சைவ உணவு நன்மைகள்.. உடலுக்கும், மனதுக்கும் ஏராளம்.. அடித்துச் சொல்லும் புதிய ஆய்வு புத்தகங்கள்
சென்னை: உணவுத் தேர்வுகள் உடல் மற்றும் மன ஆரோக்கியம், ஆன்மீக வாழ்க்கை மற்றும் சமூக விதிமுறைகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆராயும் இரண்டு புத்தகங்கள் சமீபத்தில் உணவியல் நிபுணர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. டாக்டர் ஜெயந்த் அத்தவலே எழுதிய "நவீன உணவின் தீங்கு விளைவிக்கும் விளைவுகள்" “(Harmful Effects of Modern Diet”) என்ற புத்தகம், மற்றும் கிறிஸ் வான் டுல்லெக்கனின், "Ultra Processed Food" ஆகிய இரண்டுமே சைவ உணவு மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று வாதிடுகின்றன.
1980 ஆம் ஆண்டு வெளியான "நன்றாக சாப்பிடுங்கள், சிறப்பாக வாழுங்கள்" என்ற புத்தகம் நமது உணவில் இறைச்சி உணவு முக்கியம் என்று வாதிட்டது. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. புதிய ஆய்வுகள் மனத வாழ்க்கை முறையை ஆய்வு செய்து, சைவ உணவே முக்கியம் என்ற கருத்துரைகளை முன் வைக்க ஆரம்பித்துள்ளன.

தற்கால மருத்துவ வல்லுநர்கள் இப்போது அசைவ உணவுகளுக்கு எதிராக பரப்புரை ஆரம்பித்துள்ளனர். அசைவ உணவுகள், புற்றுநோய் மற்றும் இருதய நோய்களுடன் தொடர்புடையவை என்று அவை கூறுகின்றன. இந்த மாற்றம் ஊட்டச்சத்து அறிவியலில் வளர்ந்து வரும் ஆய்வுகளை பிரதிபலிக்கிறது.
டாக்டர். அதவாலே தனது புத்தகத்தில், சாத்விக உணவே சிறந்தது என்கிறார். டுல்லெக்கனின் ஆய்வு, உலக சந்தைப்படுத்துதல் மற்றும் பொருளாதார அழுத்தம்தான் மக்களை ஆரோக்கியமற்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சியை நோக்கி ஓட வைக்கின்றது என்று தெரிவிக்கிறது. குருதேவ் ஆதவலே இந்தியாவில் ஹிப்னோதெரபியை (மனவசியம்) பயன்படுத்திய முன்னோடி ஆவார். உடல் மற்றும் மனதில் நேர்மறை ஆற்றலை உருவாக்குவதில் ஆடைகளுக்கு பங்கு இருப்பதை அவர் கண்டறிந்துள்ளார். இதேபோலத்தான், நாம் உட்கொள்ளும் உணவு நமது உடல் மற்றும் மன வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது என்று டாக்டர் ஆதவலே கூறுகிறார். "நம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளால் தயாரிக்கப்படும் உணவு ஆரோக்கியமானது" என்கிறார் அவர்.

உணவு என்பது கோவிலில் தெய்வத்திற்கு பூஜை செய்வது போன்று தயாரிக்கப்பட வேண்டியது என்று இந்திய ஆன்மீகம் மற்றும் வேதங்கள் கூறுகின்றன. வேத அறிஞர் உண்ணிகிருஷ்ணன் பானிக்கர், உணவை உட்கொள்ளும்போது கண்ணியம், கட்டுப்பாடு மற்றும் பக்தியை கடைபிடிப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். உணவு பரிமாறப்படும் போது மகிழ்ச்சியுடனும், மன அமைதியுடனும், அமைதியுடனும் இருக்க வேண்டும், எந்த பிரச்சனைகளுக்காகவும் கோபப்படவோ அல்லது தூண்டப்படவோ கூடாது. நவீன அறிவியல் ஆராய்ச்சிகளும், நாம் உண்ணும் அனைத்து உணவுகளும் சாத்விகமாக இருக்க வேண்டும் என்று நிரூபித்துள்ளது. உணவை சமைக்கும் நபர், அதை சமைப்பதற்கு நாம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் அனைத்திற்கும் மேலாக உணவை சமைக்கும் நபர் சாத்விகமாக இருக்க வேண்டும், அதாவது அவர் சொல்லிலும் செயலிலும் தூய்மையானவராக இருக்க வேண்டும். சாத்விக, ராஜச மற்றும் தாமச உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆராய்ச்சி செய்து முடிவுகளை பகிர்ந்து கொள்ளும் புத்தகங்கள் பல உள்ளன என்கிறார்.

இந்தியர்கள் எப்போதும் சமையல் மற்றும் உணவு உண்பதை தங்கள் ஆன்மீகத்தின் ஒரு பகுதியாக கருதி வந்தனர், ஆனால் மேற்கத்தியர்களுக்கு வேறு கருத்து இருந்தது. அவர்களுக்கு உணவு என்பது பசியை போக்குவதற்காக மட்டுமல்ல, இன்பத்திற்காகவும் இருந்தது. அசைவ உணவை உண்பதில் அவர்களுக்கு எந்த தயக்கமும் இல்லை, என்று இந்த புத்தகங்கள் தெரிவிக்கின்றன.
அசைவ உணவுகளின் ஆபத்துகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களிடையே வளர்ந்து வரும் ஒருமித்த கருத்தை இந்த புத்தகங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. உணவுத் தேர்வுகள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றிய நுண்ணறிவுகளை இரண்டு புத்தகங்களும் வழங்குகின்றன. நவீன சுகாதார சவால்களை சுட்டிக் காட்டி நமது பாரம்பரியம் கற்றுக்கொடுத்த பாதையில் நடக்க வேண்டும் என்று வாசகர்களை அவை ஊக்குவிக்கின்றன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications