வெட்டி வேர் வாசம்..வீடெங்கும் வீசினால் என்னென்ன நன்மைகள்..கோடையில் அதிசயம் நிகழ செய்து பாருங்க!
சென்னை: கொளுத்தும் கோடை வெயிலுக்கு ஜில்லென்று குடித்தால் நன்றாகத்தான் இருக்கும். மருத்துவ குணமும் மகத்துவமும் நிறைந்து இருக்கக்கூடிய வெட்டிவேர் உங்களுடைய வீட்டில் எப்போதுமே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். மண்பானையில் வெட்டி வேரை போட்டு ஊறவைத்து அந்த தண்ணீரை குடித்தால் எண்ணற்ற நோய்கள் குணமாகும்.
வெட்டி வேர் தர்பை புல் வகையை சார்ந்தது. கோடை காலத்தில் ஏற்படும் நீர் கடுப்பு, காய்ச்சல், சோர்வு, தோல் நோய்கள், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தீரும். மகத்துவம் வாய்ந்த வெட்டி வேரில் செய்யப்பட்ட பாய், விசிறி போன்றவைகளை கோடை காலத்தில் பயன்படுத்தலாம். இது உடம்புக்கு குளிர்ச்சி தரக்கூடியது மன அழுத்தத்தை போக்கக்கூடியது. வெட்டிவேர் சர்பத் மனதிற்கும் உடலுக்கும் உற்சாகத்தை தரக்கூடியது. கோடை காலத்தில் வெட்டிவேர் சர்பத் குடிக்க உடல் குளிர்ச்சியடையும்.

வெட்டிவேரின் பொடி குளிர்ச்சி தரக்கூடியது. சிறுநீர்ப் போக்கை தூண்டும். காய்ச்சல், வயிறு எரிச்சல் போன்றவைகளை குணப்படுத்தும். காலரா வாந்தியை நிறுத்த உதவும். இந்த வெட்டி வேரில் ரெசின், நிறமி, அமிலம், லைம் உப்பு, இரும்பு ஆக்ஸைடு, எளிதில் ஆவியாகும் எண்ணெய் உள்ளது.
ஒரு சிறிய டப்பாவிலோ கிண்ணத்திலோ போட்டு வீட்டில் ஆங்காங்கே இந்த வெட்டிவேரை வைத்துவிடுங்கள். அப்படி இல்லை என்றால் ஒரு வெள்ளை துணியில் வெட்டிவேரை போட்டு முடிந்து ஆங்காங்கே ஒரு முடிச்சை வைத்து விட்டால் அந்த வெட்டி வேரில் இருந்து ஒரு லேசான வாசம் உங்கள் வீடு நிரம்ப இருக்கும். இதை நீங்கள் சுவாசித்துக் கொண்டே இருந்தால் உங்களுடைய மனது எப்போதும் லேசாக இருக்கும்.
இன்னும் சில பேருக்கு வேலை பளு காரணமாக மன அழுத்தம் காரணமாக இரவில் நல்ல தூக்கம் இருக்காது. இரவில் தூக்கம் வராமல் கஷ்டப்படும் சமயத்தில் தலையணைக்கு அடியில் ஒரு வெட்டி வேர் முடிச்சை வைத்து தூங்கலாம். இந்த வெட்டி வேர் வாசத்தை சுவாசித்துக் கொண்டே தூங்கும் போது நம்முடைய மனது அமைதியாகி நல்ல தூக்கத்தை தரும். கால் எரிச்சல், கால் வலி போன்றவற்றிற்கும் வெட்டிவேர் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வெட்டிவேரினை தேங்காய் எண்ணெயில் இட்டு காய்ச்சி, இரண்டு நாட்கள் கழித்து வடிகட்டி தொந்தரவு தரும் இடங்களில் பூச குணமடையும்.
சரும அழகுக்கும் வெட்டிவேர் பயன்படுகிறது. வெட்டிவேர் எண்ணெய்யை கொண்டு நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் வடுக்கள் மீது தடவி வந்தால் அவை மறைந்துவிடும். இந்த எண்ணெய்யை தேய்த்து குளிக்கலாம். சீயக்காய்க்குப் பதில் வெட்டிவேரின் பவுடரை பயன்படுத்தினால் முகத்தில் எண்ணெய் வழியாது. முகம் கூடுதல் அழகுடன் காணப்படும்.
வெயில் காலத்தில் உண்டாகும் அதிக வியர்வை மற்றும் அரிப்பிற்கு வெட்டிவேரை நீரில் ஊறவைத்து, அரைத்து குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்கலாம். தீக்காயங்களில் வெட்டிவேரை அரைத்து பூசினால் காயங்கள் விரைவில் குணமாகும்.
முகத்தில் ஏற்படும் பருக்களையும் வடுக்களையும் குறைக்க வெட்டி வேர் பயன்படுகிறது. சிறு சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் சிறுதளவையும், கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றையும் முதல் நாள் இரவே கொதிநீரில் ஊறவைத்து மறுநாள் அதை அரைத்து அந்த விழுதினை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்களும் தழும்புகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
ஆன்மீகத்தில் பெரும் பங்கு வகிக்கும் இந்த வெட்டிவேர் பணத்தை ஈர்க்கவும் செய்யும். ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரில் வெள்ளிக்கிழமை அன்று பூஜை அறையில் வைத்து வெட்டிவேரை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு முழு எலுமிச்சை பழத்தை போட்டுக் கொள்ள வேண்டும். அதிலிருந்து வரும் ஆற்றலானது, வீடு முழுவதும் பரவ செய்து மகாலட்சுமியின் அருளை கிடைக்கச் செய்யும்.
தேவையான நேரத்திற்கு பணம் கைக்கு கிடைக்க செய்யக் கூடிய அற்புதமான ஆற்றலும் இந்த வேருக்கு உண்டு. இந்த வேரை கையில் வைத்துக் கொண்டு உங்கள் குல தெய்வத்தை வேண்டினால் எங்கிருந்தாவது பணம் உங்கள் தேவைக்கு ஏற்ப வந்து சேரும்.
மாதத்திற்கு ஒருமுறை பழைய வெட்டிவேரை எல்லாம் எடுத்து வீட்டிற்கு வெளிப்பக்கமாக வைத்து ஒரு கற்பூரம் வைத்து நெருப்பு மூட்டி அதில் எரித்து விட வேண்டும். மீண்டும் புதிய வெட்டிவேரை மாற்றி வைக்க வேண்டும். வீட்டில் இருக்கும் தேவையற்ற எதிர்மறை சக்திகள் வெளியேறி விடும்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications