நார்த்தை இலை.. நார்த்தங்காயில் இப்படி ஒரு அதிசயமா? உபாதையை விரட்டியடிக்கும் நார்த்தையிலை ரசம்.. வாவ்
சென்னை: சத்துக்கள் நிறைந்த நார்த்தம் இலைகளின் பயன்கள் என்னென்ன தெரியுமா? எந்த நோய்களை நார்த்தை இலைகள் குணமாக்குகின்றன தெரியுமா?
எலுமிச்சம் வகையை சேர்ந்த நார்த்தங்காயை பொறுத்தவரை குளிர்ச்சி நிறைந்தது.. உடல் சூட்டை தணிக்கக்கூடியது.. கர்ப்பிணிகளுக்கு நார்த்தம் பழச்சாறு மிகவும் நல்லது.. ஹீமோகுளோபின் பிரச்சனைக்கு சிறந்த தீர்வு இந்த நார்த்தம்பழங்கள்.

நார்த்தம் பழ ஜூஸுடன் வெந்நீரும் கலந்து குடித்தால், வாயு தொல்லை நீங்கும்.. இதய நோய், பக்கவாதம் அபாயத்தை குறைக்க கூடியது.. ஆன்ட்டி ஆக்சிடென்ட் சத்துக்கள் நிறைந்துள்ளதால், புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது.
நார்த்தங்காய் பழத்தை ஜூஸ் போல பிழிந்து, அதனை வெந்நீருடன் கலந்து குடித்தால், வயிற்றில் ஏற்படும் வாயு சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கும்.. இந்த சாறு, இதய நோய், பக்கவாதம் ஆகியவை உருவாகும் அபாயத்தை குறைக்க கூடியது.. நார்த்தங்காயில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் சத்துக்கள் நிறைந்துள்ளதால், புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது.
நன்மைகள்: நார்த்தங்காய், நார்த்தம் பழத்தை போலவே அபார நன்மைகளை கொண்டது நார்த்தை இலைகள்..எலுமிச்சை வகையை சேர்ந்தது என்பதால், சிட்ரிக் அமிலம் அதிகமாக உள்ள இலையாகும்.. வைட்டமின் C சத்துக்கள் நிறைந்துள்ளது..
கர்ப்பிணி பெண்கள் தினமும் நார்த்தங்காய் இலையை பொடி செய்து சாப்பிடலாம். கால்சியம், மக்னீசியம், அயோடின், இரும்புச்சத்து, சோடியம், என அத்தனை சத்துக்களும் இந்த நார்த்தை இலையில் உள்ளன.. இந்த இலையில் பொடி செய்து சாப்பிட்டால், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.. வாந்தி உணர்வும் கட்டுப்படும்.
நார்ச்சத்துக்கள்: இலைகளில் நார்ச்சத்துகள் அதிகம் என்பதால், ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களுக்கும் பலனுள்ள இலைகளாக அமைகின்றன. குடல் பாதுகாப்பையும் மேம்படுத்துகிறது. செரிமான பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த நார்த்தங்காய் இலைகள் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.. இந்த இலைகளை பொடி செய்து சாப்பிட்டால், அஜீரணம், நெஞ்செரிச்சல், உடல் சூடு நீங்கும்..
இந்த இலைகளும் ரத்த சுத்திகரிப்புக்கு உதவுகிறது. வயிற்றுப்புண்கள், வாய்ப்புண்களை இந்த நார்த்தங்காய் ஆற்றுகிறது..
இந்த இலைகளை துவையல் போல செய்து சாப்பிடலாம்..
பயன்கள்: இந்த துவையல், பித்தம், வாதம் பிரச்சனைகளை குணமாக்கும். செரிமானத்தை சீராக்கும்.. குடல் பிரச்சனைகளை சரியாக்கும். இரும்புச்சத்து, சோடியம், கால்சியம், பீட்டா கரோட்டீன், மக்னீசியம், அயோடின், நார்ச்சத்துகள் நிறைந்தது என்பதால் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கான மருந்தாக திகழும்.. அதுமட்டுமல்ல, இந்த இதிலுள்ள செலினியம் சத்துக்கள் மூளையின் செயல்பாடுகளைத் தூண்டிவிடும்.
இளசான நார்த்தை இலைகளின் நடுவிலுள்ள நார் பகுதியை கிள்ளியெடுத்து விட்டு, இலைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு வாணலில், காய்ந்த மிளகாயை லேசான எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு நார்த்தை இலை, புளி, காய்ந்த மிளகாய், தேங்காய், உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால் துவையல் ரெடி.
ரசம்: அதேபோல, நார்த்தை இலையில் ரசம் வைக்கலாம்.. இளசான நார்த்தை இலை, காய்ந்த மிளகாய், பூண்டு, மிளகு, சீரகம், கொத்தமல்லி போன்றவற்றை இடித்துக்கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை தாளித்து, இடித்து வைத்திருக்கும் கலவைகளை கொட்டி வதக்க வேண்டும். இதனுடன் தண்ணீர், உப்பு சேர்த்து, இறக்கும்போது, எலுமிச்சம் சாறு பிழிந்து இறக்கினால் நார்த்தை இலை ரசம் ரெடி.












Click it and Unblock the Notifications