ஹெல்தியா இருக்கனுமா? மதியம் சாப்பிட்ட பிறகு இந்த 8 விஷயத்தை மட்டும் பண்ணாதீங்க போதும்.. செம டிப்ஸ்!
சென்னை: நமது உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க சின்ன சின்ன விஷயங்களை நாம் கடைப்பிடித்தாலே போதும். குறிப்பாக மதியம் சாப்பிட்ட பிறகு சில விஷயங்கள் செய்வதை நாம் தவிர்ப்பதனால் நமது உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் என்று சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் நிதி ஷர்மா. சாப்பிட்ட பிறகு என்னவெல்லாம் செய்யக்கூடாது.. என்னவெல்லாம் செய்யலாம் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
உடல் ஆரோக்கியமாக இருக்க உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, போதிய அளவு தூக்கம் உள்ளிட்டவை கட்டாயம் அவசியம். ஆனால் இன்றைய பரபரப்பு மிக்க கால கட்டத்தில் பலரும் இதை கடைப்பிடிக்க படாதபாடு படுகிறர்கள்.

சரியான நேரத்தில் சாப்பிடாதது, அஜீரணத்தை அதிகரிக்கும். இது பல்வேறு உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் வழி சேர்க்கும். எனவே, என்ன மாதிரியான உணவை உட்கொள்கிறோம்.. சாப்பிடும் முன்பும் பின்பும் என்ன செய்யக்கூடாது என்பது பற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிதி ஷர்மா கூறியுள்ளார். இது பற்றி இங்கே பார்க்கலாம்..
சாப்பிட்ட உடன் எதையெல்லாம் செய்யக்கூடாது:
* சாப்பிட்ட உடன் குளிக்க கூடாது. ஏனெனில் சாப்பிட்ட பிறகு வயிறு பகுதியை சுற்றி ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். ஜீரணம் எளிதில் நடைபெற இவ்வாறு நடைபெறும். ஆனால், குளித்தால் உடலின் வெப்ப நிலை மாற்றம் அடையும். இதனால், நமது உடலின் வெப்ப நிலையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக தோளின் மேற்பரப்பில் ரத்தம் திருப்பிவிடப்படும். இதனால், ஜீரணம் ஆவதில் தாமதம் ஏற்படும்.
* உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். சாப்பிட்ட உடன் கடுமையான உடற்பயிசியில் ஈடுபடுவது ஜீரண நடைமுறையை பாதிக்கும். குமட்டல், வாந்தி, வயிற்று வலி ஆகியவற்றிற்கும் வழிவகுக்கும். வயிற்றில் அமில தன்மையை அதிகரிக்கும்.
* சாப்பிட்ட உடன் ஒரு குட்டி தூக்கம் போடும் பழக்கம் பலருக்கும் உள்ளது. தூங்காவிட்டாலும் கூட சிலர் சாப்பிட்ட சிறிது நேரத்தில் படுத்து கிடப்பார்கள். இப்படியான பழக்கம் இருந்தால் அதை கைவிட்டு விடுவது நல்லதாம். ஏனெனில், ஜீரணிப்பதில் சிரமம் ஏற்பட்டு நெஞ்சு எரிச்சல் ஏற்படும். தூங்கி விழிக்கும்போது வயிறு நிறைந்து இருப்பது போலவே இருக்கும்.
* சாப்பிட்ட உடன் அதிகப்படியான தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனினில், அதிகமாக தண்ணீர் குடிப்பது ஜீரணம் எளிதில் ஆவதில் தாமதமாக்கும். ஜீரணத்திற்கு உதவும் அமிலத்தை நீர்த்து போக செய்துவிடும்.
* சாப்பிட்ட உடன் பழங்கள் உட்கொள்ளக் கூடாது. ஏனெனில், பழங்களில் உள்ள ஊட்டச்தத்துக்கள் முழுமையாக நம் உடலுக்கு இதனால் கிடைக்காமல் போகக் கூடும்.
* டீ / காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் டீ, காபியில் உள்ள பினோலிக் கலவைகள், உணவில் உள்ள இரும்புச்சத்து போன்ற ஊட்டச்த்துக்களை உறிஞ்சுக்கொள்வதில் இடையூறு ஏற்படுத்தும்.
* சாப்பிட்டு முடித்த உடன் மது / புகை பிடித்தல் கூடாது. இந்த இரண்டும் இயல்பாக உடல் நலனுக்கு கேடு என்றாலும் கூட சாப்பிட்ட உடன் இதை செய்தால் இருதய பாதிப்புகள் ஏற்படுவது அதிகரிக்கும்.
சாப்பிட்டதும் என்ன செய்யலாம்:
* சாப்பிட்ட உடன் என்னவெல்லம் செய்யக் கூடாதுன்னு பெரிய லிஸ்டே வந்துவிட்டது.. அனால், என்ன செய்யலாம் என்று சொல்லவே இல்லையே என நினைக்கவேண்டாம். சாப்பிட்ட பிறகு என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்த்தால் ரொம்பவே எளிதானதுதான்..
* சுறுசுறுப்பாக நமது செயல்பாடுகளை வைத்துக்கொள்ள வேண்டும். அதேவேளையில் எதையும் கடுமையாக செய்யக் கூடாது. அரை கிளாஸ் சூடான தண்ணீர் குடிக்கலாம். இது உணவு எளிதில் ஜீரணம் ஆக உதவும். தாமதமாக மதிய உணவு உட்கொண்டாலும் கூட எளிதில் ஜீரணம் ஆக இது உதவும்.












Click it and Unblock the Notifications