Karpooravalli: சளி, இருமல், தொண்டை கரகரப்பா! ஆமாம்பா ஆமாவா? வீசிங்கிற்கு அருமருந்து
சென்னை: சளி, இருமல், தொண்டை கரகரப்பா? கவலையே வேண்டாம், வீட்டு வைத்தியம் இருக்கே! கற்பூரவள்ளி இலைகளை பயன்படுத்தினால் போதுமானது. இதில் சற்று காரல் தன்மை இருக்கிறது. அதனால் உள்ளுக்குள் சாப்பிடும் போது கவனமாக சாப்பிட வேண்டும்.
இந்த கற்பூரவள்ளி இலையை ஓமவல்லி என்றும் கூறுவார்கள். இது கற்பூரம் போல் வாசனை வரும். இந்த இலைகள் செரிமானத்திற்கு நல்லது. வீட்டில் எந்த செடியை வைக்கிறோமோ இல்லையோ துளசி, கற்பூரவள்ளி செடி என்பது அவசியமானது. அதிலும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் கட்டாயம் வளர்க்கப்பட வேண்டிய செடிகள் இவை ஆகும்.

இதுகுறித்து ராஜா ஹனி எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கற்பூரவள்ளி மூலிகை பயன்களை இந்த பதிவில் பார்க்கலாம். கற்பூரவள்ளி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதன் இலைகள் தடிமனாகவும், சதைப் பற்றுக் கொண்டும், கார் போல நறுமணம் வீசும். கற்பூரவள்ளி இலைகளில் யூஜெனோல், கார்வாக்ரோல் போன்ற வேதிப் பொருட்கள் உள்ளன. இவை உடலில் உள்ள பல்வேறு நோய்களைக் குணப்படுத்த உதவுகின்றன.
கற்பூரவள்ளியின் பயன்கள்
சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலைகளைச் சாறாகவோ அல்லது கஷாயமாகவோ செய்து குடிக்கலாம்.
கற்பூரவள்ளி இலைகளை மென்று சாப்பிட்டால் செரிமானம் மேம்படும். வயிற்றுப் புண் மற்றும் அஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது.
கற்பூரவள்ளி இலைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. இதனால் உடலில் தொற்றுநோய்கள் ஏற்படுவது குறையும்.
கற்பூரவள்ளி இலைகளை அரைத்து சருமத்தில் பூசினால் தோல் நோய்கள் குணமாகும். குறிப்பாக, அரிப்பு, தடிப்பு, மற்றும் பூஞ்சைத் தொற்றுக்கு இது நல்ல பலன் தரும்.
கற்பூரவள்ளி சாறு சிறுநீரக கற்களைக் கரைக்க உதவும். மேலும், இது சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
கற்பூரவள்ளி இலைகளை நீரில் கொதிக்க வைத்து அந்த நீராவியை உள்ளிழுத்தால் மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொல்லை குறையும்.
கற்பூரவள்ளி எண்ணெய் தலைவலி மற்றும் உடல் வலியைப் போக்க உதவும்.
கற்பூரவள்ளியை பயன்படுத்தும் முறை
கற்பூரவள்ளி இலைகளைச் சாறாகவோ அல்லது கஷாயமாகவோ செய்து குடிக்கலாம்.
கற்பூரவள்ளி இலைகளை சூப் அல்லது சாலட்டில் சேர்த்தும் சாப்பிடலாம்.
கற்பூரவள்ளி இலைகளை அரைத்து பேஸ்ட்டாகப் பயன்படுத்தலாம்.
கற்பூரவள்ளி எண்ணெயை சருமத்தில் தடவலாம் அல்லது தலைக்குத் தேய்க்கலாம்.
கற்பூரவள்ளி ஒரு இயற்கையான மருத்துவ மூலிகை. இருப்பினும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெஞ்சு சளி இருப்போர் கற்பூரவள்ளி இலைகள், துளசி ஆகியவற்றை சிறிதளவு எடுத்துக் கொண்டு அவற்றை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஆற வைத்து விலா எலும்புகளில் இருக்கும் கேப்புகளில் தடவலாம். இத்துடன் நொச்சி இலைகள் கிடைத்தால் அதையும் போட்டு காய்ச்சலாம். இந்த எண்ணெய்யை பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு தேவைப்படும் நேரத்தில் தடவலாம்.
குழந்தைகளுக்கும் தடவி விடலாம். ஆனால் கற்பூரவள்ளி காரல் அதிகமாக இருக்கும். குழந்தைக்கு எரியாத வண்ணம் லேசான தடவ வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இயற்கையோடு ஒன்றி இருத்தல் நல்லதுதான். ஆனால் நம் உடல் இந்த உணவு பொருளை ஏற்குமா என்பதை மருத்துவரிடம் கேட்டு அவரது ஆலோசனையின் பேரில் பயன்படுத்தலாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications