ஆட்டு குடல் அவசியம்.. மட்டன் Vs போட்டிக்கறியில் எது நல்லது? ஆட்டுக்குடலில் சத்து.. யாருக்கு நல்லது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோழிக்கறி உள்ளிட்ட மற்ற இறைச்சிகளைவிட, ஆட்டுக்குறியில் ஏராளமான சத்துக்கள் இருக்கிறதாம். வைட்டமின் B12, நியாசின், இரும்பு, செலினியம் சத்துக்கள் செழித்து காணப்படுகின்றன.. அதிலும், மற்ற இறைச்சி வகைகளோடு ஒப்பிடும்போது, மட்டனில் இரும்புச்சத்து நிறைய உள்ளதே இதன் ஸ்பெஷாலிட்டியாகும். எனினும், ஆட்டுக்கறி நல்லதா ? ஆட்டுக்குடல் நல்லதா? என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.

மட்டனில் உள்ள B12 நியூரான்கள், ரத்த அணுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க செய்கிறது. ஆட்டுக்கறியில் உள்ள செலினியம் நோயெதிர்ப்பு அமைப்பு, வளர்சிதை மாற்றம், தைராய்டு செயல்பாட்டை தூண்ட செய்கிறது. நியாசின் உணவை ஆற்றலாக மாற்ற செய்கிறது.

மட்டனிலுள்ள சத்துக்கள்

முக்கியமாக மற்ற இறைச்சி வகைகளோடு ஒப்பிட்டால், இரும்பு சத்து மட்டனில் அதிகம்.. உதாரணத்துக்கு 100 கிராம் சிக்கனில் வெறும் 1.7 மி.கி மட்டுமே இரும்புச்சத்து என்றால், 100 கிராம் மட்டனில் 3.8 மி.கி. இரும்புச்சத்து உள்ளது..

மட்டனில் பொட்டாசியம் அதிமாகவும, சோடியம் குறைவாகவும் உள்ளதால், நம் உடலுள்ள, பொட்டாசியம், சோடியம் அளவை சீராக வைத்திருக்க செய்கின்றன. நிறைவுறா கொழுப்புகள் ஆட்டுக்கறியில் இருப்பதால், இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆய்வுகூறுகின்றன..

ஆட்டுக்குடலின் நன்மைகள்

ஆனால், போட்டி" என்று சொல்லக்கூடிய ஆட்டுக்குடலில் இரும்புச்சத்து, மக்னீசியம், செலினியம், ஜிங்க் போன்ற கனிமச்சத்துக்களும், கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் A, D, E, K போன்ற சத்துக்களும், புரோட்டீன், வைட்டமின் B12 போன்ற ஊட்டச்சத்துக்களும் நிரம்பி உள்ளன.. ஆண்களுக்கு 30 கிராம் , பெண்களுக்கு 20 கிராம் என சாச்சுரேட் கொழுப்பு தேவைப்படும்போது, அவைகளை ஆட்டுக்குடலில் எளிதாக பெறலாம்.

ஜெலட்டின், புரோபயோடிக்குகள் போன்றவை உள்ளதால், அஜீரண பிரச்சனை, அல்சர் தொந்தரவு உள்ளவர்கள், வயிற்றில் புண் உள்ளவர்கள், ஆட்டுக்குடல் சாப்பிடலாம்.

இதிலுள்ள புரோட்டீன் தசைகளுக்கு பலம் தருகிறது. இநத குடலுள்ள B12 சத்தானது, தோல் ஆரோக்கியம், தலைமுடி, கண்கள், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு உதவுகிறது.

மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்தி, DNA உற்பத்திக்கு ஆட்டுக்குடல் பேருதவி புரிகிறது.. வளரும் குழந்தைகளுக்கு ஆட்டுக்குடல் கொடுக்க சொல்ல காரணமே, அதிலுள்ள பாஸ்பரஸ் சத்துக்கள், குழந்தைகளின் எலும்பு, பற்கள் உறுதிக்கு உதவுவதால்தான். அத்துடன், மூளை செல்களின் கட்டமைப்பினை முறையாக பராமரிக்க செய்து, மூளை செயல்பாட்டு திறனும் சிறப்பாக வைத்திருக்க செய்கிறது.

ஆட்டுக்குடல் ஆட்டுக்கறி எது நல்லது

ஆட்டுக்கறி அல்லது ஆட்டுக்குடல் இதில் எது சிறந்தது? இரண்டிலுமே சத்துக்கள் அதிகமாக உள்ளன.. புரதம் மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக தேவைப்படுவோர் மட்டனை சாப்பிடலாம்.. அதேசமயம், செரிமான பிரச்சனைகள் இருந்தால் அல்லது வைட்டமின் B12 சத்து தேவைப்பட்டால் ஆட்டுக்குடல் பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால், சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள், உடல் எடை அதிகமாக கொண்டவர்கள், இதய நோயாளிகள், ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள், மட்டனை தொடவே கூடாது. ஆரோக்கியமாக இருப்பவர்களும், குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொள்வதே ஆரோக்கியம் .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+