தினமும் வெண்ணெய்ப்பழம்.. மினுமினு சருமத்துக்கு அவகேடோ போதுமே.. புண்ணை ஆற்றும் பட்டர்ஃப்ரூட் - பெஸ்ட்
சென்னை: அவகேடோ அல்லது அவகோடா அல்லது பட்டர் ஃப்ரூட் என்றெல்லாம் அழைக்கப்படுவது வெண்ணெய்ப்பழம்.. இந்த பழத்தில் அப்படியென்ன நன்மைகள் உள்ளன? பெண்களுக்கு எந்தவகையில் இந்த பழம் உதவுகிறது?
மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் C, K1, B6, கார்போஹைட்ரேட்டுகள், புரதம், தாது உப்புக்கள், நல்ல கொழுப்புக்கள் இப்படி பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளதுதான் வெண்ணைப்பழம்.

வெண்ணெய்ப்பழம்: சமீபத்தில் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் ஜர்னலில் ஒரு ஆய்வுக்கட்டுரை வெளியாகியிருந்தது. அதில், ஒவ்வொரு வாரமும் வெண்ணெய்ப்பழத்தை 2 முறை சாப்பிட்டு வந்தால், கரோனரி இதய நோய் ஏற்படுவதை 21 சதவீதம் குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இதய ஆரோக்கியத்தை சீராக்குகிறது இந்த வெண்ணெய்ப்பழங்கள்..
நார்ச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளதால், இந்த பழம் உடலிலுள்ள நச்சுக்கள், கழிவுகளை நீக்குகிறது.. கெட்ட கொழுப்பை குறைப்பதிலும், வெண்ணைப்பழத்திற்கு நிறையவே பலன் இருப்பால், டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த பழம் பெஸ்ட் சாய்ஸ் ஆகும். சிறுநீரக பிரச்சனைகள் வராமல் தடுப்பதிலும் வெண்ணெய்ப்பழங்கள் பேருதவி புரிகின்றன.
எலும்பு பிரச்சனைகள் : பழங்களிலேயே ஆர்த்ரிடிஸ் பிரச்சனைக்கும் நிவாரணமாக இருக்கக்கூடிய ஒரே பழம் இந்த வெண்ணைப்பழம்தான்.. இதற்கு காரணம், இதிலுள்ள சேர்மங்கள் ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் இதர எலும்பு பிரச்சனைகளை சீராக்குகின்றன..
பெண்களுக்கு இந்த பழங்கள் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். அந்தவகையில், கர்ப்பிணிகளுக்கு இந்த பழம் மிகச்சிறந்தது.. அவகேடோ சாப்பிட்டு வரும்போது, வயிற்றிலுள்ள குழந்தைக்கும் தேவையான அனைத்து சத்துக்கள் கிடைக்கின்றன.. இதனால், குழந்தைகளின் முழு வளர்ச்சிக்கு தூண்டுகோலாகிறது.. அத்துடன் கருமுட்டை வளர்ச்சி குறைவாக இருந்தாலும் சீராகிவிடும். எனவே, கர்ப்பிணிகள், மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று இந்த பழங்களை சாப்பிடுவது நல்லது.
கண் பார்வை: பார்வை திறன், புரை வளர்தல் போன்றவைகளை கட்டுப்படுத்தப்படுத்தக்கூடிய சக்தி இந்த வெண்ணெய்ப்பழங்களுக்கு உள்ளனவாம்.. அதாவது, வாழைப்பழத்தை விட அதிக பொட்டாசியம், வெண்ணெய்ப்பழத்தில் உள்ளதால், ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பழம் சிறந்தது.
நிறையை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அவகேடா பழத்தில் உள்ளதால், புற்றுநோய் செல்களை எதிர்த்து போடுகிறது.. இந்த ஆன்டி ஆக்ஸடன்ட்கள்தான், சரும சுருக்கத்தை போக்கி சருமம் பொலிவுபெறவும் உதவுகிறது.. சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்வதில், இந்த பழத்துக்கு பெரும்பங்கு உண்டு. எனவேதான், ஃபேஸ் கிரீம் தயாரிப்புகளில் இந்த பழங்கள் மூலப்பொருளாக சேர்க்கப்படுகின்றன.
வெண்ணெய்ப்பழம்: நன்றாக பழுத்த வெண்ணெய்ப்பழத்தை பழத்தை விழுதாக அரைத்து கொள்ள வேண்டும். அதில், ஒரு ஸ்பூன் தேன், பால் சேர்த்து நன்றாக கலந்து, முகம், கழுத்து, கைகளில் தடவி 30 நிமிடம் ஊறவைத்து கழுவினாலே, சருமத்தில் நல்ல பொலிவு தெரியும்.
அல்லது, இந்த வெண்ணெய் பழத்தை வேகவைத்து, அதனுடன் பப்பாளியை மசித்து, தேன் கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவி வந்தாலும் சருமம் பளிச்சிடும், பருக்கள், கரும்புள்ளிகளளும் நீங்கிவிடும். அல்லது, வெண்ணெய் பழத்தை வேக வைத்து மசித்து, சிறிது சர்க்கரை, பால் சேர்த்தும் முகத்தில் பயன்படுத்தி வரலாம்..
சரும பொலிவு: சருமத்தை போலவே, தலைமுடிக்கும் இந்த பழங்கள் உதவுகின்றன.. வெண்ணெய்ப்பழத்தை மட்டும் தனியாக எடுத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு, தேன் கலந்து தலைமுடிக்கு தடவி 30 நிமிடம் ஊறவைத்து குளித்து வந்தால், தலைமுடி பலமாகும்.. எனவே, ஃபேஸ் வாஷ், ஷாம்புகள், க்ரீம்கள் என அத்தனை தயாரிப்பகளிலும், வெண்ணெய்ப்பழங்கள் மிக முக்கிய பொருளாக சேர்க்கப்படுகின்றன.
அதேபோல, அவகேடா எண்ணெய்யை முகத்தில் தடவி வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிவந்தாலும், சருமம் பளிச்சிடும்.. இந்த எண்ணெய்யை நகங்களுக்கு பூசி வந்தாலும், நகங்கள் வலுவாகும்.. எளிதில் நகங்கள் உடையாது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications