பப்பாளி பழம்.. முகத்தில் "பூனை" முடி.. தேவையற்ற முடியை நீக்கணுமா? வீட்ல தக்காளி இருக்கா? தயிர்? செம
சென்னை: நம்முடைய முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு, இயற்கையான முறையிலேயே தீர்வு காணலாம்.. இதோ குட்டி குட்டி டிப்ஸ்கள்.
ஒவ்வொரு ஆணும், பருவ வயதை எட்டியதுமே, அவர்களது உடலில் கை, கால், மார்பு பகுதிகளில் அதிகபடியான முடி வளர்ச்சி உண்டாகும். இதற்கு காரணம் முடி வளர்வதை ஊக்குவிக்கக்கூடிய ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோன் சுரப்பதுதான். இந்த ஹார்மோன் ஆண்களுக்கு உரியது.

ஹார்மோன்: எனவே, பெண்களுக்கு இந்த ஹார்மோன் அளவு குறைவாக இருக்கும். இந்த ஹார்மோன் சில காரணங்களால் சுரப்பை தூண்டும் போது முகத்தில் தேவையற்ற முடி, முகத்தில் வளர்ந்துவிடுகிறது. அதேபோல, மாத்திரைகள், உடல் ரீதியிலான மாற்றங்கள் போன்ற காரணங்களினாலும், சில பெண்களுக்கு, இதுபோன்ற பூனை முடிகள் முகத்தில் வளரலாம்.
இந்த முடிகளை நிரந்தரமாக வளர விடாமல் தடுக்க வேண்டுமானால், அதற்கு பிரதான பொருள் கிழங்கு மஞ்சளே போதும். காரணம், மஞ்சளில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி வைரல் பண்புகள் நிறைந்திருப்பதால், சருமத்தை அனைத்து விதமான தொற்றுக்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது..
சரும பாதுகாப்பு: இந்த பூனை முடிகளை நீக்க வேண்டுமானால், மஞ்சள் முக்கிய பொருளாக பயன்படுகிறது. இந்த மஞ்சளுடன் வேறு சில பொருட்களை கலந்து பயன்படுத்தினால், பூனை முடி உதிர்வது எளிதாகும்.
இரவு தூங்கும்போது, இந்த மஞ்சளை உரைத்து, அதில், சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி வந்தால் முடிகளின் வளர்ச்சி கட்டுப்படும்... அல்லது கஸ்தூரி மஞ்சளை அரைத்து பாலாடை கலந்து பூசி வந்தாலும், முகத்திலுள்ள பூனை முடிகள் மறையும்.
சர்க்கரை கரைசல்: சர்க்கரை + எலுமிச்சம் சாறு இரண்டையுமே கலந்து லேசாக சூடாக்கினால், பேஸ்ட் போல கிடைத்துவிடும். இதனை ஆறவிட்டு, முகத்தில் குறிப்பாக பூனை முடியுள்ள இடங்களில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனால், அந்த பேஸ்ட் இறுக்கமாவதுடன், முடிகளையும் வெளியே கொண்டுவந்துவிடும்.
பப்பாளிக்காய், மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் முடிகள் நீங்கும். அதேபோல, கஸ்தூரிமஞ்சள்தூள், பாசிப்பயிறு தூள் இரண்டையும் சம அளவு கலந்து, பேஸ்ட் போல குழைத்து முகத்தில் தடவி வந்தாலும், பூனை முடி கொட்டிவிடும்.
பப்பாளி பழம்: பப்பாளி பழத்தையும் பயன்படுத்தலாம். பப்பாளிப்பழத்தை பாலில் மசித்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊறவிட்டு கழுவி வரலாம். பப்பாளியில் பாபைன் என்ற பொருள் மட்டுமல்லாமல், வைட்டமின் A, C, உட்பட நிறைய என்சைம்கள் நம்முடைய சரும ஆரோக்கியத்துக்கும், பளபளப்புக்கும் உதவுகின்றன.. இதில், பாலை சேர்க்கும்போது, மெல்லிய முடிகளும் கீழே உதிர்ந்துவிடும். ஓட்ஸ் பொடியுடன் வாழைப்பழத்தை மசித்து, முகத்தில் தடவினாலும் பலன் கிடைக்கும்.
அதேபோல, தயிர், கடலைமாவு இரண்டையும் பேஸ்ட் போல கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் போதும்.. கடலை மாவில் எக்ஸ்ஃபோலியேட் பண்புகள் இருப்பதாலும், தயிரில் லாக்டிக் அமிலம் இருப்பதாலும், சருமத்துக்கு ஆரோக்கியத்தை தருகின்றன.. இதனால், மெல்லிய முடிகள் முகத்திலிருந்து கொட்ட தொடங்கும்.
பச்சைப்பயிறு: அல்லது பச்சை பயிறு தோலை பசும்பாலில் கலந்து, அதில் சிறிது எலுமிச்சம் சாறு கலந்து முகத்தில் பூசினாலும் முடிகள் வளர்ச்சி தடைபடும்.. அல்லது வெறுமனே எலுமிச்சம் சாறு + தேன் இரண்டையும் நன்றாக குழைத்து, முகம் , கழுத்து பகுதிகளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவினால் முடி வளர்ச்சி குறைய தொடங்கும்.. சருமத்திலிருக்கும் அழுக்குகளும் நீங்கிவிடும். வெறுமனே தக்காளி சாறு எடுத்து பூசினாலும், முடி வளர்ச்சி கட்டுப்படும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications