மட்டன் குழம்பு பண்றீங்களா? இந்த ஒண்ணு மட்டும் சேருங்க.. ஆட்டுக்கறி வேற லெவலில் இருக்கும்.. சூப்பர்
சென்னை: உடலுக்கு கெடுதி என்றே மட்டனை தூரமாக ஒதுக்கி வைத்து விடுகிறோம்.. ஆனால், ஆட்டிறைச்சியில் நிறைய சத்துக்கள் இருக்கின்றன என்பதையும் மறுத்துவிட முடியாது.
இருதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள், மட்டன் பக்கமே வரக்கூடாது.. இதில், எந்தவிதமான மாற்றமும் கிடையாது.

அதேசமயம், நல்ல உடல்நல ஆரோக்கியம் உள்ளவர்கள், மாதம் 1 முறையாவது, குறிப்பிட்ட அளவு ஆட்டிறைச்சியை உணவில் எடுத்து கொள்ளலாம். அந்தவகையில், செம்மறி ஆட்டுக்கறி, வெள்ளாட்டுக்கறி என்று 2 வகையான இரண்டு வகையான மட்டன்கள் இருந்தாலும், 100 கிராம் செம்மறி ஆட்டில் 300 கலோரிகள் உள்ளன.. 20 கிராம் கொழுப்பு, புரோட்டீன் 25 கிராமும், கொலஸ்டிரால் 100 மி.கிராமும் உள்ளன.
வெள்ளாட்டுக்கறி: 100 கிராம் வெள்ளாட்டு கறியில், 130 கலோரிகளும், 3 கிராம் கொழுப்பு, 27 கிராம் புரோட்டீன் உள்ளன. எனவே, வெள்ளாட்டுக்கறி சிறந்தது என்றாலும், இருவகை இறைச்சியிலுமே இரும்பு, துத்தநாகம், வைட்டமின் B12 சத்துக்கள் ஒரே மாதிரியாகவே உள்ளன. அதற்காக இந்த கறியையும் அதிகமாக சாப்பிடக்கூடாது.
எப்போதுமே மட்டன் சமைக்கும்போது, குறைவான எண்ணெய், வேக வைத்து, கிரில் செய்து சாப்பிடலாம். அல்லது மிளகு தூள் சேர்த்து, சூப் போல சாப்பிட்டால்.
மேலும், நார்ச்சத்து நிறைந்த கேரட், பீன்ஸ், வாழைக்காய், கத்தரிக்காய், முருங்கைக்காய், காலி பிளவர் மற்றும் தோல் உள்ள உருளைக்கிழங்கு போன்றவைகளுடன் சேர்த்து மட்டன் குழம்பு செய்தால், மட்டனிலிருக்கும் கொழுப்புக்கள் உறிஞ்சப்பட்டுவிடும்..
எள்ளு விதைகள்: அதேபோல, எள்ளு சேர்த்து மட்டன் குழம்பு செய்யலாம். காரணம், எள்ளு விதைகளில் மக்னீசியம் அதிகமாக உள்ளன.. ரத்த அழுத்த நோயை குறைக்க உதவும் சத்துக்கள் அதிகமாகவே இந்த மக்னீசியத்தில் உள்ளன.
அதேபோல, எள்ளில், குறிப்பிடத்தக்க அளவு கால்சியம் உள்ளது.. இது பற்கள் மற்றும் எலும்புகளை வலுவாக வைத்திருக்க பேருதவி புரிகிறது. அதேபோல, ஆஸ்டியோபோரோசிஸை தடுக்கக்கூடிய பண்பு, இந்த எள் விதைகளுக்கு உள்ளதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன.
புற்று நோய்க்கு எதிரான பண்புகள் எள்ளு விதைகளில் உள்ளன.. ஆரோக்கியமான கொழுப்பு, புரதம் மற்றும் நார்ச்சத்து இருக்கின்ற எள்ளு விதைகளை, மட்டனுடன் சேர்த்து சமைக்கும்போது, கொழுப்பு சத்துக்கள் உறிஞ்சப்படுகின்றன. எள்ளு மட்டன் குழம்பு எப்படி செய்வது? வெறும் 2 ஸ்பூன் எள்ளு விதைகளை குழம்பில் சேர்த்தாலும், அது நல்ல பலனை தரக்கூடியது.
மட்டன் குழம்பு: ஒரு குக்கரில், நன்றாக கழுவி சுத்தம் செய்யப்பட்ட மட்டனை சேர்த்து, அதனுடன், மட்டனுடன் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு தயிர் தேவையான சேர்த்து நன்றாக விசில் விட்டு வேகவைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் சிறிது எண்ணெய் ஊற்றி, மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், எள், பட்டை, கிராம்பு, முந்திரி, நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி என அனைத்தையும் சேர்த்து வதக்கி, ஆற வைத்து மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும்.
குழம்பு ரெடி: அதே வாணலில் மீண்டும் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதையும் கொட்டி வதக்க வேண்டும்.
பிறகு, குக்கரில் வேக வைத்து வைத்துள்ள மட்டனை சேர்க்க வேண்டும். இப்போது நறுக்கிய ஒரு முருங்கைக்காய் அல்லது ஒரு உருளைகிழங்கையும் சிறிதாக நறுக்கி குழம்பில் சேர்க்க வேண்டும். உப்பு சேர்த்து நன்றாக வேகவைத்து, இறுதியில் கொத்தமல்லி தூவி இறக்கினால் எள்ளு மட்டன் குழம்பு ரெடி.












Click it and Unblock the Notifications