கண்களில் சோர்வா..குளிர்ச்சியடைய இந்த விசயங்களை தவறாமல் செய்யுங்கள்..Dr.யோ.ரா.மானேக்சா ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை காலத்தில் கண்களில் எரிச்சல் அதிகமாகும். அதிலும் கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு கண்கள் சூடாகவும், பார்வை மங்கலாகவும் மாறும். கண்கள் பார்வை குறையாமல், எளிதில் சோர்வடையாமல் இருக்க ஆலோசனைகள் கூறியுள்ளார் பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி, அறுவை மருத்துவத் துறை நிபுணர் Dr.யோ.ரா.மானேக்சா.எம்.டி(சித்தா).

சந்திர தரிசனம் இரவு உணவுக்குப்பின் ஒவ்வொரு கண்ணிலும் தலா மூன்று துளி சுத்தமான நீர் விட்டு, இமைகளை தேய்த்து, சந்திரனைப் பார்ப்பது நல்லது. வானம் சுத்தமாக உள்ள காலத்தில் இரு கை விரல்களை சேர்த்து சதுரம் போல செய்து அதன் மூலம் சந்திரனை சுமார் 20 நிமிட நேரம் பார்த்தல் 'சந்திர தரிசனம்' ஆகும். இது நமது சித்தர்கள் அருளிய வழிமுறையாகும். இதை தொடர்ந்து செய்து வந்தால் கண் ஒளி கூடும், கண் குளிர்ச்சி பெறும்.

Summer heat health news: Tired eyes Do these things regularly to get cold Dr.Y.R Maneksa.MD advises

பண்ணைக் கீரை, முருங்கைக்கீரை, சிறு கீரை, கறிவேப்பிலை கீரை, வெந்தயக்கீரை இவைகளில் ஒன்றை தினமும் சாப்பிட வேண்டும். உணவில் கேரட், பப்பாளிப் பழம், பாதாம், மீன், முட்டை இவைகளை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். பொன்னாங்கண்ணிக் கீரையைப் புளி சேர்க்காமல் சமைத்து நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன்பு இரு உள்ளங்கால்களின் நடுவிலும் பசுவின் நெய்யைத் தேய்த்து தூங்க வேண்டும். இரவு படுக்கும் முன் தினமும் திரிபலா சூரணம் ஒரு கிராம் வீதம் சாப்பிட்டு வர வேண்டும். 6) தான்றிக்காய் தோல் பொடி 500 மி.கி. கிராம் வீதம் தேனில் சாப்பிட்டு வர கண் ஒளி கூடும்.

Summer heat health news: Tired eyes Do these things regularly to get cold Dr.Y.R Maneksa.MD advises

தூதுவளைக் காய் மற்றும் கீரையை சமைத்து நெய் சேர்த்து சாப்பிட்டு வர கண்ணில் உண்டாகும் பித்த நீர் முதலான நோய்கள் நீங்கும். சந்தனாதி தைலம், திரிபலா தைலம், பொன்னாங்கண்ணித் தைலம் இவைகளில் ஒன்றை வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.

பஞ்ச கற்ப விதி: கடுக்காய் தோல், நெல்லி வற்றல், கஸ்தூரி மஞ்சள், வேப்பம் வித்து, மிளகு இவற்றை பொடித்து பசும்பாலில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வாரம் ஒருமுறை குளித்து வந்தால் கண் ஒளி பெறும். உடல் சூடு குறையும்.

பொதுவாகவே இரவு உணவை 9 மணிக்குள் சாப்பிட்டு 11 மணிக்குள் தூங்க வேண்டும். அதிகாலை 4-5 மணிக்குள் எழ வேண்டும். தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் கண்கள் சோர்வடைவதை தவிர்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+