அய்யோ.. டிராபிக் இரைச்சலால் இருதய பாதிப்பு வரக்கூடுமாம்.. ஆய்வில் வெளிவந்த ஷாக் தகவல்!
சென்னை: டிராபிக் இரைச்சல்(noise)களால் இருதய பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அதிரவைக்கும் ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. 10 டெசிபல் அளவு கொண்ட டிராபிக் இரைச்சல்களால் இருதய பாதிப்புகள் 3.2 சதவிகிதம் வரும் அபாயம் உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் சாலைகளில் வாகன இரைச்சல் சத்தம் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும். அதிலும், தேவையில்லாமல் ஹாரன்களை அடிப்பதால் பேரிரைச்சல் கேட்கும். இதுபோன்ற ஒலி மாசுபாடு பெரு நகரங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

இந்த டிராபிக் ஒலிகள் வெறுமனே தொந்தரவாக மட்டும் இருக்க போவது இல்லையாம்.. நமது இருதயத்திற்கு கூட உலை வைக்கும் என்று புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, சாலைகளில் வாகனங்களால் ஏற்படும் இரைச்சைல்கள், ரயில்கள், விமானங்களின் சத்தம் ஆகியவற்றால் இருதய வால்வு பிரச்சினைகள் பக்கவாதம் மற்றும் நீரிழிவுகள் போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
டிராபிக் நாய்ஸ்களால் ஐரோப்பிய நாடுகளில் மட்டும் ஆண்டிற்கு 16 லட்சம் பேருக்கு ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. குறிப்பாக இரவில், போக்குவரத்து இரைச்சல் நம் தூக்கத்தை பாதிப்பதோடு, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களை அதிகரிக்கிறதாம்.
இதன் விளைவாக ரத்த நாளங்கள் மற்றும் மூளைக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கும் என்றும் இதனால், உயர் ரத்த அழுத்தம், இருதய பாதிப்புகள் ஆகியவற்றிற்கு வழிவக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டென்மார்க், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் டிராபிக் இரைச்சலால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன், சர்குலேஷன் என்ற ரிசர்ச் என்ற இதழில் இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் படி, ஒவ்வொரு 10 டெசிபல் சத்தமும் இருதய பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் 3.2 சதவிகிதம் அதிகரிக்கிறதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இருதய வால்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு போக்குவரத்து இரைச்சலே முக்கிய காரணமாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications