தினமும் காலையில் இதை சாப்பிடுங்க..உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள பிரச்சினை ஓடியே போகும்!

நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு பொருள் நமது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நமது வீட்டு அஞ்சறைப்பெட்டியில் வெந்தயத்திற்கு தனி இடமுண்டு. உடலில் சூடு அதிகமானாலோ, வயிறு வலி ஏற்பட்டாலோ வெந்தையத்தை எடுத்து கொடுத்து வாயில் போடச்சொல்லி தண்ணீர் குடிக்கச் சொல்வார்கள். வெந்தயத்தின் மகிமை பற்றி அம்மாவிற்கும் பாட்டிக்கும் நன்றாக தெரியும் எனவேதான் அதை அன்றாட சமையலில் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். வெந்தைய களி, வெந்தய குழம்பு, வெந்தய ரசம் என பலவிதமாக நமக்கு செய்து கொடுத்து ஆரோக்கியத்தை பாதுகாப்பார்கள் நம்முடைய வீட்டு பெரியவர்கள்.

வெந்தயத்தில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று பார்க்கலாம்.

வெந்தயம் கசப்புத்தன்மையாக இருப்பதால் குழந்தைகள் அதை அதிகம் விரும்பமாட்டார்கள். ஆனால் அதன் நன்மைகளை அறிந்த நம்முடைய பாட்டிகளும், அம்மாக்களும்தான் அதை எப்படியாவது சமையலில் பயன்படுத்தி சாப்பிட வைத்து விடுவார்கள்.

வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்ற பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வயிறு பொருமல், உடல் சூடு, வயிற்று வலி, பேதி போன்றவைகளுக்கு வெந்தயம் அருமையான மருந்தாகும்.

சர்க்கரை நோயாளிகள்

சர்க்கரை நோயாளிகள்

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரியும் வெந்தயத்தை ஏதாவது ஒருவகையில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். காலையில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடிக்கலாம். தொடர்ந்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுப்படும்.

 குளிர்ச்சி தரும் வெந்தயம்

குளிர்ச்சி தரும் வெந்தயம்

வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும். துவர்ப்புத் தன்மை உடையது. விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். வெந்தையக்கீரை குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டது. கீரையை சப்பாத்தி மாவுடன் சேர்த்து கீரை சப்பாத்தியாக சாப்பிடலாம். தோசைக்கு சேர்க்கும் உளுந்துடன் சிறிதளவு வெந்தயம் சேர்க்க பலம் ஏற்படுவதோடு தோசை நிறமாக இருக்கும். வெந்தயத்தை மாவாக்கி, இனிப்பு சேர்த்து களி போல கிளறி சாப்பிட்டு வந்தால் நோய்கள் நீங்கும். உடல் பலம் பெறும் உடல் சூட்டையும் கட்டுப்படுத்தும்.

 வயிறு வலி குணமாகும்

வயிறு வலி குணமாகும்

சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகளில் வெந்தயம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சீதபேதி, மூலநோய் இவைகளை குணப்படுத்த, முடி உதிர்தல், தோல் நோய், வாய்வுத்தொல்லையை போக்கவும் பயன்படுத்தப்படுகிறது. 20 கிராம் வெந்தயத்தை வறுத்து, இடித்து 50 கிராம் வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு நாள் நான்குமுறை சாப்பிட சீதபேதி நிற்கும். சிறிதளவு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து அரைத்து, மோரில் கலக்கி குடிக்க குணமாகும். மோரில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வாய்வு, வயிற்று பொருமல் நீங்கும்.

உடல் உஷ்ணம் குணமடையும்

உடல் உஷ்ணம் குணமடையும்

வெந்தயத்தை வறுத்து, நீர் விட்டு காய்த்து தேன் சேர்த்து சாப்பிட வயிற்று கடுப்பு தீரும். திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்க வலி தீரும்.வெயில் காலம் தொடங்கியுள்ளதால் உடல் உஷ்ணம் அதிகமாகும். எனவே உஷ்ண பிரச்சினை ஏற்படாமல் இருக்க வெந்தயத்தை இரவில் ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த தண்ணீரை வெந்தயத்துடன் சேர்த்து குடிக்க வயிறும் உடம்பும் குளிரும்.

வயிற்று வலி தீரும்

வயிற்று வலி தீரும்

வெந்தயம், கடுகு, பெருங்காயம், மஞ்சள், இந்துப்பு இவைகளை சம அளவு எடுத்து நெய் வறுத்து பொடியாக்கி உணவுடன் உண்ண வயிற்று வலி தீரும். இரவில் வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து, காலையில் அரைத்து சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும். வெந்தயத்தை நீராகாரத்தில் ஊற வைத்து இரவில் படுக்கும் முன் சாப்பிடவும்.

மாத விடாய் பிரச்சினை

மாத விடாய் பிரச்சினை

100 கிராம் வெந்தயத்தை வறுத்து, பொடியாக்கி, 200 கிராம் சர்க்கரை சேர்த்து உண்ண பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்று வலி, இடுப்பு வலி பிரச்சினைகள் நீங்கும். வெந்தயத்தை கஷாயமாக்கி குடித்தாலும் வலி தீரும்.

முடி உதிர்வு பிரச்சினை

முடி உதிர்வு பிரச்சினை

இன்றைக்கு பலருக்கும் முடி உதிர்வு பிரச்சினை பெரிய பிரச்சினையாக உள்ளது. வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து அதை தலைக்கு பேக் போல போட்டு நன்றாக தேய்த்து குளித்தால் முடி உதிர்வு பிரச்சினை கட்டுப்படும். வெந்தயத்தில் உள்ள எண்ணெய் பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது.

உடல் நாற்றம் நீங்கும்

உடல் நாற்றம் நீங்கும்

வெந்தயம், பாசிப்பயறு இவற்றை இரவு ஊற வைத்து காலையில் அரைத்து உடலில் தேய்த்து குளித்தால் நாற்றம் நீங்கும். இதை தலையில் தேய்த்து குளிக்க கண் குளிர்ச்சி ஏற்படும். தலைச்சூடு நீங்கும். பேன், பொடுகு, அரிப்பு நீங்கும். மேலும் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் பூச, பரு மறையும்.

 உடலுக்கு வலிமை தரும் வெந்தயக்கீரை

உடலுக்கு வலிமை தரும் வெந்தயக்கீரை

ஒரு சிலருக்கு அடிக்கடி பித்த மயக்கம் ஏற்படும். இது போன்ற பிரச்சினை உள்ளவர்கள் வெந்தயக்கீரையை வேகவைத்து சாப்பிட்டால் பித்த மயக்கம் குணமடையயும். வெந்தய கீரையை தோசையுடன் சேர்த்து சாப்பிட உடல் வலிமையடையும். வலிகள் இருந்தாலும் நீங்கும். வெந்தயக்கீரையும், கருணைக்கிழங்கும் சேர்த்து சமைத்து சாப்பிட ஒல்லியாக இருப்பவர்கள் வலிமையாக உடல் எடை கூடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+