மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்கி சாப்பிடுவீங்களா?.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
சென்னை: சளித் தொற்று, கிருமி தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு, வைட்டமின் குறைபாடு தொடர்பான 90 மருந்துகள் போலியான மற்றும் தரமற்றவையாக இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
நம் உடலில் ஏற்படும் நோய் உபாதைகளுக்கு மருத்துவர் ஆலோசனையின்றி எந்தவொரு மருந்துகளையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. இப்படி ஆலோசனையின்றி மருந்துகள் எடுத்துக் கொள்வதன் மூலமாக பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், பெரும்பாலும் சளி, இருமல், காய்ச்சல் என எந்தவிதமான நோய் பாதிப்பு ஏற்பட்டாலும் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகள் உட்கொள்ளும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

Image: AI created
அதேபோல, குழந்தைகளுக்கு ஏற்கனவே மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை மெடிக்கல் ஷாப்புகளில் இருந்து வாங்கி உபயோகிக்கின்றனர். ஒவ்வொரு நோயும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான வகைகளில் ஏற்படுகின்றன. வயது, காலநிலை, எதனால் நோய் வந்தது போன்ற எந்தவொரு மெடிக்கல் ஹிஸ்டரியும் இல்லாமல் வெறுமெனே மருந்து கடைகளில் இருந்து மருந்துகள் வாங்கி உண்பது பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். சமயத்தில் இது உயிரிழப்புகளைக் கூட ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகும்.
சமீபகாலமாக மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் தரமற்ற வகையில் தயாரிக்கப்பட்ட மற்றும் போலியான மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மத்திய மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில், சளி, வைட்டமின் குறைபாடு, ஜீரண மண்டலம் தொடர்பான பிரச்னைகள், கிருமித் தொற்று உள்ளிட்ட நோய் பாதிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட 90 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மருந்துகளில் 80 சதவீத மருந்துகள் ஹிமாச்சல பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த மருந்துகள் தொடர்பான விவரங்கள் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் https://cdsco.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
போலியான, தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு மருந்துகள் தொடர்பான விவரங்களை அரசு இணையதளத்தில் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். எனவே, மருந்துகளைப் பயன்படுத்தும்போது உரிய மருத்துவ ஆலோசனையுடன் பெற வேண்டும் என்றும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
போலியான, தரமற்ற மருந்துகள் தயாரித்த சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள மத்திய மற்றும் மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் முடிவு செய்துள்ளன.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications