அதிக சாறு தரக்கூடிய மாம்பழத்தின் பல்வேறு நன்மைகள்!
சென்னை: மாம்பழம் நம் நாட்டின் தேசிய கனி, முக்கனிகளில் முதன்மையான ராஜா கனி மற்றும் எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். பெரும்பாலும் கோடைகாலம் வந்தாலே எல்லோருக்கும் நியாபகம் வருவது மாம்பழம் தான். பிஞ்சு துவர்க்கும், காய் புளிக்கும், பழம் இனிக்கும். இப்படி ஒவ்வொரு வளர்ச்சியிலும் வெவ்வேறு வகையான சுவை தரக்கூடியது இந்த மாம்பழம்.
அதிக சாறும், நாறும் கொண்ட பழங்களில் இருந்து பல வகையான ஊறுகாய், பழ ஜாம் ஆகியவை தயாரிக்கப்படுகிறது. காய், பழம் என அனைத்தும் உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்துபவை என்றாலும், உள்ளே இருக்கும் மாங்கொட்டையில் இருக்கும் சிறு பருப்பு மட்டுமே குளிர்ச்சியை தரும் என்பது ஆச்சரியமான ஒன்றாகும். மாங்கொட்டையில் கால்சியம், மற்றும் கொழுப்பு சத்தும் இருக்கிறது.

ஆரோக்கியத்திற்கு தேவையான சத்து: இதில் வைட்டமின் ஏ, நார்சத்து, கார்போஹைரேட், சர்க்கரைசத்து ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. விசேஷமாக பழத்தின் தோல்பகுதியில் வைட்டமின் சி சத்துள்ளது. நாம் உடலுக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவை பழத்தின் இனிப்பு சுவை இருப்பதற்கு முக்கிய காரணமாய் இருக்கிறது. இப்பழத்தை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனையை போக்குகிறது. எனினும் அதிக அளவு சாப்பிட்டால் அதுவே வயிற்று போக்கையும் உண்டாக்கிவிடும். எனவே அளவோடு சாப்பிட்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், இரத்தத்தையும் சுத்தம் செய்து, நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.
பழ வகைகள்: மாம்பழத்தில் பங்கனப்பள்ளி, அல்போன்சா, ராஸ்புரி, நிலம், மல்கோவா, கிளிமூக்கு என 12 வகை உள்ளது. பலவகையான மாம்பழங்கள் பயிரிடப்பட்டும், இந்தியாவில் அதிக அளவில் கிடைக்கின்றது. இதில் ஏதேனும் ஒரே ரகத்தை சேர்ந்த மாம்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், இதய சம்பந்தமான நோய்கள் நல்ல தீர்வு கிடைக்கும்.
பழத்தில் உள்ள நன்மைகள்: மாம்பழ சீசனில் தினமும் அல்லது வாரத்தில் 2 முறை, பசும்பால் குடித்தபிறகு, சிறிது மாம்பழம் சாப்பிட்டுவந்தால், குடல், மற்றும் வயிற்று பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது. இப்பழத்தில் உள்ள சர்க்கரை சத்தும், பாலில் உள்ள ப்ரோடீன், மற்றும் கால்சியம் சத்தும் சேர்ந்து சாப்பிட்டுவர உடல் மெலிந்தவர்கள், பலம் பெற்று, உடல் எடையும் கூடும்.

குணமாக்ககூடிய நோய்கள்: நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய தன்மை இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஏ தாராளமாக உள்ளது. பழத்தில் இருக்கும் காரோட்டீனாய்டு சத்து உடலில் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க செய்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. பழத்தில் உள்ள அமிலேஸ் (Amylase) என்ற பொருள், மிக கடினமான உணவையும் கூட செரிக்க செய்திடும். மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம், உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய துடிப்பை சீராக உதவுகிறது. மாம்பழம் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், இதயத்தில் உள்ள செல்களை சேதமடையாமல் பாதுகாத்து, மாரடைப்பு, பக்கவாதம் வராமல் தடுக்கிறது.
இதில் உள்ள பீட்டா கரோட்டின் சத்து கண் சம்பந்தமான, தூர பார்வை, கிட்ட பார்வை குறைபாடு, கண் எரிச்சல், மங்கலான பார்வை போன்ற பிரச்சனைகள் வராமல் தடுத்து கண்களில் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் மலக்குடல் புற்றுநோய், மார்பக புற்று நோய் உருவாக்கக்கூடிய செல்களை அழித்து, புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இதனால் தான் இப்பழத்தை (Cancer Fighting Fruit) என்று சொல்லப்படுகிறது. இரத்த சோகை வராமலும், குறிப்பாக கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய (pregnancy anemia) கர்ப்ப இரத்த சோகை ஏற்படாமல் பாதுகாக்கிறது. கொலாஜென் செல்கள் (collagen cell) குறைபாடு ஏற்படும்போது சரும வியாதிகள் வருகின்றது. தொடர்ந்து இப்பழத்தை சாப்பிடுவதால், நம்முடைய சருமத்தை பாதுகாக்க தேவையான கொலாஜென் செல்கள் (collagen cell) குறையாமல் இயற்கையாக அதிகரித்து, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications