தமிழ்நாட்டில் கிளைமேட் குழப்புதே.. மாறி மாறி வீசும் வானிலை.. இந்த உணவை மட்டும் சாப்பிடாதீங்க.. கவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழை, கடும் வெயில் என சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல பகுதிகள் மாறுபட்ட வெப்பநிலையை திடீர் திடீரென மக்கள அனுபவிக்கிறார்கள். இப்படியொரு மாறுபட்ட காலநிலையை எப்படி எதிர்கொள்வது? என்ன வகையான உணவுகளில் கவனம் செலுத்தலாம்?

கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்தே வெயில் கொளுத்திய நிலையில், கடந்த மாதம்தான் கோடை வெயில் மெல்ல விலகியது.. அதைத்தொடர்ந்து மழையும் ஆரம்பமானது. ஆனால், வெயில் முற்றிலும் நீங்கவில்லை..

health health tips weather report tamil nadu food

வானிலை: அதிலும் இந்த 10 நாட்களாகவே வெயிலும் மழையும் மாறி மாறி வீசிக்கொண்டிருக்கிறது. இன்றைய தினம் மழை என்றும், வெயில் என்றும் கணிக்க முடியாத அளவுக்கு, குழப்பமான வானிலை நிலவி கொண்டிருக்கிறது.. இந்த குழப்பம் உடல்ரீதியான பாதிப்புகள்வரை கொண்டுவந்துவிட்டுவிடுகிறது. இதில் பெரும்பாலும் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள்.

மழைக்கான உணவை உட்கொள்வதா? அல்லது வெயிலுக்கான உணவை உட்கொள்வதா? என்ற குழப்ப மனநிலைக்கு தமிழக மக்கள் ஆட்கொண்டுவிடுகிறார்கள்.

துரித உணவுகள்: இதுபோன்ற காலநிலைகளை கவனமாக கையாள வேண்டியிருக்கிறது. வெயில் அதிகமாக இருந்தாலும், பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்ப தங்களை பொதுமக்கள் தயார் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.. அந்தவகையில், நன்றாக சமைக்கப்பட்ட உணவையே சாப்பிட வேண்டும்.. துரித உணவுகளையும், சாலையோரம் விற்கப்படும் உணவகளையும் தவிர்த்து விடலாம்.

காரணம், வெயில் கொளுத்தும் நிலையில், டக்கென ஈரப்பதமான சூழலுக்கு மாறுவதால் காற்று மூலம் மாசுக்கள் கலக்கலாம்.. இந்த மாசுக்கள் சாலையோர உணவிலும் படிந்துவிட நேரிடும். போதாக்குறைக்கு ஈரப்பதமான சூழலும் சேர்ந்துவிடுவதால், உணவும் கெட்டுப்போய், விஷத்தன்மைக்கு மாறிவிட வாய்ப்புள்ளதால், சாலையோர உணவுகளை தவிர்ப்பதே சிறந்தது.

வானிலைகள்: அதேபோல, மழை - வெயில் என இருவிதமான வானிலைகளையும் சமாளிக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். குறிப்பாக வைட்டமின் C நோய் உணவுகள், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க துணைபுரியும்.. அத்துடன் நோய்கள், நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடவும் வைட்டமின் C நிறைந்த உணவுகள் அடங்கும்.

அதிலும், வைட்டமின் C அதிகம் உள்ள உணவுகளை காலை நேரத்தில் சாப்பிடுவதால், கூடுதல் பலன் கிடைக்கிறதாம்.. வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி, மூளைக்கு அதிகமான ஆக்சிஜனை வைட்டமின் C உணவுகளே நிறைய வழங்குகின்றன. உடலுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் சக்தி இந்த வைட்டமின் C சத்துக்களுக்கு அதிகமாகவே இருக்கின்றன..

உடைக்காத முழுத்தானியங்களால் செய்யப்பட்ட இட்லி, சம்பா ரவை உப்புமா, கஞ்சி, தோசை, சோள உப்புமா, தவிடு நீக்காத கோதுமை சப்பாத்தி, சிறுதானிய உணவுகள், முளைகட்டிய பயிறுகள், கேழ்வரகு தோசை போன்றவைகளில் வைட்டமின் C நிறைய உள்ளன.

பாக்டீரியாக்கள்: அதேபோல, புரோபயாடிக் உணவுகளை உட்கொண்டால் குடலிலுளள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்... இது அஜீரணத்தையும் தடுக்கும்.தயிர், ஆளிவிதை, முள்ளங்கி, புரோக்கோலி போன்றவைகள் புரோபயாடிக் உணவுகளாகும்.
பூஞ்சை தொற்று: அதேபோல, வெப்பநிலை குறைவதும், ஈரப்பதத்தின் அளவு அதிகரிப்பது பூஞ்சை தொற்றுக்கும் வழிவகுக்கும் என்பதால், கால்விரல் இடுக்குகள் உட்பட உடலை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

வெயில், மழை எதுவானாலும், கேரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை தவறாமல் எடுத்து கொள்ளலாம்.. வெயில் என்றாலும், ஏற்ற குளிர்ச்சியான பானங்களை அருந்த தேவையில்லை.. தண்ணீர் மூலமே வியாதிகள் பெரும்பாலும் பரவுவதால், குடிநீரில் கவனமாக இருக்க வேண்டும். ஐஸ் வாட்டரும் குடிக்கக்கூடாது.. மண்பானை நீர், பதனீர், இளநீர் போன்றவை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+