கிட்னியில் கல் இருக்கா? சைனஸ் விரட்டணுமா? சூப்பர் மூலிகை கற்பூரவல்லியை விடாதீங்க.. இயற்கை மருந்து
சென்னை: சுவாச கோளாறுகளுக்கு கற்பூரவல்லியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? சளி, இருமல், சைனஸ், தலைவலி, தொண்டை வலி, உள்ளிட்ட பிரச்சனைகள் தவிர, வேறு எதற்கெல்லாம் கற்பூரவல்லி உபயோகப்படுகிறது? உறுதியான பற்கள், ஆரோக்கியமான சருமம், அடர்த்தியான தலைமுடி இவைகளுக்கு கற்பூரவல்லி எந்தெந்த வழிகளில் உபயோகப்படுகிறது? இவைகளை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
வைட்டமின் C , A ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கற்பூரவல்லி இலைகள் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த மூலிகையாக உள்ளதால்தான், நம்முடைய முன்னோர்கள் வீடுகளில் வளர்த்து வந்தனர்..

குறிப்பாக, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்களை கொண்டிருப்பது கற்பூரவல்லி.. இந்த கற்பூர இலைகள், சளி, இருமலுக்கு பல வழிகளில் மருந்தாகிறது.. குறிப்பாக, கற்பூரவல்லி இலையை அலசி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். அதேபோல, அரிசி திப்பிலி மற்றும் மிளகு இந்த இரண்டையும் கரகரப்பாக தூள் செய்து கொள்ள வேண்டும்.
கற்பூரவல்லி இலைகள்
ஸ்டவ்வில் ஒரு பாத்திரத்தில தண்ணீர் ஊற்றி கற்பூரவல்லி இலைகள், இடித்த அரிசித்திப்பிலி, மிளகு, கருஞ்சீரகம் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு, இறக்கி வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் சளி, இருமல், கபம் அனைத்தும் நீங்கும்.
கற்பூரவல்லி, துளசி இவைகளின் இலைகளை சம அளவு எடுத்து லேசாக வதக்கி சாறு எடுத்து. 5 மி.கி. அளவு தினமும் காலையில் குழந்தைகளுக்கு தந்து வந்தால் மார்புச்சளி குணமடையும்.
மூக்கடைப்பு, சளி, இருமல்
கட்டுக்கடங்காத தலைவலி இருந்தால், இந்த சாற்றில் சர்க்கரை கலந்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும். அல்லது கற்பூரவல்லியை விழுதாக அரைத்து, நீரில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி, ஏலக்காய், கிராம்பு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினமும், மூன்று நாட்களுக்கு, காலை, மாலை குடித்தால் சளி, தலைபாரம், தலைவலி தொந்தரவு நீங்கிவிடும்.
அல்லது வெறுமனே கற்பூரவல்லி இலைகளை கையாலேயே கசக்கி தண்ணீரில் போட்டு ஆவி பிடிப்பதாலும், இன்னல்கள் தீரும். ஜீரண குறைபாடு இருந்தால் கற்பூரவல்லி சாற்றை நீரில் கலந்து குடிக்கலாம்..
சைனஸ் தொந்தரவு இருந்தாலும், கற்பூரவல்லி சாற்றை குடித்தால் போதும்.. அதாவது, அந்த சாறு தொண்டையில் படுமாறு குடிக்க வேண்டும்.. இதனால், தொண்டைக்கட்டு, வறட்டு இருமல், சளி தொந்தரவுகள் ஆகியவை நீங்கும்.
சுவாச கோளாறுகளுக்கு மட்டுமல்லாமல், கற்பூரவல்லி இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது... எனவே, சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்களின் நலனை காக்க செய்வதில் கற்பூரவல்லிக்கு பெரும் பங்கு உண்டு.
பற்கள், சொறி, படை
சரும ஆரோக்கியத்துக்கும் பயன் தரும் மூலிகையாகும்.. குறிப்பாக, சொறி, அரிப்பு படை போன்ற பிரச்சனைகள் இருந்தால், கற்பூரவல்லி இலையை கசக்கி அதன் சாற்றினை பாதிக்கப்பட்ட இடங்களில் விட்டால் நிவாரணம் பெறலாம்.
அதேபோல, பற்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. ஏனென்றால், இந்த மூலிகையில், தைமால் என்ற வேதிப்பொருள் உள்ளதால், பற்சிதைவை உண்டாக்கக்கூடிய பாக்டீரியாவை அழிக்கும் திறன் பெற்றிருக்கிறது. எனவேதான், டூத்பேஸ்ட் தயாரிப்புகளில் கற்பூரவல்லி இலைகள் மூலப்பொருட்களாக சேர்க்கப்படுகின்றன.
சரும பாதுகாப்பு, தலைமுடி ஆரோக்கியம்
கற்பூரவல்லி இலைகளுடன் சிறிது கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து, அதன் சாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். மீண்டும், கடலை, கஸ்தூரி மஞ்சள், கற்பூரவல்லி இலையின் சாறு கலந்து முகத்தில் பூசி ஊறவைத்து கழுவினால், பொலிவும், மினுமினுப்பும் கிடைக்கும். அல்லது கற்பூரவல்லி இலைகளுடன் தயிர், எலுமிச்சம் சாறு கலந்தும் முகத்துக்கு தடவலாம். அதுமட்டுமல்ல, நரை முடியினை கருப்பாக மாற்றும் திறன் கற்பூரவள்ளி இலைகளுக்கு உண்டு..
கற்பூரவள்ளி இலையிலுள்ள நார்ச்சத்து ரத்தத்திலுள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு உதவுகிறது. எனவே, 4 கற்பூரவள்ளி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். உயர் ரத்த அழுத்தமும் குறையும்.. வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கும் இந்த இலைகள மருந்தாகின்றன.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications