ஆளி விதை கேள்விப்பட்டுருக்கீங்களா.. மாரடைப்பு, மார்பக புற்றுநோயை தடுக்குமா?
சென்னை: சாலியா விதை அல்லது ஆளி விதை, அளவில் சிறியதாக இருந்தாலும் பல நன்மைகள் தரக்கூடியது. சாலியா விதைகள் (ஹலிம் விதைகள்) என்று அழைக்கப்படுவதுண்டு, மேலும் இதில் ஏராளமான மருத்துவ நன்மைகளும் அடங்கியுள்ளது. ஒரு நாளைக்கு தேவையான புரத சத்து (Proteins), நல்ல கொழுப்பு (Good Fats), கால்சியம், ஒமேகா 3, நார்சத்து, இரும்புச் சத்து, கார்போஹைட்ரெட்ஸ், பொட்டாசியம், வைட்டமின் பி1, பி2, பி3, மற்றும் மினெரல்ஸ் (Minerals) என அதிக சத்துக்கள் இருப்பதால், சூப்பர் பூட் (Super Natural Food) என்று கூட சொல்லலாம்.

சாலியா விதையின் பயன்கள்
உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சோகை வரலாம் தடுக்கிறது. இதில் உள்ள கேலக்டோகாக் பண்புகள், தாய்ப்பால் உற்பத்தியை தூண்டவும், அதிகரிக்க செய்கிறது. பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், மாதவிடாய் சுழற்சியை சீராக்கவும், மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. விதையில் உள்ள நார்ச்சத்து, புரதசத்து ஆகியவை அடிக்கடி பசி ஏற்படுவதை தவிர்த்து, உடலில் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைக்க வழிவகுக்கிறது.
மாரடைப்பு, புற்றுநோய் வராமல் பாதுகாக்க
இந்த விதையில் உள்ள ஒமேகா 3 அமிலங்கள் அதிக அளவில் இருப்பதால், மாரடைப்பு மற்றும் புற்று நோய் உருவாக்கக்கூடிய செல்களின் வளர்ச்சியை தடுத்து புற்று நோய் வராமல் தடுக்கவும், மீன்களில் உள்ள சத்துக்களுக்கு இணையாக இந்த விதையில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. வாயு, வயிறு வீக்கம், ஆகிய பிரச்சனைகளை சரிசெய்யுவும், குடலில் செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனைகளை குணமாக்கும். காய்ச்சல், தொண்டை புண் போன்ற நோய் தொற்றுகளைத் தடுத்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி நம்மை பாதுகாக்கிறது.
இன்சுலின் சுரப்பு, எலும்பு வறட்சியை தடுக்க
விதையில் உள்ள நார்சத்து மற்றும் லிக்னான்ஸ் (Lignans) இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க, இன்சுலின் சுரப்பை சீர்படுத்துகிறது. இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், மூட்டு வலிகள், மூட்டுகளில் ஏற்படக்கூடிய அழற்சி, தேய்மானம், வயது காரணமாக வரக்கூடிய எலும்பு வறட்சியை தடுக்க ஆற்றல் கொண்டது. இந்த விதையை நன்கு அரைத்து நீர்மோரில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை குடித்து வரலாம். எல்லா வயதினரும் தாராளமாக உட்கொள்ளலாம். ஆனால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் மருத்துவர் ஆலோசனை பெற்று சாப்பிடுவது மிகவும் நல்லது.
தலை முடி உதிர்வை தடுக்க, முகம் பளபளக்க
தேவையான அளவு சாலியா விதையை பாலில் ஊறவைத்து, அதனுடன் வைட்டமின் இ ஆயில் சிறிது அளவு சேர்த்து மைய அரைத்து, முகத்தில் தடவி, 10-15 நிமிடம் கழித்து முகம் கழுவினால், சருமம் மேன்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். மிக குறைந்த அளவில் இந்த விதையை தண்ணீரில் 7-8 மணி நேரம் ஊறவைத்து, தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு, அதனுடன் தேவையான பால் சேர்த்து, விதையை நன்கு மென்று சாப்பிட்டு வேண்டும். இவ்வாறு சுமார் 1-2 மாதம் வரை இரவு சாப்பிட்டுவந்தால், முடி உதிர்வை தடுத்து, நல்ல தீர்வு கிடைக்கும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications