலின் நரம்புகளிலும் விறைப்பு தன்மை ஏற்படுவதும் எழும்பு முறிவு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். ஒரே மாதிரி அமர்ந்துகொண்டு தொடர்ந்து கணினி முன்பாக நீங்கள் அமர்ந்து இருந்தால் தசைகளோடு இணைந்து இருக்கும் நரம்புகள் விறைத்துவிடும்.
ஒரே மாதிரி தொடர்ச்சியாக 2 மணி நேரம் நாற்காலியில் அமர்ந்து இருப்பதால் நமது உடலில் உள்ள ஆற்றல் சரியாக பயன்படுத்தப்படுவது கிடையாது. இது மெடபாலிசத்தை குறைக்கிறது. அதாவது, உடலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் முறையாக பயன்படுத்தப்படாது. நமது உடலில் அனைத்து சத்துக்களும் பயன்படுத்தப்படாதபோது அவை, கல்லீரலில் மொத்தமாக போய் தேங்கும்.
இதனால் கல்லீரலில் கொழுப்பு தேங்குவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளதால் வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இருப்பது குறைவு. கணினியில் நாம் வேலை செய்யும்போது நமது நுரையீரல் மெதுவாக வேலை செய்யும். மூச்சுவிடும் திறன் குறைகிறது. இதன் காரணமாக நுறையீரலின் வேலை திறனும் குறைந்துவிடுகிறது. குறிப்பாக நுரையீரல் அதன் பாதி ஆற்றலை இழந்துவிடுகிறது. அதேபோல் ஹார்மோன்கள் சமநிலையை இழக்கின்றன.
எனவே நாம் வேலை செய்யும் விதத்தில் சிறிய மாறுதல்களை கொண்டு வந்தால் இதுபோன்ற அச்சுறுத்தல்களில் இருந்து தப்ப முடியும். ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை நாற்காலியில் இருந்து எழ வேண்டும். அதற்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் நாற்காலியில் அமர்ந்துகொண்டு இருக்கும்போதும் உடல் பாகங்களை அசைத்து சிறிய உடற்பயிற்சிகளை செய்யலாம். குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்கு ஒருமுறையாவது கட்டாயம் நாற்காலியில் இருந்து எழுந்து 2 முதல் 3 நிமிடங்கள் வரை அமராமல் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை 2 முதல் 3 நிமிடங்கள் நாம் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளால் பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து தப்பலாம். காலை 30 நிமிடங்கள் உடற்பயிற்சிகள் செய்வது நல்லது. அது மிகவும் முக்கியம். 80 நிமிடங்கள் நாற்காலியில் அமர்ந்தால் 2 நிமிடங்கள் எழ வேண்டும் என்பது விதி. அலுவலகத்தில் லிப்டில் செல்லாமல் படிகளில் ஏறி இறங்கலாம். அதேபோல் அலுவலகம் செல்வோர் சிப்ஸ், பிஸ்கட், பீசா, பர்கர் போன்றவற்றை வேலை செய்யும்போது சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்." என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
-
பொசுக்குன்னு இப்படியொரு முடிவா.. OpenAI வாங்கிய புது நிறுவனம்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ? -
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications